நம்ம கதாநாயகர் ஒரு திருடர் - யெஸ் ! கொள்ளை அடிப்பதே இவரது தொழில் - ஒரு முறை அமெரிக்க பள்ளிக்கூடத்தின் உடற்பயிற்சி - கட்டடத்துக்கு மேலே இருக்கும் மேற்கூரையிலே கட்டிடத்தின் உள்ளே நுழைய சரியான வழி கிடைக்குமா என்று பார்த்து கூரை மேலே நடந்துகொண்டு இருக்கிறார். இப்போது என்ன நடந்தது என்றால் அந்த கூரையில் ஒரு கண்ணாடி இடத்தை ஒடுகளின் நடுவே டெகரேஷனாக வைத்து ஒடுகளுக்கு பூசப்பட்ட அதே கருப்பு பெயிண்ட் பூசி வைத்துள்ளார்கள். நம்ம ஆளு தெரியாமல் கால் வைக்க அந்த கண்ணாடி ஓடு உடைந்து கட்டிடத்தின் உள்ளே நமது ஹீரோ விழுந்து கை காலை உடைத்துக்கொண்டு படுத்த படுக்கையாக ஆகிறார். இப்போது பள்ளிக்கூடம் இப்படி ஒரு கண்ணாடி ஓடு கூரை மீது வைத்து இருந்ததுக்காக கேஸ போட்டு திருட வந்தவருக்கு போதுமான நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று விபத்துக்கான விளைவுகள் மெடிக்கல் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது பள்ளிக்கூட நிர்வாகத்தினால் எதுவுமே பண்ண முடியாமல் தீர்ப்பு திருடனின் பக்கம் விழுந்து திருட வந்தவனுக்கு பள்ளிக்கூடம் நஷ்ட ஈடு கொடுத்தது. இங்கே பிரச்சனை என்னவென்றால் சரியாக பேச தெரிந்த ஒரு வக்கீல் கூரையில் இருந்து கட்டிடத்தின் உள்ளே தவறி விழுந்த திருடனின் பக்கம் பேசி இலட்சக்கணக்கில் நஷ்ட ஈடு வாங்கி சந்தோஷமாக வாழ்ந்து இருக்கிறார். நீதி இப்படி எல்லாம் விலைபோனால் மக்களுக்கு எப்படி சட்டத்தின் மேலே நம்பிக்கை இருக்கும் என்று தெரியவில்லை. உலகம் இப்படியும் நகர்ந்துகொண்டு இருக்கிறது. கொடியவருக்கு சாதகமான வகையில் எல்லாமே நடந்தால் நல்லவர்களுடைய வாழ்க்கைக்கு பாதுகாப்பு என்ன ? வாழ்க்கையில் சுயநலமிக்க கூட்டம் நல்லவர்களை படாத பாடு படுத்துவதை எப்போதும் யாருமே அனுமதிக்க கூடாது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லா கேட்டவர்களும் ராஜாக்களாக மாறினால் அவர்களுக்காக நீதி வளைந்து கொடுத்தால் சராசரி மக்களுக்கு எப்படித்தான் சமூக நீதி கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் நீதியே எப்படி கிடைக்கும். - சட்டம் ஒரு இருட்டறை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக