சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.
ஆனால் ரீசார்ஜ் செய்த பின்னாலும் அந்த நெட்வொர்க்கில் இருந்து போதுமான இணையதள சப்போர்ட் இல்லை. அந்த இணையதள அமைப்பு சிக்னல் கொஞ்சம் கூட கிடைக்கவும் இல்லை.
ஆனால் அந்த இணையதளத்துக்காகதான் மாத சந்தா செலுத்திவிட்டோம் என்று பார்த்தால் அவ்வளவு பெரிய தொகையை நாம் ரீசார்ஜ் செய்து இருக்கிறோம்.
இருந்தாலும் அந்த நெட்வொர்க் நிறுவனம் நம்மை மதிக்கிறதா ? இதற்கு காரணம் என்னவென்றால் அந்த நெட்வொர்க் நிறுவனம் அதிகப்படியான மக்கள் தகவலை எடுத்துக்கொண்டு வைத்திருப்பதால் அதிகப்படியான அளவுக்கு பணத்தை சம்பாதித்து வைத்திருப்பதால் அந்த நிறுவனத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது.
சாமானிய மக்களால் அந்த நிறுவனத்தில் குறைகள் இருக்கிறது என்று தெரிந்தாலும், என்னதான் அந்த நிறுவனத்துக்கும்க்கு நிறுவனம் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கும் மக்கள் அதிகப்படியான பணத்தை மாதந்திரமாக.கொடுத்தாலும் அந்த பணத்துக்கு இணையான சேவையை அந்த நெட்வொர்க் கொடுக்காமல் போனாலும் மக்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் அந்த நெட்வொர்க் இன்னுமே நன்றாக முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டும்.
இப்படி காசு கொடுத்தாலும் போதுமான சிக்னல் கிடைக்காது. காசு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கணமே உங்களுடைய நெட்வொர்க் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற மாதிரியான கட்டாயமான பகல் கொள்ளையை ஒரு நிறுவனம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கு அரசியல் பின்னணி.காரணமாக அமைகிறது என்றால் யோசித்து மக்கள் தான் கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
இது தான் ஒரு மிக சரியான உதாரணம் - வியாபாரிகள் அரசியலைக் கைக்குள் போட்டுக் கொண்டு பண்ணும் செயல்கள் மக்களை கடைசி வரையில் ஏழைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக