இந்த நாட்களில் மனிதனுடைய எல்லா போராட்டங்களும் நட்சத்திரங்களை கருப்பு கிராவிட்டி விழுங்குவது போல அறிவை அறியாமை உண்மையாக சாப்பிடுகிறது. மக்கள் 1000 பேர் சப்போர்ட் செய்தால் அது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும் விஷயமாக இருந்தாலும் செய்துவிடுவார்கள் ஆனால் 3 பேர் அறிவுப்பூர்வமாக யோசித்தால் அவர்களை ஒதுக்க பார்ப்பார்கள் காரணம் என்னவென்றால் தாங்கள் அறியாமையில் எடுத்த முடிவுதான் அறிவான முடிவு என்று நிரூபிக்க செய்யும் திமிரான காரியங்களுக்கு சப்போர்ட் அறியாமையில் பாதிக்கப்பட்ட ஆட்களிடம் இருந்து கிடைத்துவிடும் அல்லவா ? இதனால் உண்மையாக கஷ்டப்படும் அறிவு சார் மக்கள் கூட இந்த மோசமான சிஸ்டம் காரணமாக சாப்பாடுக்கே கஷ்டப்படும் நிலைக்கு வந்ததும் சிஸ்டம்மை புரிந்துகொண்டு சிஸ்டத்துக்கு அமைப்புகள் அரசியல், பொருளாதாரம் அல்லது சமூக அமைப்பாக இருந்தாலும் பலனடையும் பணக்காரர்கள்தான் கட்டமைத்து பராமரிக்கின்றனர். இவர்கள் ஊடகம், சட்டம், கல்வி போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதால் காசு இல்லாத மக்கள் தப்பான மாற்றங்களை எதிர்க்க முடியும் ஆனால் பணக்காரர்களை ஜெயிக்க முடியாது. ஏழை சாதியில் பெரும்பான்மையினர் மாற்றம் விரும்பினாலும், அதிகாரத்தில் உள்ள சிறுபான்மையினர் அதை தடுக்க முடியும். குழந்தைகள் உட்பட சிறு வயதிலிருந்தே நிலவும் அமைப்பை ஏற்க வேண்டும் எனக் கற்றுக்கொள்கிறார்கள். இது காலப்போக்கில் “நாம் எதையும் மாற்ற முடியாது” என்ற மனநிலையை உருவாக்குகிறது. இந்த விஷயம் ஒரு கருப்பு கிராவிட்டி போன்றது. இந்த விஷயங்களின் ஆபத்தை உணர்ந்தாலும் எதுவுமே பண்ண முடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையில் கஷ்டமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக