ஒருவர் தனது வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்ய நினைக்கும் போது, தவிர்க்க முடியாமல் அவருக்கு ஒரு சிரமம் எழுகிறது. இந்த சிரமத்தின் அலை கற்பனையிலும் செய்துபார்க்க முடியாத அளவுக்கு மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாம் என்னதான் போராடினாலும் இந்த சிரமத்தின் அலையிலிருந்து நம்மால் தப்பிச் செல்ல இயலாது என்பது போல நம்முடைய சுற்றுச்சூழலை சுற்றியே ஒரு மிகப்பெரிய இரும்புச் சுவர் போடப்பட்ட ஒரு நிலையை நாம் அடைந்து விடுகிறோம்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் நம்முடைய மனது எப்படி யோசித்தாலும் அந்த இடத்திலிருந்து வெளியே வர இயலாது வாழ்க்கையின் மிகக் கடினமான காலத்துக்குள் நம்முடைய மனது சென்று விடும் இந்த கடினமான ஆழம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் மிகப் பெரிய இறக்கமாக கருதப்படுகிறது.
இது போன்ற நேரங்களில் பணம், பொருள் தொடர்புகள் என்று அனைத்து விஷயங்களும் நம்முடைய கைகளையும் மீறி அறுந்து போய் இருக்கும். நாமும் எவ்வளவோ முயற்சி செய்து இருந்தாலும் நம்மால் முந்தைய காலத்தில் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை திரும்பவும் இன்னொருமுறை வாழ இயலாது.
இப்படிப்பட்ட நேரங்களில்தான் நாம் நம்முடைய கவனத்தை இழக்காமல் மிக கடினமான செயல்களை மேற்கொள்ள வேண்டும்.ஒரு புனிதமான கருத்தை நாம் கற்றுக்கொள்வோம்: நமது நன்மைகளை நாமே உருவாக்க வேண்டும்.
இந்த உலகத்தில் வானம் தான் எல்லை என்று முடிவு செய்துவிட்ட பின்னால் உயரத்தை கண்டு பயந்தால் எந்த வகையிலும் நன்மை கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக