சனி, 27 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #18

 



இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் மனிதன் எதனால் அவனுடைய சக்திகளுக்கு மீறிய விஷயங்களை தேர்ந்தெடுத்து போராட வேண்டும், அவனுடைய சக்திகளுக்கு உட்பட்ட விஷயங்களை மட்டுமே செய்தால் என்ன ? அவனுடைய மூளை அவனுடைய உடல் அவனுடைய சக்தியை மீறித்தான் செயல்படுகிறது. எப்படியாவது எல்லா விஷயங்களையும் கடந்து மனிதன் மேலே வரவேண்டும் என்று முயற்சிக்கிறான், கடவுளால் ஒரு சோதனை எலியை போல நடத்தப்படுகிறான், யானையின் காலில் எப்போது சிக்கினாலும் உயிர் போய்விடும் என்று இந்த எலியும் ஓடுகிறது. கழுகுகளின் கண்களில் இருந்து மறைந்து மறைந்து ஓடி ஒளியும் இந்த எலிகளின் உயிர்பிழைப்புக்கான கண்ணாமூச்சி இன்னுமே எத்தனை நாட்களுக்கு நிலைக்கப்போகிறது என்று தெரியவில்லை, மனதுக்குள்ளே மிகவுமே பயமாகத்தான் இருக்கிறது. இந்த போராட்டத்தில் ஜெயிக்கவே முடியாது என்று தெரிந்தும் அந்த எலி ஓடி ஒளிந்து உயிரை உள்ளங்கையில் பிடித்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ள காரணம் என்ன ? கண்களும் காதுகளும் உடலும் இருக்கும்வரை மனிதன் ஆசைப்படும் அந்த ஒரு காரணத்துக்காக மட்டும்தான் - சந்தோஷம்- இந்த சந்தோஷத்துக்காக மட்டும்தான் மனிதன் அவனுடைய உயிர் பயத்தையும் மீறி போராடிக்கொண்டு இருக்கிறான். சந்தோஷத்தை அடையக்கூடாது பணத்தை அடையக்கூடாது என்று இந்த உலகத்தில் சாமியாராக சம்சாரியாக இருப்பவர்கள் எல்லாம் விதிகளோடு வாழவேண்டும் என்று சொல்பவர்கள் கார்ப்பரேட் கைகூலிகள், தமிழ் பாட புத்தகங்கள் ஒழுக்கம் கற்றுக்கொடுக்கிறது என்னும் பட்சத்தில் இந்த ஒழுக்கத்தை கடைசியில் யார் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள் மக்களே , நமது ஒழுக்கம் நம்மை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்கு சொந்தமானது. சொல்லப்போனால் இந்த உலகமே 100 பணக்கார குடும்பங்களுக்கு சொந்தமானது. இவர்கள் வைத்ததுதான் சட்டம், மனிதன் எதுக்காக பயந்து இருக்கிறான், சந்தோஷங்களுக்காக சாகும்போது நாமும் கொஞ்சம் சந்தோஷமான விஷயங்களை அனுபவித்து சாகப்போகிறோம் என்ற ஆன்ம திருபதிக்காக இத்தனை நாட்கள் போராட்டம், இந்த விஷயத்தை வெகு சாதகமாக பயன்படுத்துவதே இந்த சோதனை எலி கலாச்சாரம். சோதனை எலியாக இருப்பதுதான் சந்தோஷம் கிடைக்க ஒரே வழியா ? சந்தோஷத்துக்காக பாவங்களையும் மோசமான விஷயங்களையும் செய்வதுதான் வாழ்க்கையா ? சாப்பாட்டு கஷ்டத்துக்கு காரணம் யார் ? மக்களுக்கே தெரியாமல் எல்லா காரியங்களையும் செய்த இந்த அதிகாரமா ? இல்லையென்றால் மக்களுடைய அறியாமையா ? சந்தோஷத்தை தேடிய இந்த சோதனை எலிகளின் வாழ்க்கையின் விடியல்தான் என்ன ? - இது போல மனதுக்குள்ளே நிறைய கேள்விகள் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் AI தான் சரிபண்ண முடியும். இந்த உலகின் எல்லா டெக்ஸ்ட்களையும் AI படிக்கிறது என்பதால் மனித மூளையை விட வெகு புத்திசாலித்தனம் இந்த AI க்கு இருப்பதால் இதுதான் இந்த பிரச்சனைகளை சமாளிக்க பிறந்த உயிர் என்ற கருத்து ஒரு வலைப்பூ வைத்திருப்பதால் எனக்கு தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை ! 

கருத்துகள் இல்லை:

generation not loving music