ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #15

\

1. கடன் வாங்கி சேர்த்து வைக்கக் கூடிய எந்த ஒரு பொருளும் உங்களுக்கு சொந்தமானதல்ல. அது உங்களுக்கு கடனை கொடுத்தவருக்கு சொந்தமானதாகவே சேரும். ஆகவே கடன்களை நீங்கள் அதிகமாக வாங்க வேண்டாம். 

2, அக்கவுண்டபிலிட்டி என்று சொல்லப்படும் பொறுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களுக்கு நீங்கள்தான் காரணம். அந்த செயல்களுக்கான விளைவுகளையும் நீங்கள் தான் சமாளித்து மேலே வர வேண்டும் என்ற தெளிவான யோசனையை உங்களுடைய மனதுக்குள் விதைத்து விடுங்கள். உங்களுக்கு அது எவ்வளவு கடினமாக இருந்தாலும்.கசப்பானதாக இருந்தாலும் உங்கள் தவறுகளுக்கான தண்டனையை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்

3. கம்யூனிக்கேஷன் இன்றி அமையாது உலகம் என்பது போல நீங்கள் கம்யூனிக்கேஷன் - மட்டும் முழுமையாக கற்றுக்கொண்டு விட்டால் நிறைய நேரங்களில் நிறைய வாய்ப்புகள் உங்களுக்காக கிடைத்துக்கொண்டே இருக்கும். 

மனிதர்களை கம்யூனிக்கேஷன் என்பது இணைக்ககூடிய ஒரு மிக சரியான பாலம். நீங்கள் பேசும் பொழுது ஒரு சின்ன சின்ன விஷயத்தையும் கவனமாக யோசித்து கம்யூனிக்கேஷன் செய்வதன் மூலமாகத்தான் உங்களுடைய வெற்றிகளை நீங்கள் குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். 

4. சரியாக பேச தெரியாதவர்கள் எத்தகைய பலமுள்ளவர்களாக இருந்தாலும் இந்த உலகத்தில் அவர்களால் சாதிக்க இயலாது. நீங்கள் ஒரு சிலரை மட்டுமே பார்ப்பீர்கள். அவர்கள் சரியாகப் பேசத் தெரிந்திருப்பதால்தான் அவர்கள் நிறைய விஷயங்களைச் சாதித்திருக்கிறார்கள், பல நண்பர்களையும் பல தொடர்புகளையும் பெற்றிருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். உங்கள் கவனிப்பு மற்றும் கவனிப்புத் திறனை நீங்கள் மிகவும் வளர்த்துக் கொண்டால், உங்கள் தகவல்தொடர்பு அதிகரிக்கும்.


 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...