1. இங்கே யாருமே உங்களை காப்பாற்ற மாட்டார்கள்.
2. சுயநலமிக்கவர்களுக்கு தங்கள் நலனை பாதுகாக்க நிறைய தேடல் இருப்பதால் அவர்களுடைய அறிவு அதிகமாக இருக்கும்.
3. மற்றவர்களுக்கு இலாபம் இருக்கும் உதவிகளை செய்ய வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட அப்பாவி நான் மனநிலையில் ஒரு நொடி கூட இருக்க கூடாது.
5. குற்றச்சாட்டுகளை விட செயல்கள் அதிகமான பலன் அளிக்கும்.
6. பண தாளை விட தங்கத்தை விட நிலங்களை நாடுகளை விட நேரம் மதிப்பானது என்று கடன் வாங்கி திரும்ப செலுத்தும் மக்களுக்கு தெரியும்.
7. குப்பைகளை ஏற்றி சென்றால் மிகச்சிறந்த வணிக கப்பல் கூட நஷ்டத்தில்தான் கவிழும்.
8. பிறந்த குழந்தைக்கு வீரம் விவேகம் உறுதி இருக்காது. இவைகளை நாம் ஒரு பெரிய கட்டிடம் போல கட்டி மனதில் வைக்க வேண்டும்.
9. தன்னொழுக்கம் என்பது குறைவான நேரம் மட்டுமே குறைவான அளவில் நிலைத்து இருக்கும் ஒரு சொத்து.
10. உங்கள் எண்ணங்கள் நீங்கள் அல்ல. நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மீறி செயல்பட வேண்டும்.
11. உங்கள் தோல்விகளை ரசிக்கும் கூட்டம் எப்போதும் உங்களை புறம் பேசும் , கனம் பார்க்கும்.
12. இண்டரெஸ்ட்டிங்காக பேசுங்கள். சலிப்பு கொடுக்கும் வகையில் பேசுவதை தவிர்த்துவிடுங்கள்.
13. கெஞ்சி கேட்பவர்களுக்கு மரியாதை என்பதே இருக்காது.
14. உண்மைகளை சொன்னால் உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள். பொய்களை சொன்னால் உங்களுக்கே உங்களை பிடிக்காமல் போய்விடும்.
15. எப்போதுமே எல்லோருக்குமே நேரம் கொடுத்தால் உங்களுடைய மதிப்பு குறைந்துவிடும்.
16. உங்களுடைய ஆசைகளையும் கனவுகளையும் எண்ணங்களையும் செயலில் காட்டாமல் பேசிக்கொண்டு மட்டுமே இருப்பது போலியான பைசா பிரயோஜனமற்ற பொழுதுபோக்கு.
17. ஜெயித்துக்கொண்டு இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பது இல்லை. வெற்றி சலிப்பை கொடுக்கும் சந்தோஷம் கொடுக்காது.
18. பயந்தவர்கள்தான் அதிகமாக யோசிப்பார்கள், துணிந்தவர்கள் தப்பான முடிவுகளிலும் தப்பான செயலிலும் கூட இலாபம் பார்ப்பார்கள்.
19. உங்கள் திறமைகளை உங்களால் பணமாக மாற்ற முடியாது என்றால் உங்களால் எதுவுமே சாதிக்க முடியாது.
20. வேலை இருக்கும்போது தூங்குவது கல்லறை தூக்கம் போல ஆபத்தானது.
21. உங்களின் திசையை சம்பந்தமே இல்லாத ஆட்களிடம் கேட்க கூடாது. விவரமான ஆட்களிடம் கேட்டாலும் நீங்கள்தான் முடிவை எடுக்க வேண்டும்.
22. வாழ்க்கை என்பது கட்டமைக்கப்பட வேண்டிய சொந்த வீடு, கடனோடு வாழ்க்கையை வாழ்வது வாடகைக்கு இருப்பதற்கு சமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக