ஜான் விக் படங்களுக்குப் பிறகு நாம் அதிக ஸ்டைலிஷ் படங்களையும், ஆக்ஷன் நிறைந்த படங்களையும் பார்க்க முடிகிறது. உலகளாவிய சினிமா சந்தையில் கதை ப்ரொடக்ஷன் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான படங்களை வெளியிட விரும்பினால் கதையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு திரைப்படம் சராசரி கதையை விட நன்கு வடிவமைக்கப்பட்ட கதையுடன் சொல்லப்பட வேண்டும் என்பதால், இந்த வகையான படங்களில் தயாரிப்பு நிறுவனத்தினர் மிகவும் கவனமாக எழுதப்பட்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறலாம்.
"நோபடி" திரைப்படம் அத்தகைய படங்களின் வெற்றிக்கு ஒரு சான்றாகும். இந்த படத்தில், நமது கதாநாயகர் ஒரு காலத்தில் அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஒரு ரகசிய போர் வீரராக இருந்தார். ஆனால் இப்போது, தற்காலத்தில், அமைதியான குடும்பஸ்தர் போல் வாழும் நமது கதாநாயகர் ஒரு கட்டத்தில், குடும்பம் ஒரு கொள்ளை சம்பவத்துக்கு பாதிக்கப்படும்போது, கொள்ளைக்கு காரணமானவர்களை தேடுகிறான்.
அந்த நேரத்தில், அவன் பேருந்தில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற ஒரு மோசமான கும்பலைத் தாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான், அந்தக் கும்பலின் பின்னால் கொடிய கிரிமினல்களின் ஒரு பெரிய வலையமைப்பு அவனுக்கு எதிராகச் செயல்படும்போது, அவன் தன் உயிரைக் காப்பாற்றப் போராடுவதை சுற்றியே கதை நகர்கிறது.
இந்த படத்தில் சண்டை காட்சிகள் மிகவும் பிரமாதமாக அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த படம் ஆக்ஷன் படங்களின் ரசனையாளர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மேலும் கிளாசிக்கான துப்பாக்கி சண்டை காட்சிகளை இந்தப் படத்தில் மிகுவாக மேம்படுத்தி படத்தின் ஆக்ஷன் ஜேனரை ஒரு மாஸ் லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக