சனி, 27 செப்டம்பர், 2025

MUSIC TALKS - ORU VETKAM VARUDHE VARUDHE - MAZHAI INDRU VARUMA VARUMAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா ? முடிவா ?
இனி எந்தன் உயிரும் உனதா ?
புது இன்பம் தாலாட்டுதே ?

போக சொல்லி 
கால்கள் தள்ளும்
நிற்க சொல்லி 
நெஞ்சம் கிள்ளும்

இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று 
வருமா வருமா
குளிர் கொஞ்சம் 
தருமா தருமா
கனவென்னை 
களவாடுதே

இது என்ன ?
முதலா முடிவா ?
இனி எந்தன் உயிரும் உனதா ?
புது இன்பம் தாலாட்டுதே ?

கேட்டு வாங்கி 
கொள்ளும் துன்பம்
கூறு போட்டு 
கொல்லும் இன்பம்

பற பற பறவெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே
நானே தோற்கிறேன்

உன் மடியினில்
என் தலையணை
இருந்தால் உறங்குவேன்

ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே
நெஞ்சம் துடிக்கிறதே

ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் 
காவியம்
அனைவரும் கேட்கும் 
நாள் வரும்

காற்றில் கலந்து நீ
என் முகத்திலே 
ஏனோ மோதினாய்
பூ மரங்களில் 
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்

தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே

வெயிலினில் ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே
நனைந்திடுவோம் நாள் தோறுமே




கருத்துகள் இல்லை:

generation not loving music