வியாழன், 4 செப்டம்பர், 2025

GENERAL TALKS - EPISODE 2 - கமேர்சியல் படம்னா சும்மாவா ? #2

 



சமீபத்தில், பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு நேர்காணலில் கூறிய ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் மக்களையும் சேர்த்து, இறுதி பொழுதுபோக்கு மற்றும் வெகுஜன பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு ஒரு படத்தை உருவாக்குவதன் பயன் என்னவென்றால், அவர்கள் ஒரு சிறந்த நடிகரின் ரசனை மற்றும் மத நம்பிக்கையை கருத்தில் கொண்டு ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். மாறாக, அவர்கள் நிறைய பேரை ஈர்க்க விரும்புகிறார்கள். நிறைய பேரின் டிக்கெட்டுகள் மூலம் வசூல் சாதனை படைக்க, அவர்கள் ஒரு நல்ல கதையை மக்களுக்குத் தெரிவிக்க சினிமாவை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதில்லை. மக்களின் இந்தப் போக்கு மாறிவிட்டதால், உண்மையான சினிமா இறந்துவிட்டது என்று நாம் கருத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அவர் ஒரு சோகமான விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். இன்றைக்கு மலையாளத்தைச் சேர்ந்த ஒரு படத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். நெறைய வகையில் அந்த படத்துக்காக மெனக்கெடுகிறார்கள் ஒரு காட்சி எந்த வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? ஒரு வசனம் எந்த வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், எந்த வகையான நடை, உடை அலங்காரங்கள் போன்றவை நடிப்பில் வெளிப்பட வேண்டும் என்று ஒரு சின்ன சின்ன விஷயத்துக்கும் மலையாளம் சார்ந்த திரைப்படங்கள் மிக அதிகமாக உழைப்பை கொடுத்து இந்த விஷயங்களை சாதித்து இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. ஆனால் நம்முடைய தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் நிறைய படங்கள் இதுபோலவே நிறைய லோகேஷன்ங்கள் நிறைய நடிப்புத்திறன் கொடுத்து இருந்தாலும் இந்த படங்கள் அதிகமான வசூலைப் பெறுவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நடிகருடைய படம் எந்த வகையான குப்பையாக இருந்தாலும் விசுவாசமான ரசிகர்கள் வகையில் காசு குவிக்கும் விஷயமாக இருக்கும். அரசர்களுக்காக அந்த படம்.வெகுவாக ஓடுகிறது.வசூல் சாதனையை குறிக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிலைமை தமிழ் சினிமாவுக்கு இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. 

1 கருத்து:

லியோ தாஸ் சொன்னது…

கரெக்டு

generation not loving music