ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #10

 



⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻⿻

இங்கே அடிப்படையில் நாம் எல்லோருமே ஒரே குடும்பம் என்று தேசப்பற்று மிக்க வார்த்தைகளை சொன்னாலும் அடிப்படையில் சாதி, மத, இன பிரிவுகளை வைத்து அடக்கி ஆட்சி பண்ணுவது யாரென பாருங்கள் ? கண்டிப்பாக வியாபாரிகளும் அரசியல் ஆட்களுமாகத்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த "நந்தன்" என்ற திரைப்படத்தில் இட ஒதுக்கீடு சட்டம் காரணமாக மேல்நிலை சாதியில் இருக்கும் தலைவருக்கு பதிலாக பட்டியல் இனத்தில் இருந்து ஒருவர் ஊரக கிராம பஞ்சாயத்து ப்ரேசிடென்ட்டாக மாறுவார் ஆனால் அவர் அவருடைய சக்திகளை அதிகாரத்தினை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மேல்நிலை ஆட்கள் ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களிலும் அவரை தரக்குறைவாக அவமானமாக நடத்துவார்கள். பின்னணியில் இருந்து நிறைய தப்பான விஷயங்களை பண்ணி பார்ப்பார்கள் இப்போது உங்கள் கண்களுக்கு அரசியல்வாதிகள் வில்லன்களாக தெரியலாம் ஆனால் அடிப்படையில் பாதிக்கப்பட்டது தனித்து விடப்பட்ட பட்டியல் மக்கள்தானே ? இந்த காலத்தில் கூட மேல்நிலை ஆட்கள் முன்னதாக செருப்பு போட்டு நடப்பது கூட தவறு என்று சொல்லும் கிராமங்களும் பட்டியல் இனத்தில் இருந்து ஒரு இளைஞர் முன்னேறினால் அவருடைய வளர்ச்சியில் பொறாமை அடைந்து அவருக்கு சேதாரம் உண்டுபண்ண நினைக்கும் மனதுக்குள் விஷம் நிறைந்த ஆட்களும் இருக்கதான் செய்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதே இல்லையே. இந்த விஷயங்களுக்கு எல்லாம் கண்டிப்பாக நன்றாக ஆராய்ந்து விரிவான தீர்வை கொடுபபதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்பதை வலைப்பூவில் தெரிவித்துககொள்கிறோம். கவனமாக இருங்கள் மக்களே யார் தேள் என்று தெரிந்துகொள்ளுங்கள், தேள்கள் திருந்தவேண்டும் என்று கற்பனை செய்ய வேண்டாம் விஷம் இருக்கும் மக்களுக்கு எல்லாம் இந்த விஷயம் மூளைக்கு என்ன ? கால் பெருவிரல் பக்கம் கூட ஏறாது !!










கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...