ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #11


⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺⁺‧₊˚ ཐི⋆♪⋆ཋྀ ˚₊‧⁺

பொதுவாக கம்பெரிஸன் பண்ண கூடாது என்றும், நல்லபடியாக வாழ வேண்டுமென்றால் இன்னொருவருடைய வாழ்க்கையோடு கம்பெரிஸன் பண்ண நினைக்க கூடாது என்றும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றும் வசனங்களை விட ஒரு 15 பேர் கொண்ட குழு ரூம் எடுத்து ஹோட்டல் AC காற்றில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நம்மால் நினைக்க முடிகிறது அல்லவா ? அடிப்படையில் இப்போது எல்லாம் சமூக ஊடகங்களின் வாயிலாக ஒரு மனிதன் அவருடைய குடும்பத்துடன் நண்பர்களுடன் எப்படி வாழ்கிறான் என்ற எல்லா தகவல்களையும் பெறும்போது நாமும் அந்த மனிதருக்கு இணையாக வாழவேண்டும் என்று ஒரு கண்ணுக்கு தெரியாத போட்டி உருவாகிறது. மனிதன் வெகுவாக கஷ்டப்படுகிறான். அவனுக்கு தேவையான விஷயத்துக்காகதான் கஷ்டப்படுகிறானா என்றால் அதுதான் கேள்வியே ? மற்றவர்கள் அந்த விஷயத்தை வைத்து சந்தோஷமாக இருப்பதால் தனக்கும் அந்த விஷயம் கிடைத்தால் சந்தோஷம் கிடைத்துவிடும் என்று ஒரு தவறான கண்ணோட்டம் கொண்டு வைத்துவிடுகிறான். உதாரணத்துக்கு விளம்பரங்களை பார்த்து இன்ஸ்டாகிராம் விமர்சனங்களை பார்த்து ஒரு உணவு சாப்பாடு மற்றும் பலகாரத்தை ஆர்டர் செய்கிறான் ஆனால் இந்த வகையில் அவனுக்கு சாப்பாடு துளியும் பிடிக்கவில்லை என்றால் அந்த பலகாரத்தின் சுவையும் வெகு மோசமாக இருக்கிறது என்றால் அவன் ஏமாற்றம் அடைகிறான். எல்லோருக்குமே அவர்களுக்கு பிடித்த விஷயம் கிடைத்தால்தான் சந்தோஷமாக இருப்பார்கள். ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல நொறுக்கு தீனி கிடைத்தாலும் சந்தோஷம்தான் ஆனால் ஒரு போட்டோகிராபருக்கு ஒரு நல்ல வியூ / மோமென்ட் கிடைத்தால்தான் அதையும் கிளிக் பண்ணினால்தான் சந்தோஷம், ஒரு பிலிம் ரசிகருக்கு ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தால்தான் சந்தோஷம். இவ்வாறாக சந்தோஷம் பலவகையில் இருக்கிறது ஆனால் வெற்றியடையத்தான் நமக்கு தேவை என்னவென்று தெரிந்து செயல்படும் பக்குவம் தேவைப்படுகிறது. 


 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...