ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

வாழ்க்கை கடினமானது அதனால்தான் கஷ்டப்பட வேண்டும் !


இந்த உலகில், ஒருவர் விரும்பிய பொருளை மிக எளிதாக அடைந்தால், அந்த விஷயத்தில் அவருக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்காது. எல்லா வகையிலும் நாம் கட்டற்ற அளவில் மகிழ்ச்சியை நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு வர நினைக்கத்தான் செய்கிறோம். ஆனால் நாம் நினைப்பது போல இந்த விஷயம் அவ்வளவு சுலபமானது அல்ல. உங்களுக்கு தேவையான செல்களையும், பொருட்களையும் கடந்த காலத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டும்.  இதை அடைய, வாழ்க்கையில் எந்தப் பணியும் எளிதானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாப் பணிகளும் மிக மிகக் கடினமானவை. ஆனால், இந்தப் பணிகளைச் சரியாகவும் கவனமாகவும் முடித்தால், இந்தப் பணிகளின் பலன்களைப் பெறுவீர்கள். இதன் மூலம், வாழ்க்கை உங்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நமது மனித இனம் உயிரியலின் அனைத்து அம்சங்களிலும் இவ்வளவு முன்னேறியிருப்பதற்கான காரணம், நாம் மற்றவர்களை விட அதிகமாக துன்பப்பட்டுள்ளோம் என்பதை நாம் புரிந்துகொள்வதுதான். நமக்கென்று ஒரு மொழியை உருவாக்கினோம். நமக்கு தேவையான விஷயங்களுக்காக சரியான கம்யூனிகேஷனை நாம் ஏற்படுத்தினோம்.இந்த தகவல்கள் இந்த இடத்திற்கு சரியாக சென்றடைய வேண்டும். இந்த மனிதர்கள் இந்த இடத்தில் சரியாக வேலை செய்ய வேண்டுமென்று சரியான ஒரு அமைப்பை நாம் உருவாக்கினோம். இந்த விஷயம் தான் மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து தனித்த ஒரு உயிரினமாக மாற்றியது. இன்றைக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனிதனுக்கு இப்படி எல்லாம் கிடைத்திருக்கிறது என்றால்.இதுதான் சரியான விஷயமாக அமைந்து இருக்கிறது. இந்தப் பதிவின் மூலம் சுருக்கமாகக் கூறக்கூடிய விஷயம் என்னவென்றால், நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், பணம் வாழ்க்கையின் பல அம்சங்களை எளிதாக்கினாலும், பணத்தால் கூட வாழ்க்கையின் அடிப்படை இயல்பை மாற்ற முடியாது. கவனமாக செயல்படுங்கள் மக்களே. !!!

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...