திங்கள், 4 ஆகஸ்ட், 2025

NEVER STOP ARTICLE WRITING - TAMIL [TAMILNSA] - EPISODE -#0005


நீயே என் பிரபஞ்சம். உன்னை முதலில் வைக்கவே நான் விரும்புகிறேன். நீ தான் என் பிரபஞ்சம், உன் இருப்பு என் உள்ளத்தை குளிரச்செய்கிறது. இரவில், நான் படுத்தபடி மேலே உன்னை நினைக்கிறேன். காலை வரும்போது, உன்னைக் கண்களால் தேடுகிறேன். உன் இலட்சியங்கள் எட்ட முடியாத சொர்க்கம் போல  இருந்தாலும் உன் கண்களில் ஒரு முடிவில்லா ஒளி தெரிகிறது ஒவ்வொரு இரவும் நான் உன்னிடம் சந்திக்க கணவுக்குள்ளே பறக்கிறேன், அது ஒரு கனவென்பதை மறந்து. நீ என் வாழ்க்கையின் மையம். உன்னை முன்னிலைப்படுத்தவே என் விருப்பம். நான் உன் நட்சத்திர உலகத்தில் இருக்கக்கூடாது என்று நினைத்தேன், ஆனால் நீ தூரத்திலிருந்து என்னை உயர்த்தினாய். அவர்கள் சொன்னார்கள் நாம் ஒன்றாக இருக்க முடியாது, ஏனென்றால் நாம் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள். - ரேன்ட்மாக ஒரு K-POP பாடலின் பொருள் வினாவியபொது தமிழாக்கம் கிடைத்தது. இந்த மாதிரியான பாடல்கள் சமூகத்தின் ரசனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த மாதிரியான பாடல்கள் மூலமாக சமூகத்தில் நிரந்தரமான மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். தெளிவாக அந்த திட்டத்தை சமூகத்தில் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உருவாகும். ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து இந்த பதிவு சார்பாக சொல்லப்படக்கூடிய கருத்து என்னவென்றால் இசை கலைஞர்  ஒருவருடைய பாடல் பாடல்வரிகளை சிறந்த முறையில் எந்த வகையில் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் அந்த பாடல்களால் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதால் அந்த பாடல்களை விட்டுவிட்டு.இந்த காலத்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் நிறைய விஷயங்களை அறிவியல்பூர்வமாக கற்றுக்கொள்வதை இந்த இந்த காலத்தில் ஆர்வமான விஷயமாக செய்ய வேண்டும். மற்றபடி BTS இன்றோ பிளாக் பிங்க் என்றோ கலைஞர்களின் பின்னால் சென்றால் கலைஞர்கள் உங்களை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள்.நிஜமான விஷயத்துக்காக நீங்கள் எதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையை கற்றுக்கொள்ளுங்கள். அந்த விஷயங்கள் உங்களுக்கு எப்பொழுதுமே கை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...