செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - கருத்துள்ள படங்களை சப்போர்ட் பண்ணுங்கள்.



சினிமா இப்போது முன்பு போல இல்லை. இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது. இந்த காலத்தில் பிறக்கும்போதே ஐந்து பேரை காலி பண்ணிவிட்டு ஆறாவது என்று பிறந்த குழந்தையாக உனக்கு பெரு ஆறுசாமி என்று பெயரிட்டேன் - என்பதைப் போன்ற சம்பந்தமே இல்லாத வசனங்கள் எல்லாம் சொல்லி இன்றைய காலகட்ட பார்வையாளர்களுக்கு எல்லா கதைகளையும் கொடுக்க முடியாது. 

வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் வெளிநாடுகளில் தயார் செய்யப்படக்கூடிய அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களுக்கான விஷுவல் எபெக்ட்ஸ் சம்மந்தப்பட்ட வேலைகள் நம்ம ஊரு சென்னை பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது மொழியில் மிக சிறப்பானதாக அவெஞ்சர்ஸ் லெவல் க்கு ஒரு படம் வெளி வந்ததா ? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. 

பிரிவினை பார்த்து பார்த்து இங்கே நாம் ஒருவரையொருவர் பிரிந்துவிட்டோம். ஏன் ஒன்றாக வந்து ஒன்றாக வேலை செய்யக்கூடாது? - காரணம், சொல்லப்படாத வெறுப்பு. இந்தக் காலத்திலும் சாதி, மதம் போன்ற விஷயங்களையும் அதனால் உருவாகும் பிரிவுகளையும் உயர்த்தி காட்டும் கதைகள் வருகின்றன. அந்தக் கதைகள் அனைத்தையும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆதரித்து அவற்றை வெற்றிப்படமாக்குகிறோம். ஆனால், யாராவது தெளிவான கதைகள் சமூக அக்கறையோடு மற்றும் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை நமக்குக் கொடுத்தால், அந்தப் படைப்பைத் திரையில் சென்று பார்க்கக்கூட நாம் தயங்குகிறோம்.

சாதி வேண்டாம் மதம் வேண்டாம் என்று சொல்லும் இந்த சரியான விஷயங்கள் நம் பார்வையாளர்களுக்கு உடனடியாக சென்றடைய வேண்டும், இல்லையெனில் அவர்கள் ஒரு பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும். நம் சாதிகள் மற்றும் மதங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நம் குறைகளை மறைக்க முடியும். ஆனால் எதிர்காலத்தில், நாம் அதிகம் பயந்து மறைக்க செய்த குறைகளை நம் சந்ததியினர் கொண்டிருப்பார்கள். எனவே, மனிதனாக பிறந்த நாம் - பகுத்தறிவு என்ற ஒரு விஷயத்தைப் பின்பற்றி காட்ட வேண்டும்.


 

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...