இது இந்தியாவின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றான ₹30,000 கோடி முத்திரை காகித மோசடியை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான ஹிந்தி தொடராகும். இது பத்திரிகையாளர் சஞ்சய் சிங்கின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில், கர்நாடகாவைச் சேர்ந்த பழம் விற்பவரான அப்துல் கரீம் தெல்கி, தனது புத்திசாலித்தனமும் லஞ்சமும் மூலம் அரசியல் தலைவர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கி, முறைகேடுகளைச் செய்த விதத்தை விவரிக்கிறது.
முந்தைய தொடர் போலவே நல்ல வரவேற்போடு ஒளிபரப்பாகும் இந்த தொடர், மக்களுடைய பேராசை நிறைவேறவும் மற்றும் வாய்ப்புகள் போலியான விஷயங்களால் கிடைத்து தவறான ஆட்களை சந்திக்கும் போது ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்ற முடியும் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான கதை.
இந்த நெடுந்தொடர் - வெகுவான வரவேற்பை பேற சிறப்பான மேக்கிங் இந்த தொடருக்கு கொடுத்து இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம். விசுவல் ஆஸ்பெக்டில் இந்த தொடர் அந்த காலகட்டத்தை கொண்டு கதையை சொல்ல தயங்கவே இல்லை என்பதே ஸ்பெஷல்லான விஷயம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக