சமீபத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக ஒரு விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்ப இந்த காலத்தில் தமிழ் புத்தகங்களை வாசகர்கள் ஆங்கில புத்தகங்களுக்கு நிகராக ஒரு விஷயமாக கம்பேரிஸன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.
உண்மையில் தமிழில் எழுதுவதற்கு.எழுத்தாளர்கள் குறைவாக இருப்பதாலும் ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்னும் பட்சத்தில் நிறைய பேரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இன்றைய சூழல் இருப்பதாகவும் மேலும் ஆங்கிலம் சார்ந்த புத்தகங்களை அதிகமாக படிப்பதில் ஒரு சுதந்திரமான விஷயமாக பணக்கார வாழ்க்கை முறையாக இந்த காலத்து தலைமுறை கருதுவதாகவும், இந்த மாதிரியாக விஷயங்கள் நடக்கின்றது என்று நமக்கு தோன்றுகிறது.
உண்மையில் வெளிநாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய விஷயங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விஷயங்களை விடவும் கொஞ்சம் அப்கிரேடாக இருப்பதை நம்மால் மறுக்கவும் முடியாது.
உதாரணத்துக்கு நம்முடைய தமிழ் புத்தகங்கள் பாசிட்டிவிட்டியை ஒரு விஷயமாக சொன்னால்.இதனை விடவும் அடுத்த கட்டமாக சப்கான்ஷியஸ் அளவில் ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள மேனிபெஸ்டேஷன் என்ற ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்று ஒரு மேம்பட்ட கருத்தை ஆங்கிலப் புத்தகம் தெரிவிக்கிறது.
வெளிநாட்டில் திரையரங்க வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் போன்ற மார்வல் திரைப்படங்களும் டீசீ திரைப்படங்களும் நிறைய விஷயங்களும், ஃபேன்டசி திரைப்படங்களும் அதிகமாக பணத்தை சம்பாதிப்பதால் பணம் எங்கே இருக்கிறது ? என்றால் ரியாலிட்டி.மீறிய விஷயங்களை மக்களுக்கு கொடுக்கும் பொழுது தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலையில் இருப்பதை இந்த நிலைமைகள் உணர்த்துகிறது.
இந்த விஷயத்தை பற்றி இனி வரும் போஸ்டுகளில் கூட இன்னும் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக