COVID-19 காலத்தில் அமைந்துள்ள இந்தக் கதை, கிரீஸில் உள்ள ஒரு தனியார் தீவில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப மில்லியனரான மைல்ஸ் பிரான் தனது பழைய நண்பர்களை ஒரு வார இறுதி விடுமுறைக்காக அழைக்கிறார்.
அவர்களுக்குள் ஒவ்வொருவரும் அவரிடம் ஏதாவது ஒரு வகையில் கடமைப்பட்டவர்கள். ஒரு போலி கொலை மர்ம விளையாட்டாக தொடங்கும் நிகழ்வு, உண்மையான கொலைக்கு வழிவகுக்கிறது.
டிடெக்டிவ் பெனொயிட் பிளாங்க் சம்மந்தமே இல்லாமல் நண்பர்களோடு திடீரென தோன்றுகிறார், பின்னர் இப்படி இந்த விளையாட்டுக்குள்ளே நடந்த அசம்பாவிதமான சம்பவத்தின் பின்னணி உண்மையை கண்டறிய ஒரு ஆழமான விசாரணை தொடங்குகிறது.
இந்த மர்மத்தின் மையத்தில் ஆண்டி பிராண்ட் இருக்கிறார். மைல்ஸின் முன்னாள் பங்குதாரரான அவர், இந்த குழுவுடன் உள்ள அவரது கடந்த காலம் உண்மையை வெளிப்படுத்தும் காட்சிகள் என்று நிறைய விஷயங்களோடு மொனாலிஷா பெயிண்டிங் ! ப்ராஜக்ட்டை திருட செய்த துரோகம் என்று ஏகப்பட்ட விஷயங்களை KNIVES OUT படத்தின் சுவாரஸ்யமான இன்-யுனிவெர்ஸ் பின்னணியில் பணக்காரத்தனமான ஸ்டோரியாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் !
ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஐகானிக்கான கேரக்ட்டர் நடித்த பின்னால் டேனியல் க்ரேக் ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் இந்த கேரக்ட்டரை பண்ணி இருக்கும் விதமும் பிரமாதமான நடிகர்களின் நடிப்பு திறனும் இந்த படத்தை சுவாரஸ்யமான கதைக்களம் என்று மாற்றுகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக