இந்த உலகமே கொடிய விஷயங்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்வது போன்ற உணர்வு. கடவுள் யாருக்குமே சப்போர்ட் செய்வதே இல்லை. சொல்லப்போனால் ஆபத்து என்று வரும்போது இங்கே மற்றவர்களுக்கு நல்லது பண்ணியவர்களை காப்பாற்ற யாருமே இல்லை. இங்கே என்ன நடக்கிறது ? நல்ல மனிதர்கள் ஒரு வருடம் , இரண்டு வருடம் , இல்லை என்றால் 10 வருடங்களுக்கு சேர்க்கும் பணத்தின் அளவை விட கெட்ட மனிதர்கள் ஒரு மாதத்துக்குள்ளே சேர்க்கும் பணம் அதிகமானதாக இருக்கிறது ? இதனை மறுக்க முடியுமா என்ன ? மனிதன் தன்னுடைய திறன்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் அதிகப்படியான பணம், பொருள், அதிகாரம், வலிமை போன்ற நிறைய விஷயங்களை வைத்து இருப்பதால் மட்டும்தான் அவனால் அவனுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். இன்னொஸெண்ட் என்று ஒரு மனிதன் வாழ்ந்ததால் தனது உணவு உடை இருப்பிடம் உட்பட எல்லாவற்றையுமே இழந்தது நிற்பான். இந்த சேதத்தை முடிந்தவரையில் குறைக்கத்தான் முடியும். கொடியவர்களுடைய கூட்டம் இங்கே தொண்ணூறு சதம் இருக்கும்போது நல்லவர் பத்து சதவீதமும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் காலி ஆவதைத்தான் நம்முடைய விதியோ காலமோ தலையெழுத்தோ எல்லாமே நிர்ணயம் செய்கிறது. பணம்தான் எல்லாமே. இங்கே அனைத்து விளையாட்டுக்களுமே பணம் சார்ந்ததுதான். பணம் இருந்தால் மட்டும்தான் மேலே வர முடியும். கடைசியாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு உயிர் தன்னுடைய சாப்பாட்டையும் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், தவறே இல்லை என்று ஒரு கடினமான கருத்தை நாம் அக்ஸேப்ட் செய்ய வேண்டும். இதனை அக்ஸேப்ட் செய்ய மனதுக்கு கடினமாகத்தான் இருக்கும் ஆனால் அக்ஸேப்ட் செய்யாமல் மட்டுமே இருக்காதீர்கள் பின்னாட்களில் மிக்கவுமே கஷ்டப்பட்டு உங்களுடைய கைகளையும் கால்களையும் கண்களையும் இழந்தாலும் ஆச்சரியம் இல்லை மக்களே.இந்த விஷயம் மிகவுமே அபாயகரமானது. நல்லவராக இருக்க வேண்டும் என்று வாழ்க்கையை இழந்து நிற்க வேண்டாம். இது வலைப்பூவின் தனிபட்ட கருத்துதான். உங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கும் எனும் கட்டத்தில் நிச்சயமாக தெரிவிக்கலாம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக