வேலையின் காரணமாக நகரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து சம்பாதிக்கக்கூடிய இளைஞர்கள் இந்த காலத்தில் வெகு அதிகமாகவே கஷ்டப்படுகிறார்கள். வேலை நேரத்தில் அலுவலக அரசியலால் இருக்கக்கூடிய பிரச்சனை அல்லது விடுமுறை நாளன்று துணிகளை துவைக்கும் சமையல் செய்யவும். மேலும் இந்த நாளுக்கு கொஞ்சம் சிறப்பான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று கொஞ்சம் பணத்தை சேர்த்து போராடுவதும் என்று நிறைய விஷயங்கள் இவர்களுடைய வாழ்க்கையில் வித்தியாசமாகவே இருக்கிறது. தனியாக இருந்து தங்கியே படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து அதிகமான பணத்தை சேர்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லும் அனைத்து இளைஞர்களுமே சாதாரணமாக காய்ச்சல் வந்தால் கூட நாம் தான் விடுமுறை எடுத்து வீட்டுக்கு செல்ல இயலாமல் ஓய்வு எடுத்து நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற மாதிரியான கடினமான செயல்களை எல்லாம் சந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா? தங்களை சுற்றி இருக்கும் இடங்களை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவர்களுடைய கைகளில் மட்டும் தான் இருக்கிறது.இந்த மாதிரியான நிலையில் இத்தகைய இளைஞர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் எந்த அளவுக்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? வெயிலோ மழையோ அல்லது குளிர்காலமோ தனிமையில் இருக்கும்போது நாமும் நம்முடைய சம்பளம் மட்டும் தான் நமக்கு துணையாக இருக்கின்றோம் என்னும் பொழுது அது மிகவும் சாதனை செய்யும் அளவுக்கு கடினமான விஷயம். இந்த பதிவின் மூலமாக இத்தகைய இளைஞர்களுடைய கடினமான உழைப்பை கௌரவப்படுத்தி பாராட்டுகிறது இந்த வலைப்பூ நிர்வாகம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக