அஷ்வின் (ஜீவா) என்ற போட்டோகிராபர் பத்திரிகையாளர், தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிகளை வெளிக்கொணர்கிறார். அவரது பணி, உண்மையை தேடுவதில் மட்டுமல்ல, சமூக நலனுக்காக போராடுவதிலும் உள்ளது. ரேணுகா (கார்த்திகா நாயர்) மற்றும் ஸ்ரீபா (பியா பாஜ்பாய்) ஆகிய பத்திரிகையாளர்களுடன் இணைந்து, அவர் ஒரு ஆபத்தான அரசியல் சதியை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்.
இந்த வேலைகளை எல்லாம் அவருடைய ரகசியமான நண்பரின் இளைஞர் கூட்டத்தால் உருவான புதிய சிறகுகள் கட்சி வெற்றியடைய செய்யவே போராடுகிறார், ஆனால் அஸ்வின் கொடுத்த இந்த ஆதரவை பயன்படுத்திக்கொண்ட முதலமைச்சர் கேன்டிடெட் நண்பரே ஒரு கொடூர வில்லனாக மாறினால் என்ன நடக்கும் ?
இதுதான் இந்த படத்தின் கதை, இந்த படம் ஊடக நெறிமுறைகள், இளைஞர்களின் அரசியல் பங்கு மற்றும் ஜனநாயகத்தில் உண்மையின் சக்தியைப் பற்றி பேசுகிறது.
இயக்குநர் கே.வி. ஆனந்த் அவர்களால் இயக்கப்பட்ட பிரமாதமான இந்த அரசியல் த்ரில்லர். இது ஊடக பத்திரிக்கை சுதந்திரம், இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் அதிகாரத்தின் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகளை மையமாகக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக