திருமணம் கடந்த உறவுகளை ஆதரிக்க கூடாது. இது பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்ப உறவுகளில் உணர்ச்சி மற்றும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் பல வாழ்க்கைத் துணைகளுக்கு ஒரு ஆண் அல்லது பெண் அன்பை பேற நினைத்தால் சமமான அன்பும் கவனமும் வழங்க முடியாததால், பொறாமை, பாதுகாப்பின்மை மற்றும் போட்டி மனப்பான்மை உருவாகும்.
குறிப்பாக பெண்கள் உறவுகளில் பெண்கள் பெரும்பாலும் தன்னாட்சி இழப்பை எதிர்கொள்கின்றனர், மேலும் பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்குள் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கும். இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் அடையாளம், நிலைத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பில் குழப்பமடைந்து வளர வாய்ப்பு அதிகம்.
இதைவிட முக்கியமாக, திருமணம் கடந்த உறவுகள் சமூக சமத்துவத்தையும், பெண்களின் உரிமைகளையும் பாதிக்கும். இது பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் குறைவுடன் தொடர்புடையதாக இருக்கிறது,
மேலும் இந்த வானவில் ஆட்கள் இது போன்ற விஷயங்களில் நிலையாக சப்போர்ட் செய்தால் குடும்பக் கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்படுகின்றன
உரிமை பிரச்சனைகள், குழந்தை பராமரிப்பு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத உறவுகள் போன்றவை. சிலர் இதை மதச்சார்பான அல்லது கலாச்சார தேர்வாகக் கருதினாலும், பல்கல்யாணத்தின் பரந்த சமூக விளைவுகள் சமத்துவம், சம்மதம் மற்றும் உணர்ச்சி நலன் ஆகியவற்றை பாதிக்கும்.
ஒருவருக்கு ஒருவர் என்று சொல்லப்படும் காதல் மட்டும்தான் வெகுவாக மக்களிடம் திருமண வாழ்க்கையில் இருக்க வேண்டிய விஷயம். குழந்தைகளை கஷ்டப்படுத்துவது போல ஒரு முடிவுகளை நாம் எப்போதும் எடுக்க கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக