ஒரு மனுஷன் தனக்கான கோபத்தை இழக்கும்போது தன்னுடைய அடையாளத்தை இழக்கிறான். அப்படி அவனுடைய அடையாளத்தை இழக்கும்போது எல்லாமே இழக்கிறான். இந்த கதை அப்படி ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன், மிக்கி பார்ன்ஸ் ஒரு கார் விபத்தில் தெரியாமல் ஒரு பட்டன் அழுத்தியதால் சின்ன வயதில் அவனுடைய அம்மாவோடு காரில் செல்லும்போது விபத்து உருவாகி அம்மா காலமானதால் தனித்து அனாதையாக விடப்படுகிறார். இப்போது 30 களில் வறுமையின் உச்சத்தில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒரு விண்வெளி பயணத்தின் கப்பலில் பலிகேடா போன்ற மட்டமான ஒரு வேலையில் சேர்கிறார்.
அதாவது விண்வெளி விபத்துகள், வைரஸ் நோய்களில் இவரை சிக்க வைத்து சாகடித்து சோதனை செய்துவிட்டு மறுபடியும் சிக்க வைத்து சாகடித்து சோதனை செய்து வேடிக்கை பார்ப்பார்கள். இப்படி ஒரு கேடு கெட்ட வேலையாக இருந்தாலும் அவனுடைய குடும்பத்தை தவறுதலாக காலி செய்த குற்ற உணர்வால் மிகவும் நல்லவராக இருக்கும் மிக்கி எதிர்த்து போராடாமல் அப்பாவியாகவே இருக்கிறார்.
இப்போது புதிதாக வந்து இறங்கிய பிளானெட்டில் இருக்கும் உயிரினங்கள் மனிதர்களை சாகடிக்க முயற்சி செய்யவே இன்னொரு பக்கம் மிக்கி - தொலைந்து போனாதால் செத்து போனாதாக கருதி புதிதாக ஒரு மிக்கி-க்ளொன் ஒருவரையும் அமைப்பு உருவாக்கிவிடவே சர்வாதிகாரியின் விண்வெளி ஆட்சியில் இருந்து மிக்கி எல்லோரையும் காப்பாற்றுவாரா என்றே இந்த கதை நகர்கிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக எடுத்து ஒரு புத்தகமாக வெளியிட்ட கதையை பிசிறு தட்டாத விஷுவல் எஃபக்ட்ஸ் சேர்த்து பிரமாதமாக காட்சிப்படுத்தி கொடுத்து இருக்கின்றார்கள். கண்டிப்பாக சயின்ஸ் ஃபிக்ஷன் பிரியர்கள் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக