இந்த இன்டர்வியூக்களில் RAGE BAIT என்பது பார்வையாளர்களில் கோபம் அல்லது வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் உள்ளடக்கத்தை குறிக்கிறது.
இதன் குறிக்கோள் கவனத்தை ஈர்த்து கிளிக் எண்ணிக்கை மற்றும் விளம்பர வருமானத்தை அதிகரிப்பதாகும். ‘ரேஜ்பைட்’ என்ற சொல்லை கோபத்தை தூண்டிலாக வினையாக்குவது என்றும் பயன்படுத்தலாம்.
இந்த மாதிரி இன்டர்வியூக்களில் பேசும் வார்த்தைகள் உதாரணமாக இப்படித்தான் ஆரம்பிக்கும் "அவனை பத்தி சொல்லவா ? இந்த இன்டர்வியூல சொல்லவா ? நான் இப்படித்தான் இருப்பேன் ? கண்ட கண்ட ஆளுங்களுக்காக என்னை மாற்றிக்க மாட்டேன் ! - மக்கள் சுத்தமான முட்டாள்கள் ஆக்குனது யாரு தெரியுமா ?" - இது போல போதுமான இன்டெல் இல்லாத வார்த்தைகளை யாராவது சொன்னால் அவர்களை இன்டர்வியூ ஆட்களாக மாற்றி வியூக்களின் மூலமாக பணம் சம்பாதிக்க முயற்சி செய்வது.
இது கொந்தளிப்பு எழுப்பும் தலைப்புரைகள், மீம்கள், அல்லது திறம்பட தொந்தரவு செய்கின்ற பதிவுகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது க்ரியேட்டர்களுக்கு கிடைக்கப்போகும் பனாமா ?. உண்மையான விவாதத்தை ஊக்குவிக்காமல், மாறாக உடனடி, உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஒரு சிலர் ‘ரேஜ்பைடிங்’ அல்லது ‘ரேஜ்-பார்மிங்’ எனவும் அழைக்கும் இந்த மாயாஜால யுக்தியில், உள்ளடக்க உருவாக்கிகள் மக்கள் உணர்ச்சி தூண்களைப் பயன்படுத்தி கருத்துகள், பகிர்வுகள், தளத்தில் செலவிடும் நேரம் போன்ற ஈடுபாட்டு அளவுகோல்களை உயர்த்துகிறார்கள்.
பின்னர் தளங்களில் உள்ள ஆல்கொரிதம்கள் இந்தத் தீவிர பரிமாற்றங்களை மேலும் வேகமாக பரப்பி உள்ளடக்கத்தை விரிவாக பிரசாரம் செய்கின்றன. இந்த ‘உணர்ச்சியை தூண்டி மீன் பிடித்தல்’ கோபத்தைக் கூட பணமாக்குவதோடு, பிரிவுபாட்டை ஆழப்படுத்தி கட்டுமான உரையாடலைத் தாழ்த்தி, மாசுபட்ட டிஜிட்டல் சூழலை உருவாக்கவும் வழிகாட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக