சரி, சராசரி அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழ் பையன்களின் நிலைமையைப் பார்க்கலாமா ? அல்லது தமிழ்ப் பொண்ணுகளின் நிலைமையைப் பார்க்கலாமா? கவலையான விஷயம் என்னவென்றால் அவர்கள் தமிழ்ப் பாடல்களைக் கேட்பதை நிறுத்திவிட்டார்கள்,
தமிழ் சினிமாவில் நல்ல பாடல்கள் இருந்தாலும், அவர்கள் தமிழ்ப் பாடல்களைக் கேட்பதை ஒரு பழமைவாத சித்தாந்தமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட் படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்கிறார்கள். வேலை நேரத்து விடுமுறையில் வார இறுதியில் வலைத் தொடர்களில் அவர்கள் ஹாலிவுட் வலைத் தொடர்கள் அல்லது வெளிநாட்டு வலைத் தொடர்களைப் பார்க்க அதிக சுதந்திரம் கொண்டுள்ளனர்,
மேலும் அவர்கள் தமிழ் பார்வையாளர்கள் பார்க்க வேண்டிய பல நல்ல தமிழ் படங்கள் மற்றும் தமிழ் வலைத் தொடர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், நம் தமிழ் கலாச்சாரம் நம் மீது ஒருவித மனதார கொடுக்கும் ஒழுக்க கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் நாம் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பது போல நல்ல கருத்துக்கள் சொல்லி இங்கே வளர்த்துவிடப்படுகிறார்கள் !
இந்தக் கலாச்சாரம் நமக்குப் பொருந்தாது. இந்தத் தவறான கருத்து நம் இளைஞர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வந்துவிட்டது.
"நான் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கிறேன் ப்ரோ !! அல்லது கொரியப் பாடல்களைக் கேட்கிறேன் ப்ரோ !! " என்று மனசாட்சி இல்லாமல் பைத்தியக்காரத்தனமாக பதிலளிக்கக்கூடிய ஹெட்ஸேட் தலைமுறைகள், "இப்போதெல்லாம் தமிழ்ப் பாடல்களை யார் கேட்பார்கள்?" என்று தமிழ்ப் பாடல்களை தொலைக்க வேண்டிய ஒரு வகையான கலாச்சாரமாகக் கருதுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக