இங்கே என்னுடைய V3 விளம்பரங்கள் போன்ற விஷயங்களை எல்லாம் நம்பி பணத்தை இழந்த ஆட்களை பார்க்கலாம் ! பொன்சி திட்டம் என்பது மோசடி முதலீட்டு திட்டமாகும், இது குறைந்த ஆபத்துடன் அதிக வருமானம் தரும் என வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் இது நீடிக்க முடியாதது. இந்த திட்டம் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுத்து, ஒரு லாபகரமான வணிகம் போல தோற்றம் அளிக்கிறது. உண்மையில் எந்த லாபமும் உருவாகவில்லை - புதிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து சேர வேண்டும் என்பதே அதன் அடிப்படை. ஒரு கட்டத்தில் புதியவர்கள் சேர்வது குறைந்துவிட்டால், திட்டம் முற்றிலும் சிதைந்து விடும். அப்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும். பொன்சி திட்டங்கள் பொய்களில் அடிப்படையில் அமைந்தவை, உண்மையான பொருளாதார செயல்பாடுகள் இல்லாதவை என்பதால் அவை ஒரு வருடம் ஆனாலும் தோல்வியடைவது உறுதி. சரித்திரத்தில் சார்ல்ஸ் பொன்சி முதல் பெர்னி மேடாஃப் வரை பலர் இந்த மோசடியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான மக்களை நிதி நஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இது ஏன் வேலை செய்யாது என்பதற்கான காரணம்: இது நம்பிக்கையை அல்ல, மொத்தமாக பணத்தை ஆட்டயப்போட்டுக்கொண்டு ஓடிப்போகும் ஆட்களில் நம்பிக்கையை வைத்து மக்கள் பணத்தை ஏமாந்து போகும் ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக