இணைய கேமர்கள் வட்டாரத்தில் இந்த ஜி டி ஏ - வீடியோ கேம் தொடர் என்பது உலகின் மிகச் சிறந்ததும், சர்ச்சைக்குரியதுமானதுமான ஒன்றாகும்.
முதன்மையாக ராக்ஸ்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, பின்னாட்களில் ராக்ஸ்ட்டார் கொடுத்த உழைப்பால் உலக அளவில் மூலம் வெளியிடப்பட்டது. 1997-ல் வெளியான முதல் GTA - GTA LONDON, போன்றவை அப்போது இருந்த டெக்னாலஜிக்கு மேலிருந்து பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட குற்றவாளியை தூரத்துவது அடிப்படையிலான விளையாட்டு.
இங்கே கேம் சேஞ்ச் பண்ணியது 2001-ல் வெளியான GTA III மூலமாக முழுமையான 3D உலகம் மற்றும் சினிமா போன்ற கதை சொல்லல் அறிமுகமாகி, இந்த தொடரின் புகழ் பல மடங்கு உயர்ந்தது.
ஒவ்வொரு பதிப்பிலும், ஒரு கதாநாயகன் குற்ற உலகில் உயர்வதைக் காட்டும் கதை, வாகன ஓட்டம், துப்பாக்கி சண்டை, மற்றும் சுதந்திரமான உலகத்தை ஆராயும் அம்சங்களுடன் கூடியதாக இருக்கும். இது அமெரிக்க கலாசாரம், அரசியல் மற்றும் ஊடகங்களை நையாண்டி செய்யும் விதமாகவும் அமைந்துள்ளது.
காலப்போக்கில், GTA ஒரு கலாசாரச் சின்னமாக மாறியுள்ளது. இந்த வைஸ் சிட்டி, ஷான் ஆன்ட்ரியாஸ் , மற்றும் GTA V போன்ற பதிப்புகள் விளையாட்டு முறையில், கதையின் ஆழத்தில், மற்றும் பெரிய சிட்டியை கண்களுக்கு காட்டும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் எல்லைகளை தாண்டியவை.
குறிப்பாக GTA V, மூன்று கதாபாத்திரங்களுடன் கூடிய பெரிய கதை கொண்ட பரந்த உலகம் மற்றும் தொடர்ச்சியாக விரிவடையும் சந்தோஷம் என்று ஆன்லைன் முறையால் விளையாட ஒரு இணைப்பு என்று, வரலாற்றில் மிகச் சிறந்த விளையாட்டு வெளியீடாகப் பெயர் பெற்றது.
இந்த தொடரானது அளவற்ற வன்முறை, குற்றங்கள் குறித்த ஒழுக்கம் மற்றும் விளையாட்டில் சுதந்திரம் குறித்த விவாதங்களை உலக அளவில் ஏற்படுத்தியிருந்தாலும், திறந்த உலக வடிவமைப்பிலும், கதை சொல்லலிலும் ஒரு அளவுகோலாகவே இருக்கிறது. GTA VI விரைவில் வரவிருப்பதால், ரசிகர்கள் அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக