திங்கள், 25 ஆகஸ்ட், 2025

இது பொன் விளையும் பூமி !!




மக்களே கார்ப்பரேட் சந்தைகளை விட்டுவிட்டு நம்ம ஊரு உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்குங்கள் ! இங்கே விவசாய மக்களின் உழவால் சத்துள்ள மண் விதைகளை தாங்கும் போது வானம் கூட வணங்கும் போல விவசாயியின் கைகள் மண்ணை தொட்டதும் பசுமை பூமி புன்னகைக்கிறது. கதிரவன் எழுந்ததும் இந்த கதாநாயகர்களின் கண்விழிப்பு தூங்கும் நிலம் எழும் நேரத்தில் உழவன் ஏர் பூட்டி பாடல் பாடுகிறான். நெல் இவர்களுடைய நெஞ்சில் இருக்கும் துணிவில் வளர்கிறது, இவர்களின் உழைப்பால் வேர்கள் போல உறவுகள் வலுப்படுகின்றன மழை துளிகள் ஊட்டம் கொடுக்க மண் மகிழ்ச்சி கொண்டு பயிர்கள் பாடுபடுவதால் விளைகிறது. வியர்வை, வெயில் சுடும் வெப்பம் எதிலுமே விவசாய மக்களின் மனம் சோர்வதில்லை ஒரு விதை நம்பிக்கையால் புதைக்கப்படும் அந்த நொடியில் ஒரு உலகம் அதில் வளர்கிறது. மாடு மேயும் பசுமை நிலம் பச்சை வண்ணம் கொடுக்க பறவைகள் பாடும் காலை நேரம் அவை எல்லாம் விவசாயியின் உழைப்புக்கு இயற்கை கொடுக்கும் பாராட்டு கவிதை, அவன் வாழ்க்கை மீட்டும் இசையாக இவர்களுடைய உழைப்பு சந்தையை அடைகிறது. பசுமை என்பது இவர்களுக்கு ஒரு வண்ணம் மட்டும் அல்ல ஒரு கௌரவமான வாழ்வாதாரம் ஒரு வாழ்க்கை முறையே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, அது மனிதன் பூமியோடு பேசும் அன்பான உரையாடல். எப்போதுமே வேர்கள் வளர்ந்தால்தான் மரம் உயரும் உழைப்பு இருந்தால் நாடு உயரும் விவசாயி அவரது நிலத்தில் நடக்கும் போது இந்த தேசமே அவரது பின்னால் செல்கிறது !  இவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பது நம் நாட்டின் விவசாயியின் கண்களில் ஒரு கனவாகும். வரலாறு பூமிக்கு சொன்ன ஒரு கதை, விவசாயம் விட்டால் உலகம் அழிந்துவிடும் என்பதே !  விவசாயியின் கைகள் வானத்தைத் தொட்டு பார்க்க வேண்டும் ! நெல் வயலில் இசைபோல் விவசயத்தின் வெற்றிக்கதைகளை ஒலிக்கின்ற நாட்கள் வரவேண்டும். பயிர்கள் வளறும்போது வேர்கள் மட்டும் வளரவில்லை, சந்தை இலாபத்தை எண்ணி வருங்கால திட்டங்களை எண்ணி விவசாயிகளின் கனவுகளும் வளர்கின்றன.  

கருத்துகள் இல்லை:

generation not loving music