செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

CINEMA TALKS - F1 -TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தை எப்படி வெகு எமோஷன் நிறைந்த அட்வென்சர்ரான படமாக எடுப்பது என்பதை இந்த படத்தை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். வெளியாகும் F1 திரைப்படத்தில், பிராட் பிட்ட் "சன்னி ஹேய்ஸ்" என்ற ஓர் முன்னாள் ஃபார்முலா 1 ஓட்டுநராக நடித்துள்ளார். 1993-ல் ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்தால் அவரது வாழ்க்கையும் கனவுகளும் சிதைந்துவிடுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, சன்னி ஒரு தனிமையான வாழ்க்கையை நடத்துகிறார், கடந்த காலத்தின் பிணைகளால் வலியுறுத்தப்படுகிறார். அவரது பழைய கூட்டாளியான ரூபென் செர்வான்டஸ், தற்போது APXGP என்ற தடுமாறும் குழுவின் உரிமையாளராக, சன்னிக்கு மீண்டும் ஓட்டுநராக வர வாய்ப்பு அளிக்கிறார். இளம் ஓட்டுநர் ஜோஷுவா பியர்ஸுடன் இணைந்து, சன்னி மீண்டும் பந்தய உலகில் காலடி எடுக்கிறார். புதிய தொழில்நுட்பம், ஊடக அழுத்தம் மற்றும் ஒரு சிக்கலான வழிகாட்டி உறவின் மத்தியில், அவர் மீட்பு மற்றும் இறுதி வெற்றிக்கான தேடலில் இறங்குகிறார். இதுதான் இந்த படத்தின் கதை - கதையை விடுங்கப்பா ! ரேஸ் ஓட்டும் காட்சிகளை பாருங்கள் என்று பிரமாதமாக ஸ்போர்ட்ஸ் லெவல் ரேஸ் களத்தை கண்களுக்கு முன்னால் காட்டிவிட்டார்கள் ! ஜோஷுவா இணைந்து பணியாற்றாமல் போகும் நாட்களில் குழுவை வெற்றிக்கு நகர்த்தி காப்பாற்றுவது. ரேஸ் போட்டியாளர்களிடம் நடக்கும் போலிட்டிக்ஸ். நம்பமுடியவில்லை என்றாலும் ஸ்வாரஸ்யமான களத்தில் கார்களை மோதவிடும் காட்சிகள். ஆக்ஸிடன்ட் காட்சிகள் என்று கமேர்சியல் படமாக உலகத்தையே சுற்றி பிரமாதப்படுத்திவிட்டார்கள் என்றே சொல்லலாம் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...