இங்கே உங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டு தொழில் தொடங்க 10 யோசனைகள் தமிழில்: . மொபைல் உள்ளடக்க உருவாக்கும் ஸ்டுடியோ
உங்கள் போனில் வீடியோக்கள் எடுத்து, தொகுத்து, சோசியல் மீடியாக்களில் வெளியிடலாம் இப்படி வியூக்கள் கிடைத்தவுடன் பிராண்ட் ஒப்பந்தங்கள், விளம்பர வருமானம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
கேப்கட் , கேன்வா, இன்ஷாட் போன்ற செயலிகள் உதவியாக இருக்கும் சோஷியல் காமர்ஸ் விற்பனையாளர் வாட்ஸ் அப் மூலம் நேரடியாக பொருட்கள் விற்பனை செய்யலாம்
கையிருப்புகள், வாடிக்கையாளர் உரையாடல்கள், பணப்பரிவர்த்தனைகள் என்று எல்லாமே உங்கள் போனிலேயே பதிவு பண்ணி வைக்கலாம்.
கைவினைப் பொருட்கள், பழைய பொருட்கள், உள்ளூர் சிறப்புப் பொருட்கள் சிறந்த தேர்வுகள் - பாட்காஸ்ட் தயாரிப்பு இந்த விஷயத்துக்கு ANCHOR மற்றும் PODBEAN போன்ற செயலிகள் மூலம் எபிசோட்கள் பதிவு செய்யலாம்
ZOOM மற்றும் RIVERSIDE மூலம் விருந்தினர்களை நேரலையில் பேட்டி கொள்ளலாம் இந்த வகையில் நீங்கள் பண்ணும் விளம்பரங்கள், ஆதரவு மூலம் வருமானம் பெறலாம்
ஆன்லைன் பயிற்சி அல்லது துணைபாடம் போன்றவை வீடியோக்கள் மூலம் மொழி, உடற்பயிற்சி, பாடப்பயிற்சி வழங்கலாம் பண நிர்வாகத்துக்கு கூகிள் கேலன்டர் மற்றும் RACER PAY மூலம் நேரம் மற்றும் பணம் நிர்வகிக்கலாம்
INSTAGRAM - மூலம் LINKEDIN - மூலம் விளம்பரம் செய்யலாம்
மற்றவர்களுக்காக பயண திட்டமிடல் மற்றும் முன்பதிவு சேவை
ஸ்கை ஸ்கேன்னர், ஏர் பிஎன்பி, கூகிள் மேப்ஸ் போன்ற செயலிகள் மூலம் பயண திட்டங்கள் உருவாக்கலாம் தனிப்பட்ட பயண அனுபவங்கள் அல்லது குழு சுற்றுலாக்கள் வழங்கலாம் வாடிக்கையாளர் ஆதரவு போனிலேயே உங்களுக்கு கிடைக்கும்.

4 கருத்துகள்:
ஜனநாயகனுக்கு வேணும்னா வரேன் கூட்டணிக்கு எல்லாம் இப்போ வேண்டாம் - போன் போட்ட விஜய் நழுவிய அன்புமணி
தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 3வது அணியை அமைப்பதற்கான பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்தான் விஜய் முக்கியமான நபர் ஒருவருக்கு போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர். விஜயின் அரசியல் பேச்சுக்கள், அவரின் நடவடிக்கைகள் தொடங்கி அவரின் உடை அனைத்திற்கும் பின் இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான். விஜய் எடுக்கும் முடிவுகளுக்கு பின்னணியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்.
தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த்தும், ஆதவ் அர்ஜுனாவும் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் ஜான் ஆரோக்கியசாமி மூலம் விஜய் முக்கியமான கூட்டணி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி உள்ளாராம். தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 3வது அணியை அமைப்பதற்கான பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் விஜய் முக்கியமான நபர் ஒருவருக்கு போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமி மூலம் விஜய் போன் செய்த நபர்.. பாமக அன்புமணி ராமதாஸ். அன்புமணியிடம் அன்பாக பேசிய ஜான் - விஜய் டீம்.. உட்கட்சி பிரச்சனைகளை கேட்டறிந்தனர். விஜய் - அன்புமணி இரண்டு பேருக்குமே.. அவரவர் அப்பாக்களுடன் பெரிய நெருக்கம் இல்லாததால் என்னவோ.. இந்த போன் காலில் அவர்கள் நெருக்கம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தரப்பும் தமிழக அரசியல், திமுக செய்த தவறுகள், திமுகவை எதிர்க்க வேண்டிய விஷயங்கள் என்று பல விஷயங்கள் பற்றி ஒரே கருத்துடன் பேசி உள்ளனர். பல விஷயங்களில் இவர்களுக்குள் ஒற்றை கருத்து நிலவ இருக்கிறதாம். ஆனால் விஜய் கூட்டணி பற்றி பேசியதற்கு அன்புமணி பதில் சொல்லவில்லையாம். அதற்கு மட்டும் அப்படியே பட்டும் படாமல்.. மாம்பழம் போல அப்படியே வழுக்கி சென்றுவிட்டாராம் அன்புமணி..
ஓபிஎஸ் வராங்க.. டிடிவி தினகரன் வராங்க.. இன்னும் பல சொந்த பந்தங்கள் எல்லாம் வராங்க.. நீங்களும் வாங்களேன் என்று விஜய் நைசாக கேட்டதற்கு ஜனநாயகனுக்கு வேணும்னா வரேன் கூட்டணிக்கு எல்லாம் இப்போ வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி நழுவி விட்டாராம் அன்புமணி! அப்போ இப்போதைக்கு "கச்சேரி" இல்லை என்று தளபதியும் சைலன்ட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது!
புத்தாண்டுக்காக ஒரு தடவை என்பான்.. ஒரு டம்ளர் கூட குடிக்க முடியவில்லை எனில் உன்னை ஆண்மை இல்லாதவன் என்பான்,வீரம் இல்லாதவன் என்பான்.. எப்படியாவது உன்னை மது குடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கம்.. இப்படித்தான் அவனும் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாந்து தற்போது மதுவுக்கு அடிமையாக இருப்பான்.
மதுவுக்கு அடிமையான ஒரு சில வருடங்களிலே ஆண்மையை இழக்க நேரிடும்.. அடுத்த சில வருடங்களுக்கு நரம்பு தளர்ந்து விடும்.. இதயம் கல்லீரல் சிறுநீரகம் கணையம் என ஒவ்வொன்றாக செயல் இழக்கும்..
அறிவைத் தேடி அறிவு சார்ந்த தளத்தில் உரையாட வேண்டிய இளம் வயதில் மதுவுக்கு அடிமையாகி அறிவும் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது..
பெரும்பாலான வீடுகளில் தனது மகன் மது அருந்துவதை தாய்மார்கள் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.. பிள்ளைகளை கண்டு கொள்ளாமல் வளர்ப்பது அல்லது செல்லமாக வளர்ப்பது இவை இரண்டும்தான் அவனை மதுவுக்கு அடிமையாக்கிறது..
பயம் பதட்டம் கோபம் போன்ற எந்த சூழ்நிலைகளையும் இயல்பாக அணுக முடியாமல் போகிறது மதுவுக்கு அடிமையானவர்களால்..
மதுவை நினைவுபடுத்தும் நண்பர்களை தள்ளி வைத்து அறிவு சார்ந்து உரையாடக்கூடிய நண்பர்களுடன் பழக்கமாகியிருங்கள்..
எந்த போதை பழக்கத்தையும் இன்றே விட்டு விடுங்கள்.. அறிவு என்ற போதையை தேடுங்கள் அது வாழ்வை பேரின்பமாக்கும்.
பிறவியிலேயே அறிவாளியா? பிறக்கும்போது சுய அறிவே இல்ல: ஏ.ஐ.குறித்த கேள்வியால் தொகுப்பாளரை மடக்கிய இளையராஜா!
இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், மனிதன் செய்ய வேண்டிய கம்யூட்டர் தொடர்பான அனைத்து வேலைகளையும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செய்துவிடலாம் என்ற நிலை இருக்கிறது. இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார், இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
தற்போது 80 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, பாடல் காப்புரிமை விவகாரத்தில் கண்டிப்புடன் இருந்து வருகிறார். தனது அனுமதி இல்லால் தனது பாடல்கள் மற்றும் இசையை, படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துவிடுவார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகிறது. அதே சமயம், இளையராஜாவின் புகழ் குறித்தும் பலர் பேசி வருகின்றனர்.
இதனிடையே இன்றைய காலக்கட்டத்தில் ஏ.ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட்) குறித்து நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இளையராஜா, தொகுப்பாளரிடம் உங்களுக்கு இருக்கும் அறிவு ஆர்ட்டிஃபிஷியலா இல்ல நேச்சுரலா என்று கேட்க அவர் நேச்சுரல் என்று சொல்கிறார். இதை கேட்ட இளையராஜா எப்படி பிறக்கும்போதே அறிவாளியாக பிறந்துட்டீங்களா? என்று கேட்கிறார். அதற்கு அந்த தொகுப்பாளர் வளர வளர கற்றுக்கொள்கிறோம் என்று கூறுகிறார்.
முதலில் அப்பா அம்மா, அதன்பிறகு வாத்தியார், அதன்பிறகு மற்றவர்கள் அவர்களிடம் இருந்து உங்களுக்கு வந்தது தான் அறிவே தவிர, உங்களுக்கான சுய அறிவு பிறக்கும்போதே இல்லை. அப்போ இதுவே ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட்ஸா இருக்கும்போது இன்னொரு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட் எப்படி வரும்? அதை மனிதன் தான் உருவாக்க வேண்டும். அதை ஆர்டர் செய்து புரோகிராம் பண்ண வேண்டும். மனிதனின் இயக்கம் மற்றும் உணர்ச்சி இல்லாமல் ஒரு விஷயம் உருவாவது இல்லை. இது கனவுக்குள் கனவு போலத்தான் என்று கூறியுள்ளார்.
நம்ம வாழ்க்கையில் எப்போதும் ஒரு விதிமுறை இருக்கிறது, சாதரணமான மனிதனாக மட்டும் இருக்கவே கூடாது, அசாதாரணமான செயல்கள் செய்தால்தான் வெற்றியை தக்கவைக்க முடியும். மாற்றங்களை உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டால்தான் முன்னேற்றம் உங்களுக்காக தானாகவே உருவாகும்.
கருத்துரையிடுக