செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

THINGS ONLY SELVARAGAVAN FILMS CAPTURE !



மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் 
இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே 
இது என்ன வேட்கை ?

காதல் வலி உடல் காயுதே 
இது என்ன வாழ்க்கை ?
ஒரு பார்வையில்
ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் 
நான் மீண்டும் பிறப்பேனே

காதல் சருகான பின்பு 
மோகம் வந்தாலே
சாபம் கண்ணில் 
முள் வைத்து மூடி 
தூங்க சொன்னாலே பாவம்

உன் மார்பில் வழிகின்ற 
நீர் அள்ளி 
மருந்து போல 
குடிப்பேன் 
என் பித்தம் கொஞ்சம்
தணிப்பேன் 
உன் பாத சுவடுக்குள் 
சுருங்கி விழுந்து 
மரிப்பேன்

உடல் சீறுதே 
நிறம் மாறுதே 
வலி ஏறுதே 
இது என்ன கலவரமோ ?

நிலவின் ஒளியில்
அலைகள் எரியுமா 
அலையின் வேதனை 
நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் 
சுகமா எங்கும் பரவுதடி

உடலே உடலே
உறைந்து போய்விடு
மனமே மனமே 
இறந்து போய்விடு 
பாதையிலே
சிறு கல்லாய் என்னை
கிடக்க விடு

உன் பார்வையில்
என்னை கொன்றுவிடு
பெண்ணே உன் கூந்தலில்
என்னை புதைத்து விடு
பெண்ணே

உன் பார்வையில்
என்னை கொன்றுவிடு
பெண்ணே உன் கூந்தலில்
என்னை புதைத்து விடு
பெண்ணே

கொல்வதற்கு முன்னே 
ஒரு முத்தமிடு பெண்ணே 
அதை மறக்காதே
ஒரு பார்வையில் 
ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் நான் 
மீண்டும் பிறப்பேனே







கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...