ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த நிலையில் இருந்தால், அந்த அதிகார நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கை THE PRINCE புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வெற்றிகளையும் சக்திவாய்ந்த நிலையையும் சேகரித்துக்கொண்டே இருந்தால் மட்டும் தான் ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கை நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.
இந்த உலகத்தில் சொல்லப்படக்கூடிய மிகப்பெரிய போலியான விஷயம் என்னவென்றால் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தால் அவனுக்கு நல்ல விஷயங்கள் அதிகமாக நடக்கும் என்பதுதான் உண்மையை சொல்லபோனால் நல்லவனாக வாழ்பவர்தான். உலகத்தில் அதிகமாக கஷ்டப்படுகிறார்கள்
இதற்கு தெளிவாக ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் நல்லவராக வாழ்ந்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்து அடுத்த அடுத்தடுத்த அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு இருக்கிறது.
நல்லவர்களாக இருப்பவர்கள் அடுத்தடுத்து என்னென்ன விஷயங்கள் செய்வார்கள் என்பதை யார் வேண்டுமென்றாலும் கணித்து சொல்லி விடலாம். ஏனென்றால் நல்லவர்களாக இருப்பவர்கள் இதைத்தான் செய்வார்கள். இதுதான் அவர்களால் செய்ய முடியும் என்று குறிப்பிடத்தக்க சரியான பாதைகள் இருக்கிறது
இந்த பாதையில் தான் நல்லவர்கள் செல்வார்கள் என்றும் இந்த பாதையிலிருந்து அவர்களை தாக்கினால் அவர்களை எளிதில் தீர்த்துக்கட்டி வீழ்த்திவிடலாம் என்றும் கொடியவர்களுக்கு மிக எளிதாக காலம் வாய்ப்புகளை திறந்து வைத்து விடுகிறது.
இதுதான் மேலே கொடுக்கப்பட்டவர்களுக்கு சரியான ஒரு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. அதாவது அதிகாரநிலை என்பது ஒரு மனிதன் எந்த அளவுக்கு நல்லவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்து காப்பாற்றப்பட்டு வைத்துக் கொள்ளமுடியும் என்றமாதிரியான ஒரு விஷயம் அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக