ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - நம்ம வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டிய ஒரு கடினமான உணர்வு !


 

எப்படிப்பட்ட ஆட்களாக இருந்தாலும் நம்ம தகுதிக்கு மீறி ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே இழந்து தவிக்கும்போது ஒரு மாதிரியான வெறுமை மானதுக்குள்ளே உருவாகும். 

இது ஒரு வகையான காலியிடம் (EMPTINESS) - இந்த உணர்வை ஜெயிப்பது மிக கடினமானது. இந்த காலத்தில் எல்லாம் நிறைய மோட்டிவேஷன் வந்து இருந்தாலும் இந்த உணர்வை வெற்றியடைய மோட்டிவேஷன் மட்டுமே போதாது. 

அடிப்படையில் சம்மந்தப்பட்ட மனிதருடைய வாழும் சூழ்நிலையை மாற்ற வேண்டும். வெகுவாக கடவுளே அந்த மனிதருடைய நிறைய விஷயங்களை அபகரித்துக்கொண்டு அந்த மனிதரை சித்திரவதை செய்வதை போல நிறைய விஷயங்களை சம்மந்தப்பட்ட மனிதர் கணக்கில் வைத்துக்கொண்டு இருப்பார். 

இந்த வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இயலாமைக்கும் சுய பாதுகாப்பற்ற ஒரு தன்மைக்குமே வழிவகுக்கும். மனது கொஞ்சம் கொஞ்சமாக இந்த கஷ்டங்களின் கடலுக்குள்ளே கரைந்துவிடும், இந்த காலியான - வெறுமையான உணர்வு மனிதனுக்குள்ளே வரும்போதே அதனை நசுக்கி காலி செய்துவிடுவது மிக்கவுமே நல்லது. 

இந்த வெறுமை உணர்வு மனிதனின் குற்ற உணர்வுகளை தூண்டிவிட்டு சமூகத்தில் அவனை பின்னோக்கி செல்ல வைக்குமே தவிர்த்து ஒரு நல்ல விஷயத்தை இந்த வெறுமை உணர்வு கொடுத்ததாக சரித்திரமே இல்லை. 
















கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - தமிழ் மொழியின் ஆண்டு கால பரிமாணங்கள் !

  தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு – காலவரிசை 📜 சங்க காலம் (கிமு 500 – கிபி 300) தொல்காப்பியம் எட்...