நமக்கு பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் என்று எந்த விஷயமாக இருந்தாலும் சரி எந்த காரணத்தை கொண்டும் தவிர்த்து விட்டு செல்லக்கூடாது.
நம்மால் தவிர்க்க வேண்டும் என்று ஒரு விஷயம் இருந்தால் ஒரு கட்டத்தில் அந்த விஷயத்தைப் பற்றிய போதுமான அறிவை நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்போம்.
அந்த அறிவு தெரிந்து கொள்ளாமல் இருப்பதை காரணம் காட்டி மற்றவர்கள் அந்த அறிவை தெரிந்து கொண்டு நம்மை தோற்கடிப்பதற்கான சூழ்நிலைகள் நிறையவே உள்ளது.
ஆகவே உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து ஒரு விஷயத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கெட்டியாக கற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் வருங்காலம் என்பது அவ்வளவு நிலையானதாக இப்பொழுது ஒரு எழுத்தாளராக.என்னால் சொல்ல முடியவில்லை.
இப்பொழுதே ஒரு எழுத்தாளர் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் செய்து முடித்துவிடுகிறது.
எழுத்து துறையிலேயே இப்படி ஒரு பஞ்சாயத்து சென்று கொண்டு இருப்பதால் இனிமேல் வருங்காலத்தில் கலை சார்ந்த துறைகளுக்கு அதிகமான அளவில் பணம் கிடைக்கும் என்றே யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடிவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக