புதன், 6 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - கம்யூனிக்கேஷன் மேம்படுத்துதல் - 1



கண்களை நம்முடைய கோபம் என்ன சொல்கிறதோ அவற்றை வெளிப்படுத்தக்கூடிய ஒரு காரணியாகப் பயன்படுத்த வேண்டும். நம் எண்ணங்கள் நம் கண்களின் வழியாகப் பகிரப்பட வேண்டும். நாம் எப்போதும் மற்றவர்களை விட தாழ்ந்தவர்கள் அல்ல. நாம் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை இரண்டாம் நிலை மனதில் இருக்க வேண்டும். நான் சரியான மனநிலையில் இருக்கிறேன், பதற்றமாக இல்லை. "நீங்களும் சரியான மனநிலையில் இருக்கிறீர்களா?" என்ற குளிர்ச்சியான ஆட்டிட்யூட் இருக்கும் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். உங்களுக்கு தலைவலி இருப்பது போலவும், உங்கள் மனதுக்குள் கோபத் தீ எரிவது போலவும், எரிமலை வெடிப்பது போலவும் நீங்கள் பேசக்கூடாது. நீங்கள் இந்த எல்லைக் கோட்டிற்குள் இருக்க வேண்டும். எப்போதும் உறவுக்குள் இந்த எல்லையைத் தாண்டாதபடி எப்போதும் தெளிவான உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டென்ஷனான நிலையே உங்களை சுற்றியிருப்பவர்கள் ஏற்படுத்தினால் நீங்கள் உடனடியாக கோபப்படவோ அல்லது.மனது உடைந்தும் வருத்தப்படவோ கூடாது. உங்களை சுற்றி இருப்பவர்கள் இந்த மாதிரியாக உங்களுடைய உணர்வுகளை தூண்டி விட்டுட்டு தான் உங்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள். உங்களுடைய உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது நீங்கள் எப்போதும் மிகவும் அமைதியாகவும் நுட்பமான நகைச்சுவையுடனும் பேச வேண்டும். உங்கள் மென்மையான மனநிலை உங்கள் போர்வாள். உங்கள் மென்மையான மனநிலை உங்கள் கேடயம் என்பதை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் திறமைகளை நீங்கள் மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் வெளிப்படுத்த வேண்டும். உங்களை எப்போதும் தோற்கடிக்க விரும்புபவர்கள். நீங்கள் மிகவும் திறமையான நபராக இருந்தால், அவர்கள் உங்களைத் தொடக்கூட முயற்சிக்க மாட்டார்கள். மிகவும் வேகமாகவும், துரிதமாகவும், கூர்மையாகவும் செயல்படக்கூடிய ஆட்களாக நீங்கள் இருந்தால் உங்களை யாராலும் தடுக்கவோ அல்லது சண்டை போட்டுக் கூட தோற்கடிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - எப்போதும் அறிவியல் சரியான தேர்வு !

  வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலி ராமன் நகருக்குத் திரும்பியபோது ஊரெங்கும் பரபரப்பாக இருந்தது. வடநாட்டு வியாபாரி ஒருவர், “என் பொருளின...