உள்மனத்தின் சக்தி என்பது நம்மால் அறியாமலேயே நம் சிந்தனைகள், பழக்கங்கள், மற்றும் வாழ்க்கை முடிவுகளை அமைதியாக வடிவமைக்கும் மாயாஜாலாமான காரணியாக இருக்கிறது.
தகவல்களை தர்க்கரீதியாகவும் திட்டமிட்டும் செயலாக்கும் வெளிமனத்துக்கு மாறாக, உள்மனம் பின்னணியில் செயல்பட்டு, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கும் நினைவுகள், நம்பிக்கைகள், மற்றும் உணர்வுகளை சேமிக்கிறது.
எதார்த்தம் மற்றும் கற்பனை என்ற இரண்டின் வித்தியாசத்தை அறியாது; அதனால் மீண்டும் மீண்டும் வரும் சிந்தனைகள், உறுதிமொழிகள், மற்றும் மனக்கருத்துப் படிமங்கள் அதை நமக்கு சாதகமாக மறுவடிவமைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
இந்த மறைந்த மன இயந்திரம், நமது தன்னிச்சையான பிரதிசெயல்கள், படைப்பாற்றல், மற்றும் கவனமான வகையில் உடல் நலத்தையும் கூட கட்டுப்படுத்துகிறது அதனால் நல்ல எண்ணங்களில் உள்ளடக்கங்களால் வளர்க்கப்பட்டால் குழந்தைகள் வளர்ந்த பின்னால் வலிமையான தோழனாகவும் தோழியாகவும் இருப்பார்கள், இதுவே பயம், சந்தேகம் அல்லது எதிர்மறை சிந்தனைகளால் குழந்தைகளின் மனது நிரம்பினால் சமூக எதிரியாகவும் பிற்காலத்தால் அவர்களுடைய வாழ்க்கை மாறக்கூடும்.
கட்டாயம் நேர்மறையான எண்ணங்களால் ஊட்டி, நமது இலக்குகளுடன் இணைத்துக்கொண்டால் மட்டும்தான் நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை உருவாக்கும் சப்கான்ஸியஸ் பேராற்றலை நாம்தான் கையாள முடியும்.
சப்கான்ஸியஸ் பேராற்றல் என்றால் ஒரு விஷயம் உங்களுக்காக நடக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த விஷயம் கண்டிப்பாக வாழ்க்கையில் நடந்துவிடும் என்று 100% நம்பிக்கை வைத்து கொள்ளுங்கள். நம்முடைய சப் கான்ஷியஸ்ல் அந்த விஷயத்தை நீங்கள் திரும்பத் திரும்ப யோசித்து பார்த்து தாங்கள் அந்த விஷயத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததாகவும் நிறைய பேருடைய பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும் நன்றாக கற்பனை செய்து கொண்டு உங்களுடைய மனதை ஒரு திடமான பாசிட்டிவான விஷயமாக மட்டுமே மாற்றி வைத்திருங்கள்.
இல்லை, நாம் தோற்றுவிடுவோம். வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பது போல நமக்கு தவறான எண்ணங்கள் உள்ள நெகட்டிவான விஷயம் அது உங்கள் மனதில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஒன்று மட்டும் போதும். வெற்றிக்கு மேல் வெற்றி உங்கள் வாழ்க்கையில் வந்து உங்கள் உள்ளங்கையில் கொடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக