திங்கள், 25 ஆகஸ்ட், 2025

CINEMA TALKS - YAARUDAA MAHESH - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இது 2013-ல் வெளியான தமிழ் மொழி பெரியவர்களுக்கான நகைச்சுவை திரைப்படமாகும். இயக்குநர் ஆர்.மாதன் குமார் இயக்கிய இந்த படத்தில் சுந்தீப் கிஷன் மற்றும் டிம்பிள் சோபாடே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்போதுமே காதல் என்றால் ரொமான்ஸ் மட்டும்தான் என்று நினைக்கும் கல்லூரி மாணவரான சிவா, சிந்த்யாவுடன் ஏற்பட்ட காதல் சம்பவத்தால் [?] எதிர்பாராத விதமாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு படிப்பில் அரியர் க்ளியர் பண்ண முடியாமல் வேலை இல்லாமல் மன அழுத்தத்தில் குழந்தைக்கு தகப்பன் வாழ்க்கை வாழும் சிவா, சிந்த்யா இப்போது மகேஷ் என்ற ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என சந்தேகிக்கத் தொடங்குகிறார். அந்த மர்ம நபர் “மகேஷ்” என்பதுதான் கதையின் மையம்.

இந்த திரைப்படம் அளவுக்கு அதிகமான நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப் பூர்வமான கதையை சொல்லுகிறது. நம்பிக்கை, சந்தேகம், மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற கருப்பொருள்களை காதல் எப்படி அனுகுகிறது என்று இது ஆராய்கிறது. 

கோபி சுந்தரின் இசை மற்றும் ராணாவின் வண்ணம் கூட்டப்பட்ட ஒளிப்பதிவு, கதையின் நகர்வுக்கு உயிரூட்டுகின்றன. வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பின்னால் நிறைய அடால்ட் காமேடி படங்கள் வரும்போது தனது வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் தைரியமான அணுகுமுறையால் புதிய தலைமுறையின் கவனம் பெற்றது. 

“யாருடா மகேஷ்?” படம் என்ற தலைப்பே ஒரு மர்மமாக இருந்து ஒரு வித்தியாசமான கதையை முன்னெடுத்து வெகுவாக ஒரு நகைச்சுவையான ஆனால் எதிர்பார்க்காத முடிவை தருகிறது.

உங்களின் கேள்வி யார் அந்த மகேஷ் என்றால் படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...