திங்கள், 25 ஆகஸ்ட், 2025

CINEMA REVIEW - IDENTITY 2025 - TAMIL - திரை விமர்சனம் !




அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கிய இந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள படங்களின் வரிசையில் வெளிவந்த இந்த திரில்லர் எப்படி இருக்கிறது ? டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் வினய் ராய் இந்த  முக்கிய கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துள்ளனர் என்பதால் உண்மையில் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு மெயின் ஸ்ட்ரீம் ஆக்ஷன் மசாலா படம்தான் இந்த படம்

பெண்களை பிளாக்மெயில் செய்யும் அமர் ஃபெலிக்ஸ் என்ற குற்றவாளியின் கொலை வழக்கை மையமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. முகங்களை அடையாளம் காண முடியாத "ப்ரோசோபாக்னோசியா" என்ற மனநிலை கொண்ட பத்திரிகையாளர் அலிஷா இந்த விஷயத்தில் சிக்கிக்கொள்ள அவரின் மனதுக்குள்ளே இருக்கும் கொலையாளியின் முகத்தை வரைந்து கொடுக்கும் நபராக ஹீரோ டோவினோ களம் இறங்குகிறார். 

இங்கே வில்லனை நெருங்கும் போலீசாரின் விசாரணையில் பின்னால் ஹீரோவும் இணைவதால் பல அடுக்குகளைக் கொண்ட மர்மங்களை வெளிச்சமிடுகிறது. விமானத்தில் நடைபெறும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மலையாள சினிமாவில் இதுவரை ஹாலிவுட் சாயலில் காணாத ஒரு புதிய முயற்சி என்றே சொல்லலாம். 

அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு மற்றும் ஜேக்ஸ் பீஜாயின் பின்னணி இசை, திரைப்படத்திற்கு ஒரு மன அழுத்தம் மற்றும் வணிக ருசி கலந்த தனித்துவத்தை வழங்குகிறது. சில இடங்களில் திரைக்கதை சிக்கலாக இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக புதுமை நிறைந்த முயற்சியால் ஒரு நினைவில் நிலைத்திருக்கும் திரில்லராக திகழ்கிறது என்றே சொல்லலாம் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...