நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் கட்டுப்பாட்டுக்குள் நாம் மாட்டிக்கொள்வோம். இந்த வகையில் பெரும்பாலான தவறு நம்முடையதாகத்தான் இருக்க வேண்டியதாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நல்ல மனது உள்ள மனிதர்கள் மட்டும் தான் இந்த மாதிரியான விஷயங்களுக்குள் நன்றாகவே மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். இவ்வாறாக சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனுடைய வாழ்க்கையிலிருந்து மிகவும் கடினமான அளவுக்கு ஒரு சிறையில் அடைக்கப்பட்ட பறவையைப் போல சிறகுகள் இருந்தும் பயன்படுத்த முடியாத மிக கடினமான ஒரு செயலில் அவன் இருந்து கொண்டு இருப்பான். இந்த வகையில் நடக்கக் கூடிய செயல்கள் மிகவும் சோர்வடைய வைத்து நம்முடைய மனிதனை உடலளவில் மிகவும் காயப்படுத்த வைக்கிறது. மனதளவில் மிகவும் கண்டுகொள்ள முடியாமல் ஆக்குகிறது. ஆனால் இந்த விஷயத்தை அந்த மனிதன் செய்துதான் ஆகவேண்டும். இதற்கான காரணம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில்.எப்பொழுதுமே நாம் ஒரு விஷயத்தை அடைய வேண்டுமென்றால் அந்த விஷயத்தில் முழுமையான தொடர்ச்சியான கவனத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாம் அந்த விஷயத்தை விட்டுவிட்டால் நாம் கட்டாயமாக தோற்றுவிடுவோம் எனும் ஒருவகையான கட்டாயத்தில் நாம் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது யாருமே நமக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள்.நாம் தோல்வியை தடுப்பதற்காக கஷ்டப்பட்டு அந்த விஷயத்துக்காக போராடி ஜெயித்து காட்ட வேண்டும். மனிதர்கள் கொடுக்கும் அன்பும் நிரந்தரமானது கிடையாது. மனிதர்களிடம் இருந்து நாம் பெறக்கூடிய வெறுப்பும் நிரந்தரமானது கிடையாது. இவர்களை மாற்ற வைக்கும் சக்தி பணத்துக்கு மட்டும் தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக