சமீபத்தில் நடக்கக்கூடிய தவறுகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது பெரும்பாலான நேரங்களில் மனிதன் தங்களுடைய கௌரவம் என்றால் என்ன? என்பதையே தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது போல தோன்றுகிறது. கௌரவம் என்பது நம்முடைய எண்ணத்திலும் நமது செயல்களில் சரியாக இருப்பது. மேலும். நம் மீதான தாக்கம், நமது குடும்பத்தின் மீதான தாக்கம்,மற்றவர்கள ஏற்படுத்தும் ஆபத்துகளிலிருந்து நமது குடும்பத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தது ஆனால் தனிமனித ஒழுக்கத்தை விடவும்.கௌரவம் என்பது சரியாக பாதுகாப்பை பொறுத்ததே நம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தான் நமக்காக ஒரு கௌரவம் இருக்கிறது என்ற ஒரு வார்த்தை தோன்றுகிறது சமீபத்தில் காதல் திருமணத்துக்காக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரன் ஒரு தனிப்பட்ட பையனை தாக்கியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பையன் தனது உயிரை இழந்தான், கோபப்பட்ட சிறுவன் அவரைத் தாக்கி தனது வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறான். இதற்கெல்லாம் காரணம், அவர்கள் எங்கள் சாதி எங்கள் சமூகம் என்று கூறி இளைஞர்களை தங்கள் அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் மனதைக் கழுவுகிறார்கள். இது எங்கள் சமூகம், எங்கள் வரலாறு என்று அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு தங்கள் சொந்த ஆதாயத்தைக் காணக்கூடிய தாழ்ந்த மக்கள். இந்த சாதி என்ற ஒரு விஷயத்தையும் சாதி வெறியையும் யாராலும் மாற்ற முடியாது. இன்றும் கூட தேவையில்லாத பிரச்சனைகளையும் கொம்புகளையும் சுமந்து திருமணம் ஆகாமல் தனக்கென்று ஒரு அடையாளமும் இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு. சிக்கிக்கொண்டிருக்கும் நிறைய பேரை நாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.
வன்முறை என்பது தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய கருவி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வன்முறையால் மட்டுமே தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. உண்மையை சொன்னால், வன்முறை அடிப்படையில் முட்டாள்தனமானது. அந்தப் பிரச்சினைகளிலிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசிக்கத் தெரியாத முட்டாள்கள் மட்டுமே வன்முறையைப் பயன்படுத்துவார்கள். சரியானவர்கள் எப்போதும் தெளிவாகச் சிந்தித்து அமைதியாக முடிவுகளை எடுப்பார்கள். இங்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், பகுத்தறிவை தடுத்து இளைஞர்களின் மனதைக் கெடுப்பதன் மூலம் நாம் இப்படித்தான் செயல்பட வேண்டும். இப்படித்தான் அவர்கள் மற்றவர்களிடம் பேச வேண்டும். சாதி வெறி இல்லாத மற்றவர்கள் கொஞ்சம் கூட நாகரிகமற்றவர்கள் அல்ல என்றெல்லாம் இளைஞர்களை முட்டாள்களாக மாற்றக்கூடிய இந்த வகையான நாக்கில் விஷமுள்ளவர்களை நாம் எப்போதுமே திருத்த முடியாது . நாம் அவர்களைத் திருத்தினாலும், அதனால் பயனடையக்கூடியவர்கள் அவர்கள் அல்ல. இளைய தலைமுறையினர் விழித்தெழ வேண்டும். அவர்கள் சிந்திக்க வேண்டும். சாதி வெறியர்களும் இனவெறி பிடித்தவர்களும் பாம்புகளைப் போன்றவர்கள். அவர்கள் சுயநலத்துக்காக வெட்டியாக காசு வாங்காமல் காரியங்களைச் செய்து முடிப்பதைத் தவிர ஏமாறும் இளைஞர்களுக்கு வேறு எந்தப் பயனும் இல்லை. குடும்பத்தில் இருக்க கூடியவர்களுக்கு அன்பையும் சந்தோஷத்தையும் கூட கொடுக்க கூடாதுக்கு உங்களுக்கு அருகதை இல்லை என்றால் நீங்கள் இதுபோன்று சாதி வெறியை பிடித்து அலைந்து என்ன மயிரை சாதிக்கப் போகிறீர்கள் என்று இந்த வலைத்தளத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக