திங்கள், 4 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #6

˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗

"தேர்வு அறையில் உனக்குத் தெரியாமல்

ஒரு பேப்பர் கொடுக்க ஆசைப்படுகிறேன்..

அதில் விடைகள் எதுவும் இருக்காது!

'பயப்படாதே, உன் வருங்கால கணவன் நான் 

உனக்குப் பின்னால் தான் இருக்கிறேன்'

என்கிற ஒற்றை வரி மட்டும் தான் இருக்கும்..

உன் பயத்தைப் போக்க அது போதும் என்பதால்!"

 ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ 

"மழை பெய்து பள்ளிக்கு விடுமுறை விட்டால்

ஊரே கொண்டாடுகிறது.. எனக்கோ வருத்தமாக இருக்கிறது!

என் வீட்டின் சுவர்களுக்கு என்ன தெரியும் - உன்

முகம் பார்க்காமல் என் பொழுதுகள்

எத்தனை மெதுவாக நகர்கின்றன என்று?

இந்த மழையிடம் கொஞ்சம் சொல்..

பள்ளிக்குச் செல்லும் நேரத்திலாவது 

கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று!"

 ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗

குரூப் போட்டோ எடுக்கும் போது கூட

எல்லாரும் கேமராவைப் பார்க்கிறார்கள்..

நான் மட்டும் உன்னைப் பார்க்கிறேன்!

கேமராவில் விழும் என் பிம்பத்தை விட,

உன் விழிகளில் விழும் என் பிம்பம் தான்

காலத்திற்கும் அழியாமல் எனக்காக 

அழகாக இருக்கும் என்பதால்!"

 ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗

"அபார்ட்மெண்டில் கரண்ட் போகும் அந்த நேரங்களில்

வாசலில் வந்து நிற்காதே!

உன் முகத்தின் வெளிச்சத்தை பார்த்துவிட்டு,

மின்சாரம் வந்துவிட்டது என்று நினைத்து

மெயின் ஸ்விட்ச்சை போடாமல்

எலக்ட்ரிஷியன் அப்படியே ஏமாந்து போய்விடுவார்!"

 ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗

"உன் வீட்டு வாசலில் நின்று

நான் அடிக்கும் அந்த ஒற்றை விசில் சத்தம்..

நண்பர்களை கிரிக்கெட்டிற்கு அழைக்க அல்ல!

என் இதயம் உன் வீட்டுப் பக்கமாக 

தடம் மாறி வந்துவிட்டது,

அதை பத்திரமாகத் திருப்பி அனுப்பிவிடு

என்று உன்னிடம் சொல்லும் ரகசிய சைகை!

உன்னை பார்த்துவிட கொஞ்சம் ஆசைதான்"

 ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ ˗ˋˏ ♡ ˎˊ˗ 

கருத்துகள் இல்லை:

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #12

  "நண்பர்களோடு பைக் ரேஸ்  வைக்கும்போது வேண்டுமென்றே  நீ இருக்கும் தெருவை கடந்தால்  நான் கடைசியாக வருகிறேன்!  எனக்கு வேகம் தெரியாது என்ப...