Saturday, October 26, 2024

GENERAL TALKS - 001 - இங்கே மன நிறைவுக்காக ஒரு நுட்பமான போராட்டம் !

 



ஒரு காகித விமானத்தை உருவாக்கி சந்தோஷமாக குழந்தைகள் விளையாடுவதுபோல் பறக்க விடுவதை போல வாழ்க்கை அவ்வளவு சுலபமாக யாருக்குமே இருப்பதில்லை. உண்மையான வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் மனிதனுக்கு தான் தெரியும் அவனுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று. 

பெரும்பாலான நேரங்களில் இது போன்ற கடினமான வலி மனதையே உடைத்து விடுகிறது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் எடுத்துப் பாருங்களேன் அவர்களில் கொஞ்சம் பேருக்கு மட்டும் தான் அவர்கள் என்னவாக வாழ நினைக்கிறார்களோ அந்த வாழ்க்கையை வாழ அவர்களுக்கு தேவையான பணத்துடன் வாழ்கின்றார்கள். 

இவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் காட்டாறு வெள்ளமாக பயந்து கொண்டிருக்கிறது. இப்படியே போதுமான பணம் இல்லாதவர்களுடைய வாழ்க்கையை பார்த்தால் அது நரகத்துக்கு சமமாக தான் இருக்கிறது. ஒரு ஒரு நாளும் எதுக்காக இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் போது மனதுக்கு மிகவும் பாரமாக இருக்கிறது இத்தகைய பாரம் ஒரு கடினமான உணர்வாகும். 

நிறைய நேரங்களில் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று நம்முடைய மனதை நாமை திருப்திப்படுத்திக் கொள்கிறோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற ஒரு உலக மகா பொய் சொல்லி இந்த மனதை நாம் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியும். 

இந்த உலகத்தில் பணத்தை தவிர்த்து வேறு எதுவுமே வாழ்க்கை இல்லை என்பதுதானே நிதர்சனம்‌. ஒரு மனிதன் என்னவாக வாழ நினைக்கிறான் என்பதை யோசித்து அவனுக்கு மனதுக்கு சரியென்று படும் விஷயங்களை அவன் நேரடியாக செய்துகொண்டு வாழ்ந்தால் மட்டும் தான் அவனுக்கு அந்த மன நிறைவு கிடைக்கும். இந்த மனநிறைவு என்பது இந்த குறிப்பிட்டதக்க நிலையான வாழ்க்கையில் நாம் என்ன ஆசைப்பட்டோமோ அதனை நிறைவேற்றி விட்டோம் என்றால்தான் முழுமை அடையும். நாம் என்னவாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற ஒரு நிலைப்பாடு வந்தால் தான் கிடைக்கும். 

வேறு எந்த ஒரு விஷயத்தையும் இந்த மன நிறைவிடம் கொடுத்துப் பாருங்கள் கண்டிப்பாக கிடைக்காது இந்த மன நிறைவுக்காக நீங்கள் போராட வேண்டும் இந்த மன நிறைவு மட்டும் உங்களுக்கு கிடைத்துவிட்டால் உங்களுடைய வாழ்க்கைக்கான காரணத்தை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்த மன நிறைவு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாம் இறந்து போகும்போதும் கூட நம்மால் நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்த முடியவில்லை என்ற குற்ற உணர்வுடன் ஒரு இயலாமையில் ஒரு காலியான மனதுடன் தான் நாம் இறந்து போக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்த உலகத்தின் தவிர்க்க முடியாத நியதியை கண்டுபிடிக்கவே ஒரு மெச்சூரிட்டி தேவைப்படுகிறது இந்த நிதியை கண்டுபிடித்த பின்னால் நம்முடைய வாழ்க்கை இன்னும் கஷ்டமாகத்தான் மாறுகிறது. இந்த நம் மன நிறைவுக்காக இப்போதே நம்முடைய போராட்டங்களை தொடங்கிக் கொண்டே இருப்போம். இந்த தீர்க்கமான மன நிறைவானது நமக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாக மட்டும்தான் கிடைக்கிறது. இல்லை இது நமக்கு உழைப்பால் கிடைக்கும் என்று மென்டல்தனமாக நம்பினால் அது அவ்வளவு சரியாக இருக்காது. இருந்தாலும் நாம் போராடிக் கொண்டே இருந்தால் தான் அதிர்ஷ்டம் அடித்து நமக்கு இந்த விஷயம் கிடைத்துவிடும். போராடுவதற்கான நம்பிக்கை நம்மோடு இருக்கிறது. இந்த மன நிறைவு நமக்கு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமான போராட்டத்திற்காக நாம் போராடிக் கொண்டே இருப்போமாக. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...