"உன் தண்ணீர் பாட்டிலில் இருக்கும்
கடைசித் துளியாக நான் இருக்க ஆசைப்படுகிறேன்..
வெயிலில் வாடி நீ களைத்து வரும்போது,
உன் தாகம் தீர்க்கும் சாக்கில்
உன் இதழ்களை ஒருமுறை தீண்டிவிட்டு மறைந்துவிட!"
𓍢ִ໋🌷͙֒𓍢ִ໋🌷͙֒𓍢ִ໋🌷͙֒
"மின்சாரம் போன அந்த இரவு நேரங்களில்
அபார்ட்மெண்ட் மொட்டை மாடிக்கு வராதே!
இருட்டில் நிலவு என்று நினைத்து
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
உன்னைச் சுற்றி மொய்க்கத் தொடங்கிவிடும்..
அப்புறம் உன்னைத் தேடி நான் எங்கே போவேன்?"
𓍢ִ໋🌷͙֒𓍢ִ໋🌷͙֒𓍢ִ໋🌷͙֒
"உன் வீட்டு வாசலில் என் சைக்கிள் செயின்
அடிக்கடி கழன்று கொள்கிறது!
அது துருப்பிடித்துப் போனதால் அல்ல..
அதைச் சரி செய்யும் சாக்கில்
இன்னும் சில நிமிடம் உன் வீட்டு ஜன்னலைப் பார்க்க
அது எனக்காகச் செய்யும் ஒரு சின்ன உதவி!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக