Monday, December 30, 2024

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !



புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். இருவரும் உணவு உண்டபிறகு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் அந்நேரம், "அப்பா. அப்பா. இந்தப் புது வருடத்துக்கு எனக்கு ஏதும் பரிசு இல்லையா?” என்று கேட்டாள் மகள். "ம்ம். ம். கண்டிப்பா உண்டுடா செல்லம், உனக்கு என்ன வேணும் சொல்லு?” கேட்டார் அப்பா. அப்பாவின் கைகளைப் பிடித்தவாறே, "எனக்குப் புது ஷூ வாங்கித்தாங்கப்பா, அதுவும் பாட்டா ஷூ வேணும். ” என்றாள் "நாளைக்கு வாங்கித் தர்றேன். இப்ப போய் தூங்கும்மா. ” என்றார் அப்பா. மகள் கேட்டபடியே, புத்தாண்டு அன்று காலை புது ஷூ வாங்கிக் கொடுத்தார் அப்பா. மிகுந்த மகிழ்ச்சியோடு, புத்தாண்டுப் பரிசைப் பெற்றுக் கொண்டாள் மகள். சிறிது நேரம் கழித்து, அந்தப் புது ஷூவை பரிசுப் பொருளாக வண்ணத்தாளை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். இதைக் கவனித்த அப்பா, "யாருக்கு இந்தப்பரிசைக் கொடுக்கப் போற?” என்று கேட்டார். "அது வந்துப்பா. அடுத்த தெருவுல இருக்கிற ஒரு பொண்ணுக்குத் தரப் போறேன். பாவம்ப்பா அந்தப் பொண்ணு! அவகிட்ட ஒரே ஒரு ஷூதான் இருக்கு. அதவும் கிழிஞ்சிருக்குப்பா. தன்னோட கிழிஞ்ச ஷூவை யாராவது பார்த்துவிடுவாங்கன்னு, பொண்ணு மறைச்சு மறைச்சு கஷ்டப்படுறதைப் பல நேரம் கவனிச்சிருக்கேன். அதனாலதான் புத்தாண்டுப் பரிசா புது ஷூ கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று தயக்கத்தோடு சொன்னாள் மகள். "ரொம்ப நல்ல காரியம். கண்டிப்பாக செய். ஆனா, என்கிட்டே பரிசு உனக்குன்னு ஏன் பொய் சொல்லிக் கேட்டே?” என்று அப்பா செல்லக் கோபத்துடன் கோட்டார். "அப்பா, ஒருவேளை நான் சொல்லியிருந்தா, நீங்க அடுத்த பொண்ணுக்குத்தானே என்று மலிவான விலையில் வாங்கி வரக்கூடும். அதனாலதான் எனக்கு வேணும்னு பொய் சொன்னேன். ” என்று தைரியமாகச் சொன்னாள் மகள். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார் அப்பா! புத்தாண்டுக்காகத் தயார் செய்திருந்த உணவுப்பண்டங்களை ஒரு கை பார்த்தபின், தன்னுடைய புத்தாண்டுப் பரிசை கொடுப்பதற்காக கிளம்பிச் சென்றாள் மகள். ஆனால் போன சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள். இதைக் கவனித்த அப்பா, "என்னமா, அந்த பொண்ணு வீட்டுல இல்லையா? அதுக்குள்ளேயே வந்திட்டியே?” என்றார் அப்பா. "நான் அந்த பொண்ணுகிட்டே பரிசு கொடுக்கலைப்பா. அவுங்க வீட்டுக் கதவுகிட்ட வெச்சிட்டு ஓடி வந்துட்டேன். ” என்றாள் மகள். ""ஏன், அந்த பொண்ணு கூட சண்டையா? இல்லை கொடுத்தா வாங்க மாட்டாளா?” என்று அப்பா கேட்க, "நான் ஒருவேளை அந்தப் பரிசைக் கொடுத்தா அந்த பொண்ணு வாங்கிக் கொள்வாள். ஆனால் அதுக்குப் பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் நன்றியுணர்ச்சியோடு பார்ப்பாள். இயல்பாப் பழகமாட்டா, ஒரு உதவியாளனாகத்தான் என்னைப் பார்ப்பாள். கடவுள் உண்டியலில் போடும் காசுக்கு விளம்பரம் தேவையா?” என்றாள் பிஞ்சுக் குரலில் மகள். பிறருக்கு உதவ வேண்டுமென்று எண்ணும் தனது பன்னிரண்டு வயது மகளைப் பார்த்து நெகிழ்ந்து போனார் அப்பா! - இன்னொருவருடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு உதவி செய்வது எப்போதுமே ஸ்பெஷல்லான விஷயம் இல்லையா ? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ?

GENERAL TALKS - மன சிறையின் மர்மம் !




ஒரு நாள் ஆசிரியர் வகுப்பறையில் மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டி “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” என மாணவர்களிடம் கேட்டார். 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” ஆசிரியர் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா……?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மறத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”என்றார். இந்த நொடி உங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் சரி. உங்களுடைய பிரச்சனைகளுக்கு வெளியே வந்து யோசித்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய பிரச்சனைகளை உங்களால் சரிபண்ண முடியும். மனம் நாம் வேலை பார்க்கும் தொழிற்சாலையை போன்றது. ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்பதற்காக வேலை பார்ப்பதை விட்டுவிட்டு மனதை சிறைச்சாலையாக மாற்றக்கூடாது இல்லையா ? யோசிங்க மக்களே !

ARC-004 - இன்டஸ்ட்ரியல் கம்யூனிக்கேஷன் !




ஒரு நேஷனல் ஹைவேயை இணைக்கும் சிறு சாலை. சாலை, பக்கமிருந்த விளை நிலங்களிலிருந்து சற்றே உயரத்தில் இருந்தது. சாலையை விட்டு இறங்கி ஒருவன், எதையோ நிலத்தில் சில கருவிகளால் அளந்து கொண்டிருந்தான். அப்போது சாலையில் வேகமாக வந்த ஒரு கார் வழுக்கிக் கொண்டு நின்றது. இவன் திரும்பி பார்க்க, கண்ணாடியை இறக்கிவிட்டவாறே ஒரு பெண். “ஹலோ! ஒரு ஹெல்ப். என் ப்ரண்ட பார்க்க அவசரமா போறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை. கொஞ்சம் உதவ முடியுமா?” செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு, காரை நோக்கி பேசிக்கொண்டே வந்தான். “இப்ப நீங்க நான் இருக்குற இடத்தில இருந்து பத்து அடி உயரத்துல இருக்கீங்க. கடல்மட்டத்துல இருந்து, 3000 அடி உயரத்துல. சென்னைக்கும் பெங்களூர்க்கும் இடையே 120 கிலோமீட்டர் தூரத்துல 41 டிகிரி ஆங்கிள்ல இருக்கீங்க. ” யோசித்த பார்வையுடன், ஸ்டிரியங் பக்கம் திரும்பினாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்து கொண்டாள். திரும்பி அவனிடம், “நீங்க ஒரு இன்ஜினியராத்தான் இருக்கணும். ” நடந்து வந்து கொண்டிருந்தவன் நின்றான். “ஆமாம். எப்படி சொல்றீங்க?” “நீங்க சொன்னது எல்லாம் டெக்னிக்கலா கரெக்ட். இருந்தும் அதுல எனக்கு தேவையான தகவல் எதுவும் இல்லை. ஸோ, இன்னமும் நான் தொலைந்த நிலையில் தான் இருக்கிறேன். உண்மையிலே, நீங்க சொன்னது எதுவும் எனக்கு உபயோகமா இல்லை. என் பயண நேரத்தை இன்னும் சிறிது வீணாக்கியது மட்டும் தான் உங்களால் முடிந்தது. ” நின்றவன் திரும்பி, தான் நடந்து வந்த தூரத்தையும், தூரத்தில் இருந்த தன் கருவிகளையும் பார்த்தான். அவளிடம் திரும்பி, “நீங்க மேனேஜரா?” “ம். எப்படி சொன்னீங்க?” வலது கரத்தை தன் வயிற்றுக்கு குறுக்கே வைத்து, இடது கையால தன் கன்னத்தை தட்டியவாறே, “ம்ம்ம். உங்களுக்கு நீங்க எங்க இருக்கீங்கன்னும் தெரியலை. எங்க போறீங்கன்னும் தெரியலை. இப்ப இந்த கார்ல இந்த உயரமான ரோட்ல இருக்கீங்க. ஒரு வாக்குறுதி வேற கொடுத்திருக்கீங்க. ஆனா, அதை எப்படி காப்பாத்த போறீங்கன்னும் தெரியாம கொடுத்திருக்கீங்க. இந்த லட்சணத்துல, உங்களுக்கு கீழே இருக்குறவன், உங்க பிரச்சினையை எல்லாம் தீர்க்கணும்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு. பின்ன, நீங்க மேனேஜராத்தான் இருக்கணும். இந்த உலகத்தில் எவ்வளவோ மொழிகள் இருந்தாலும் செய்யும் வேலையால் கிடைக்கும் இந்த வகை கம்யூனிக்கேஷன்க்கு மனிதர்களோடு இணைந்து வேலை பார்க்கும் அனுபவம்தான் காரணம் !

ARC-003 - அடடா , நான் உடைந்தேனே உதிரி பாகமா ?




ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்! ! ”நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?” அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், ”நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?” ஞானி சிரித்தார்! ! முதல் ஆளிடம், ”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா ”என்றார். இரண்டாமவனிடம், “நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா” என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி சொன்னார், ”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள், ” என்றார். முதல்வன், பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன், “இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?” என்று கேட்டான். ஞானி சொன்னார், “முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத் தான் மீட்சி என்பது மிகக் கடினம்! ” என்றார். மொத்தமாக மக்களை நம்பவைத்து பணத்தை ஏமாற்றி செல்லும் MLM கம்பெனிகள் பெரிய பாவமாக செய்யவில்லை என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். இங்கே உலகத்திலேயே மிக மோசமான பாவத்தை இவர்கள் செய்கிறார்கள் !


ARC-002 - வேலை பார்க்க முடிவு எடுத்துவிட்டால் !




மாவட்ட அளவிலான ஒட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சி எடுத்து களத்தில் ஒடுவதற்கு தயாராக இருந்தான் மணி. எப்படியாவது முதல் பரிசு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்துது. விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையைப் போல பறந்தன. எல்லாரையும் முந்தி ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தான். பரிசு வாங்கிய கைகயோடு வீட்டிற்கு சென்றான். வயலில் உழுது கொண்டிருந்த அப்பாவை நோக்கி சென்று பரிசைக் கொடுத்தான். அவனது அப்பா மிகுந்த மகிழ்ச்சியோடு உனது விடாமுயற்சிக்கும், தொடர் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பாராட்டினார். சில மாதங்கள் கடந்தன. பொங்கல் தினத்தன்று மணியின் ஊரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஊரார் முன்னிலையில் ஓட தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை. கால்களில் ஏதோ வலி தெரிந்தது. பரிசு பெறவே போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசு பெற்றான். தன்னால் முதல் பரிசு பெற முடியவில்லையே என்று வருத்ததோடு அப்பாவிடம் சொன்னான். அப்பா மணியின் தோள்களில் கை வைத்து ‘இந்த ஏர்கலப்பையை பார்த்தயா, இதை ஒரு வாரம் தான் பயன்படத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது. இதுபோல தான் உன்னிடம் திறமையும், ஆற்றலும் இருந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சி இல்லை. அதனால் தான் உன்னால் பழைய வேகத்தில் ஓட முடியலப்பா” என்றார் அப்பா ‘வெற்றி பெற உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் துருப்பிடித்துப் போய்விடுவோம்” என்பது மணிக்கு புரிந்தது. இங்கே வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தால்தான் இளமையின் வெற்றியை முழுதாக அனுபவிக்க முடியும் என்பதை சொல்லும் இந்த இன்டர்நெட் கதை !

ARC-001 - இலக்கண கவிதை எழுதிய அழகே !




ஒரு மனைவி தன் கணவனின் புதிய மொபைலை எடுத்து சோதித்து பார்க்கிறாள்.

அப்பொழுது அதில் மூன்று வித்யாசமான பெயரை பார்க்கிறாள்.
1. கனிவானவள்
2. கண்ணியமானவள்
3. கனவுக்கன்னி.

இதை பார்த்தவுடன் கோபமாக. முதல் நம்பருக்கு போன் செய்கிறாள் அப்போது அந்த எண்ணின் மறுமுனையிலிருந்து அவளது கணவனின் தாயார் பேசுகிறார்.

இரண்டாவது நம்பருக்கு போன் செய்கிறாள். அப்போது அந்த எண்ணின் மறுமுனையிலிருந்து அவளது கணவனின் சகோதரி பேசுகிறாள்.

மூன்றாவது நம்பருக்கு போன் செய்கிறாள் அப்போது அவளது சொந்த போனே ரிங் ஆனது.

அவளுக்கு மிகவும் வருத்தமாகி, இவ்வளவு ஒரு நல்லவரை நாம சந்தேகபட்டு விட்டோமே என்று கண்கள் வீங்கும் அளவுக்கு அழுது தீர்க்கிறாள்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த செயலுக்கு ஈடுகட்ட அவனது முழு சம்பளத்தையும் அவனுக்கே கொடுத்து, "இது என் சிறிய பரிசு உங்களுக்கு, என்ஜாய்" என்று கூறுகிறாள்.

உடனே அந்த கணவன் அந்த பணத்தில் ஒரு அழகான விலை மதிப்புள்ள பரிசை வாங்கி "மெக்கானிக் கடை" என்று மொபைலில் சேவ் செய்து வைத்துள்ள தோழிக்கு(?) பரிசாக கொடுத்தான் !



STORY TALKS - 071 - தரமற்ற பொருட்களும் சேவைகளும் !



பிரிட்டன் நாட்டில் ஒருமுறை, ஒரு விவசாயி. ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் சரியான அளவுக்கு வெண்ணைய் இல்லை என்று கண்டுபிடித்தார், எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். நீதிபதி இந்த வழக்கை நன்றாக ஆராய்ந்து வெண்ணெயை எடைபோட நீங்கள் ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “மரியாதைக்கு உரிய நீதிபதி அவர்களே, நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம் ஒரு அளவு உள்ளது அதற்கு நீதிபதி, “அப்படியானால் வெண்ணெயை எப்படி எடை போடுகிறீர்கள்?” என்று கேட்டார். விவசாயி பதிலளித்தார். “யுவர் ஹானர், பேக்கர் என்னிடமிருந்து வெண்ணெய் வாங்கத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நான் அவரிடமிருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்குகிறேன். தினமும், பேக்கர் ரொட்டி கொண்டு வரும்போது, நான் அதை தராசில் வைத்து, வெண்ணெயில் அதே எடையைக் கொடுப்பேன். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றால், அது சுடுபவர்தான். ” வாழ்க்கையில், நீங்கள் கொடுப்பதைப் பெறுவீர்கள். மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். பொதுவாக வணிகத்தின் அடிப்படையே நம்பிக்கை , நாணயம் , நன்மதிப்புதான் - மற்ற வியாபாரிகள் மலிவு விலையில் தரம் குறைந்த ப்ராடக்ட்களை கொடுக்கும்போது நாம் தரமான ப்ராடக்ட்களை கொடுத்தால் ஆரம்பத்தில் பெரிய இலாபம் என்று எதுவுமே இல்லாமல் இருக்கலாம் ஆனால் எப்போதும் தரத்திலும் , கொடுக்கும் பொருளுடைய வேல்யூ ஃபார் மணி ரேஸியோவிலும் கை வைக்கவே கூடாது. இதுதான் வணிக வெற்றியின் நாணயத்தை உருவாக்குவாதற்கான அடிப்படை ! இதனை விட்டுவிட்டு வணிக வெற்றி அடைபவர்களின் சாம்ராஜ்ஜியம் வெகு நாட்களுக்கு நிலைக்காது ! மக்களுக்கு மோசமான சேவை அல்லது பொருட்கள் கொடுக்கும் நிறுவனமும் வெகு நாட்களுக்கு தேறாது !



GENERAL TALKS - மோசமான விளைவுகளை தடுக்க முடியாத நிலை !



ஒரு புதிய நாளில் புவியின் ஒரு பகுதியில் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அடடா இந்தக் குருவிக்கு கேடு காலம்! வந்து விட்டதே என்பதை உணர்ந்த கருட பகவான் உடனடியாக அந்தக் குருவியை தூக்கிக்கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப் பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்தப் பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை விழுங்கி விட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்தியது கருட பகவான். குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்". அந்தக் குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் விதிப்படியே அது நடந்து விட்டது" என்று கூறினார். ஒருவருடைய  வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், வாழ்க்கையை வாழுங்கள். ஒருவருடைய எதிர்காலத்தை இன்னொருவரால் நிறைய நேரங்களில் மாற்றவே முடியாது/ மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் விளைவுகள் கூட பின்னடைவாகத்தான் இருக்கும். ஒரு அனுபவம் நிறைந்த மேலதிகாரி தனக்கு உதவியாக இருக்கும் அதிகாரிகளிடம் அட்வைஸ் பண்ணும்போதும் அல்லது ஒரு ஆசிரியர் தங்களுடைய மாணவர்களுக்கு உதவிகளை செய்ய நினைக்கும்போதும் இவை அனைத்துமே பயன் இல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. போதை பழக்கத்தால் கொடியோர் சவாகாசத்தால் இன்றைக்கு தேதிக்கு கூட வாழ்க்கையை இழக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுடைய விதி இவர்களை ஆட்டி படைக்கிறதா ? என்பது நமக்கு புரிவது இல்லை. இருந்தாலும் இந்த அடிப்படையான மோசமான அதிர்ஷ்டம் ஒரு மனிதனை மிகவும் கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்கிறது. மோசமான அதிர்ஷ்டம் வரும் நாட்களில் எல்லாம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நடக்கும் பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து மற்றவர்களை காப்பாற்ற முடியாமல் போவது எதனால் நடக்கிறது என்பது இன்னுமே ஒரு புரியாத புதிராக இருக்கும் யோசிக்க வேண்டிய விஷயம் !



GENERAL TALKS - சமூக மதிப்பை கெடுக்க நினைப்பவர்கள் !






ஒரு வெளிநாட்டு நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்னை பற்றி என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள். இவ்வாறு சொன்னாள் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்" இளைஞன் உரக்ககச் சொன்னான். என்னது? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? இவ்வளவு தொகை மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்!  ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும். இந்த சம்பவத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் யாரையும் நம்முடைய சுய இலாபத்துக்காக அவமானப்படுத்த கூடாது. மோசமான ஆட்கள் சுய இலாபத்தை எப்போது வேண்டுமென்றாலும் பெரிதாக கருதலாம் இங்கே இன்னொருவரின் சுய மரியாதையை இறக்கி விட்டுதான் வெற்றியை அடையவேண்டும் என்ற தப்பான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள கூடாது. சமூக மதிப்பு மற்றும் சமுதாய மதிப்பு என்று ஒரு விஷயம் இருக்கிறது. மிக தாழ்மையான ஆட்கள்தான் இந்த சமுதாய மதிப்பை விளையாட்டாக கெடுத்து இன்னொருவருக்கு சமுதாய மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்று கூட யோசிக்காமல் மலிவான விஷயங்களில் ஈடுபடுவார்கள். ஒரு வியாபாரியை எடுத்துக்கொள்ளுங்கள் - இவருக்கு நிறைய வணிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அவருடைய நாணயம் சிறப்பானதாக இருக்க வேண்டும். இந்த நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்று இன்னொருவர் வேலை பார்த்தால் கடைசியில் கஷ்டப்படுவது பாதிக்கப்பட்டவர்கள்தானே. இதனை கோபமாக எடுத்துக்கொள்ள கூடாது கலகலப்பான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமானது ?

STORY TALKS - 070 - போதுமான விவரம் இல்லாமல் எல்லோருடனும் பழக முடியாது !



ஒரு மலை பிரதேசத்தில் செழிப்பான வேலி போடப்பட்ட ஒரு புல்வெளியில் ஒரு பெரிய மந்தையாக ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் அசந்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்? " என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா. இங்கே பசுமையான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! பசுமையான இளம் புற்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை. ” என்று வருத்தத்துடன் கூறியது. "அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? " என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே. அதெலாம் சுத்தப் பொய்! " என்றது ஓநாய். "அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்! " என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. "உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது அந்த ஆட்டுக் குட்டிக்கு தானாகத் தெரியவில்லை. ஒரு வகையில் பெற்றோர்கள் ஒருவரை பற்றி தவறான விஷயத்தை சொல்லி இவரது சவகாசம் வேண்டாம் என்று சொன்னார்கள் என்றால் யோசிக்காமல் நாங்க புது ஜெனரேஷன் இப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பழகுவோம் என்று சொல்லி ஃபயர் விடாமல் எதுக்காக அப்படி சொல்கிறார்கள் என்று யோசித்து பழகுங்கள். தோழமை என்ற பெயரில் தவறான விஷயங்களில் கொண்டு சென்று பாதளத்தில் தள்ளிவிட்டு சுய இலாபம் பார்க்கும் ஆட்களும் இருக்கதான் செய்கிறார்கள். கவனமாக இருங்கள். விவரம் இல்லாமல் ஒருவரை கண்ணை மூடிக்கொண்டு நம்பி ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எச்சரிக்கை தேவை !

STORY TALKS - EP.069 - ஒரு தவறான கதை - புரிந்துகொள்ளவேண்டிய லாஜீக் ! - 2



போலி நோட்டுகள் நம்முடைய நாட்டுக்கே பின்னடைவு, இது போல போலி நோட்டுகளால் மக்களின் கஷ்டம் போய்விடும் என்று சொல்வது தவறான செயல். உதாரணத்துக்கு ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டால் இவ்வாறு ஒதுக்கப்படும் பணம் சும்மா கிடைத்த வரிப்பணம் அல்ல. மாறாக நாம் கஷ்டப்பட்டு விளைவித்த உணவை வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பதால் உருவாகும் வேல்யூதான் வெளிநாட்டு கரன்ஸியாக நமக்கு வருகிறது.  இந்த கரன்ஸியின் ரிசர்வ் எவ்வளவு இருக்கிறது என்று கொடுக்கும் வேல்யூவை பொறுத்துதான் ஒரு போது நல திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் ! ஒரு வகையில் போலி நோட்டும் கணக்கு காட்டப்படாத ஊழலும் நேருக்கு நேராக சந்திக்கிறது ! 

பெர்ஸ்பெக்டிவ் - 1 

பள்ளிக்கூடம் கட்ட 2.5 C நிதி ஒதுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நிதியில் 2.2 C செலவில் பள்ளி கட்டப்பட்ட பின்னால் குடிசைகள் நிறைந்த அந்த கிராமத்தில் படித்தவர்கள் 10 வருடத்தில் நமது நாட்டில் அல்லது வெளிநாடுகளில் நன்றாக சம்பாதிக்கும் இளம் தலைமுறை ஆவார்கள். குடிசைகள் மட்டுமே இருந்த அந்த கிராமத்தை தரமான இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த கிராமமாக மாற்றுகிறார்கள் ! 5 வருடத்தில் அந்த கிராமம் செல்வ செழிப்பு மிக்க பெரு நகரமாக மாறுகிறது. மருத்துவமனை , சாலைகள் , காம்ப்லெக்ஸ் என்று எல்லாமே இந்த நகரத்தில் இருக்கிறது. இப்போது இந்த நகரத்தின் தொழில்களின் வேல்யூ 1000 கோடியை தாண்டுகிறது. 

பெர்ஸ்பெக்டிவ் - 2 

நம்ம அரசியல் புள்ளி 2.5 C ல் 2 C பணத்தை பாக்கெட்டில் போட்டு கடைசி வரையில் பள்ளிக்கூடம் கட்டாமல் ப்ராஜக்ட்டை இழுத்தடித்து பின்னால் கனமான மழையால் கட்டிய குட்டி சுவர்களும் இடிந்துவிட்டது என்று ட்ராமா போடவும் படிப்பறிவு இல்லாத பிரிவினையில் இருக்கும் மக்களும் சென்டிமென்டால் மண்டையை ஆட்டிக்கொண்டு இந்த புள்ளியின் தொழிற் பேட்டையில் பசங்களை வேலைக்கு அனுப்பி புள்ளியின் பலத்தை அதிகப்படுத்தி வாழ வைக்கிறார்கள். புள்ளியை படித்தவர் யாரேனும் கேள்வி கேட்டால் இவன் இந்த குலத்தில் பிறந்தவன் இவன் ஒரு முட்டாள் என்று புள்ளி மற்றவர்களின் பார்வைக்கு குற்றம் சுமத்தி வாழ்க்கையை நாசம் செய்கிறார். ஒரு பள்ளிக்கூடமாக மாறவேண்டிய பணம் பின்னாட்களில் சொகுசு பங்களாவாக மாறுகிறது. கெத்து ! மாஸ் ! வேற லெவல் ! இல்லையா ? 15 வருடத்தில் கிராமம் வறுமையில் வாடவும் ஒரு நல்ல ரோடு கூட நல்ல ஆஸ்பத்தரி கூட இந்த கிராமத்துக்கு அமையவே இல்லையே ? 


STORY TALKS - EP.068 - ஒரு தவறான கதை - புரிந்துகொள்ளவேண்டிய லாஜீக் ! - 1




இந்த கதை இப்படி ஆரம்பிக்கிறது ! - ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக பிரதி ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான். சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார் மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர். ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடி டாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைகளுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர். டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர். காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர். கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார். ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை. வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம். முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது. ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம். - இப்படியாக இந்த கதை முடிகிறது !

GENRAL TALKS - ஒரு பழைய கதை - சமூகத்தில் மாறாத ஒரு விஷயம் !



ஒரு அரசன் இருந்தார். அதிகாலை எழுந்ததும் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவர் வழக்கம் போல அன்றும் சாரளத்தைத் திறந்த அவருக்கு ஏமாற்றம். மப்பும் மந்தாரமுமாக இருந்த வானத்தில் சூரியனைக் காணவில்லை. கண்களைக் கீழே இறக்கிய போது தூங்கி எழுந்து சோம்பல் முறித்த ஒரு பிச்சைக்காரனைக் கண்டார். அரசனைப் பார்த்ததும் அவன் கண்களில் ஒளி பிறந்தது. “அரசே” என கையெடுத்துக் கும்பிட்டு மண்டியிட்டான். ஆனால், அரசனின் மனநிலை வேறுவிதமாக இருந்தது. “போயும் போயும் இவன் முகத்திலா விழித்தோம்“ என்று வெறுப்புடன் திரும்பினார். அரசர் திரும்பிய வேகத்தில் அரண்மனை தூண் அவரது தலையை பதம் பார்த்து விட்டது. அடிபட்ட இடத்தில் இருந்து இரத்தம் வழியத் தொடங்க, அரசருக்கு வந்ததே கோபம். பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட் ட்டார். காவலர்கள் பிச்சைகாரனை இழுத்துவந்து அவர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. "இந்தக் கேடு கெட்ட முகத்தில் விழித்த எனக்கு கிடைத்த பரிசைப் பாருங்கள். எனது காயத்துக்கு காரணமாக இருந்த இவனை தூக்கிலிடுங்கள்." என்று அதிரடியாக தண்டனை கொடுத்தார் அரசர். உதவி கிடைக்கும், வாழ்க்கை வளமாகும். அரசர் ஏதோ தனக்கு அள்ளித்தரப் போகிறார்.” என்று கனவோடு வந்த பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி தான். ஆனால், அவன் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் பழகிப் போனதால் அவன் கலங்கவில்லை. அவன் வாழ்க்கையில் இழப்பதற்கு ஏதும் இல்லை. குடும்பமா, குட்டியா? ஒரு வேலை கஞ்சி தானே பிரச்சனை. எனவே மன்னனை எதிக்கத் துணிந்தான்.  பிச்சைக்காரன் கலகலவென சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைத்தனர். அரசனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. "பைத்தியக்காரனே! சாகுமுன்பு ஒருமுறை சிரித்துக்கொள்ள நினைத்தாயா?" என கோபமாகக் கேட்டார். பிச்சைக்காரன் நிதானமாக சொன்னான். " அரசே! என் முகத்தில் விழித்ததனால் உங்கள் தலையில் சிறு காயமே ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் விழித்ததனால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன். சிரித்தேன். கேடு கெட்ட முகம் எதுவென்று எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்" என்றான். மன்னனின் தலை அவமானத்தால் கவிழ்ந்தது. தனது தவறை உணர்ந்து தண்டனையை ரத்து செய்தான். பிச்சைகாரனுக்கு உணவும் உடையும் பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான். பிரச்சனையான நேரத்தில் அழுது புலம்புவதை விட்டு, தீர்வைத் தேடுவதே புத்திசாலித்தனம். ஆபத்துக் கால தன்னம்பிக்கை உயிரையும் காக்கும். வேண்டுமென்றே தவறு செய்பவர்களிடம் கெஞ்சி புலம்புவதில் எந்த பயனும் இல்லை. நேருக்கு நேராக மோதுவது போல அடித்து பேசுவதுதான் வேலைக்கு ஆகிறது. குறிப்பாக உயரத்தில் இருந்து நம்மை கீழாக பார்ப்பவர்கள் கண்டிப்பாக நம்முடைய நன்மைக்கு உதவவே மாட்டார்கள். நாம்தான் நம்மை இத்தகையை மமதை பிடித்த முட்டாள்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 


STORY TALKS - EP.067 - பேச்சு சாமர்த்தியம் காரியங்களை முடிக்கிறது



இங்கே பேச்சு சாமர்த்தியம் பெரும் விளைவுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. ஒரு குடும்பத்தில் நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொன்னார், பையன் சொன்னான். என்னால் முடியாது டேய் அது உலகத்துடைய நம்பர் ஒன் பணக்காரருடைய பொண்ணு என்று சொன்னார். உடனே பையன் யோசித்துவிட்டு டபுள் ஓகே அப்பா என்று சம்மதம் தெரிவித்தான். தன்னுடைய விலை உயர்ந்த காரை எடுத்துக்கொண்டு என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா? என்று கேட்டதும் அந்த பணக்காரர் முடியாது என்றார். என்னுடைய பையன் உலக வங்கியில் பெரிய போஸிஷனில் இருக்கிறான் என்று கௌரவமாக சொன்னதும். அப்படியென்றால் எனக்கு கண்டிப்பாக சம்மதம்தான் என்றார். உலக வங்கிக்கு சென்ற நமது அப்பா இப்போது என் மகனுக்கு உங்க பேங்கில் டேபுட்டி CEO போஸ்ட்டிங் தரமுடியுமா என்று கேட்டாராம் ? யாருயா உன் பையன் ? இங்கே யோசிக்காம நேரடியா வேலை கொடுக்கணுமா ? அதுவும் ஸ்ட்ரெய்டா டேபுட்டி  CEO ? என்றதும் என்னுடைய பையன் உலக பணக்காரரின் மருமகன் என்று சொல்லலானார். கடைசியாக வங்கி ஜேனரல் சேர்மேன் நம்ம தம்பி எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க என்றாராம். இது ஒரு வகையான பேச்சு சாமர்த்தியம். இங்கே மனிதர்களை நன்றாக கணித்து வைக்க கற்றுக்கொள்ளும் எந்த ஒரு பணக்காரரும் இதுதான் பேச வேண்டும் இது பேச கூடாது என்று தெளிவான கணக்கு போட்டு பேசுகிறார்கள். இருந்தாலும் பணம் பார்க்க ஆசைப்படுபவர்கள் யோசிக்காமல் பேசி வாழ்க்கையில் சிக்கல்களில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது அல்லவா ? இதனை அடிப்படையில் இருந்து யோசிக்க வேண்டும். வெறுமனே பேச்சால் மட்டுமே எதுவுமே சாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். இருந்தாலும் நம்முடைய அரசியலை எடுத்துக்கொள்ளுங்களேன். ஒருவர் தப்பு தப்பாக பேசுகிறார். இல்லாதது பொய்யான விஷயங்கள் எல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் பண்ணியதாக பேசுகிறார். இவரையும் நம்பி மக்கள் பெரிய ஆளாக மாற்றிவிடுகிறார்கள். கட்சி நிர்வாகி ஒரு நடிகரை வைத்து அரசியலை சிதறடிக்க பார்க்கிறார் என்றால் கண்டிப்பாக ஓட்டுகள் பிரிய வேண்டும் என்று எதிர்கட்சி ஆட்கள் ஒரு பெரிய தொகையை அவருக்கு கொடுத்துவிடுவார்கள் என்பதற்காகதான் என்பது அரசியலில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நடிகர்கள் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள். இவர்களை வைத்து இவர்களின் முகங்களை வைத்து கட்சி நிர்வாகம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கிறதே ! இதற்கு என்ன சொல்ல முடியும் ? சில நேரங்களில் பேச்சு சாமர்த்தியமும் ஆபத்தானதே !

Sunday, December 29, 2024

STORY TALKS - EP.066 - தோல்விக்குள்ளே மறைந்து இருக்கும் வெற்றிகளுக்கான குறிப்புகள் !



ஒரு முறை போரில் தோல்வி ஏற்பட்டு எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார என்பதால் போரில் தோல்வி அடைந்த மன்னனை கைது செய்யப்பட்டு தனிச்சிறையில் தனிமையில் அடைத்தனர். கடைசி வரையில் தன்னை யாருமே காப்பாற்ற முடியாமல் நாட்கள் போகிறதை நினைத்து நொந்துபோய் சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசிக்காலம் கழிந்தது.. இருந்தாலும் அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும் என்று கூறி அவரிடம் கொடுத்தார். இந்த சதுரங்க அட்டையை ஒரு பக்கம் வாங்கி வைத்தாலும் தன்னை சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த இந்த மன்னருக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் அந்த மன்னன் இறந்தும் போனார்... சில நாள் கழித்து சிறையில் இருந்த அவருடைய உடைமைகளை சுத்தம் செய்த போது அதில் இருந்த சதுரங்க அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. தனக்கான விடுதலை தனக்கு மிக அருகில் இருந்தும் தோல்வியால் உருவான அவரின் மன உளைச்சலும்... பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது... இங்கே எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் தோல்வி அடைவது சாதாரணமான ஒரு விஷயம் எலி சாதாரணமாக இருக்கும்போது உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தனது கூரான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம்  இருபது நிமிடத்தில் மரத்தால் ஆன இந்த பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது. உங்களுடைய தோல்விகளை பற்றி யோசிக்காமல் கண்ணுக்கு முன்னால் இருக்கும் வெற்றிகளுக்கான குறிப்புகளை தேடுங்கள். உங்களுடைய கத்தியை தீட்டாமல் உங்களின் புத்தியை தீட்டுங்கள். உங்களின் சூழ்நிலையை ஆராய்ந்தால் உங்களால் வெற்றியை நுணுக்கமாக கைப்பற்ற முடியும் !



GENRAL TALKS - மோசமான எண்ணங்கள் இல்லாத மனது !




ஒரு குருவும், சீடனும் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, அந்த ஆற்றை கடக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டனர். அவளது நிலையை உணர்ந்த குரு அவளை தூக்கிக் கொண்டு ஆற்றங்கரையை கடந்தார். பின்னர் தன் சீடனுடன் தான் செல்லவேண்டிய இடத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் அமைதி காத்த சீடன் மனதுக்குள்ளே இருக்கும் சஞ்சலத்தால் தவித்துக்கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தனது குருவிடம் “தாங்கள் எவ்வாறு ஒரு பெண்ணை தொட்டு தூக்கலாம்?” என்று வினவினான்.  குரு “நான் அவளை தூக்கி நெடு தொலைவு ஆற்றை கடக்க உதவியது உண்மைதான். ஆனால் அவளை நான் ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டேன். நீயோ இதுவரை உன் மனதில் அவளைத் தூக்கிக்கொண்டு வருகிறாயே?” என்று பதிலளித்தார். நிலையான, பற்றற்ற மனதிற்கும், பற்றுள்ள மனதிற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் குட்டிக்கதை இது. நாம் அந்த சீடனைப் போல பலவற்றையும், பலகாலம் நமது மனதிற்குள் தூக்கிக்கொண்டு குறைகளோடு அலைகிறோம். நம்முடைய மனதுக்குள்ளே மோசமான எண்ணங்கள் இருக்க கூடாது என்று நம்முடைய மனதை தூய்மையாக வைத்துக்கொண்டு இருக்க வேண்டும். இங்கே எந்த வகை செல்வமும் நிலைத்து நிற்பது இல்லை. ஒரு கோடி சம்பாதித்தாலும் 10 வருடத்துக்கு உங்களுடைய மொத்த செலவுகளும் 10 இலட்சத்தில் முடிந்தால் மீதம் உள்ள செல்வத்தை மேலோகம் கொண்டு செல்ல முடியுமா என்ன ? அது போலவே உறவுகளும், உங்களை பற்றி அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து இருக்காமல் இதுதான் நீங்கள் என்று கண்டறிந்து உங்களை மேம்படுத்திக்கொண்டே இருங்கள். மற்றவருக்கு நீங்கள் செய்யும் உதவிகளை தவறாக பார்ப்பவர்களை பற்றி எல்லாம் யோசித்தால் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிகளே செய்துகொள்ள முடியாது இல்லையா ? யோசனைகள் வேண்டாம் செயல்களை தொடங்குங்கள் !

STORY TALKS - EP.065 - இந்த உலகத்தில் படைப்புடைய அதிசயம் !



ஒரு குருவும் அவருடைய சிஷ்யனும் பயணித்து கொண்டு இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து கொண்டு இருந்தார். அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணிக்காய் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா ஒரு சிறு கொடியில் தான் காய்க்கிறது அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன் காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "என்று கேட்டான் , பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து கொண்டு போனார்/ நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம் அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று சொன்னார் , சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள். அசதி அதிகமாக இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி விட்டான், குரு தியானம் பண்ண ஆரம்பித்தார், கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் , முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை தேய்த்து கொண்டு இருந்தான் , என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என் தலையில் விழுந்து விட்டது , நல்ல வேலை சிறு வலி தான் காயம் ஒன்றும் இல்லை. முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம் உன் தலையில் விழுந்து இருக்கும். இந்த மரத்தின் நிழலும் பயன்படாமல் போய்விடும் " என்றார். இங்கே தகவமைப்பு என்று ஒரு விஷயம் பரிமாணத்தில் இருக்கிறது. ஒரு சில மீன்கள் கடலின் ஆழத்தில் இருக்கும் கடல் நீரின் அழுத்தத்தினை தாங்கும் இரத்த அழுத்தம் மற்றும் தோல் அமைப்போடு இருக்கிறது. கடலுக்கு மிக ஆழத்தில் இருக்கும் இந்த இருள் சூழலில் கூட கண்களால் பார்க்க முடியும் அமைப்புகளை உருவாக்கிக்கொள்கிறது. இருந்தாலும் மனிதர்கள்தான் இயற்கையை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது எல்லாம் எங்கே முடியப்போகிறதோ தெரியவில்லை. 

STORY TALKS - EP.063 - ஃபேன்டஸியில் கொடுக்கும் பொய்களை நம்பவேண்டாம் !



ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அந்த நகரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் "இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள், பார்க்கலாம், "என்றொரு குறிப்பும் இருந்தது. தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார்?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி! ! ! வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில், " என்னா?? படம் சூப்பரா. என்று எழுதியிருந்தது. அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது. ஐயோ! "களவாணிப்பயலா" 'அவன்....? என்று.. "இலவசம்" யார் கொடுத்தாலும் அது கொள்ளையடிப்பதற்கே. இந்த உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை. உண்மையாக அன்பளிப்பு கொடுப்பவர்கள் கண்டிப்பாக எதுவுமே எதிர்பார்க்காமல் கொடுக்க முடியும். இருந்தாலும் நிறைய பணம் சம்பாதித்து வைத்து இருப்பவர்கள்தான் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பார்கள். குறிப்பாக தேர்தல் பணம் வாங்கும் ஆட்களுடைய நிலை கடைசியில் இப்படித்தான் போகிறது. இங்கே போட்டி போடுபவர்கள் இருவருமே பேராசை உள்ளவர்களாக இருப்பதால் நம்மால் என்னதான் பண்ண முடியும் சொல்லுங்கள் ? நம்ம ஆளு டிப் டாப்பாக ட்ரேஸ் பண்ணிக்கொண்டு வந்து 1,00,000 கம்பெனியில் முதலீடு பண்ணினால் 10 லட்சம் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். இது 90 சதவீதம் ஸ்கேமாக / மோசடியாக இருக்கலாம். இந்த காலத்தில் எப்போதுமே கவனமாக இருங்கள். மோசடிகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இங்கே இது எல்லாமே சும்மா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் - 20 இலட்சம் முதல் 1 கோடிக்கு மேல் பணம் இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் !

Sunday, December 22, 2024

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !




ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், “அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்” என்று நினைத்தான். அந்தக் காசை தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். பின்னாட்களில் அவனுக்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருப்பதாக தோன்றவே அவனுக்கு எப்போதுமே முந்தைய நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. “எல்லாம் காசு கிடைத்த நேரம்” என நினைத்தான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. “என்ன ஆயிற்று?” என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு துளையிட்ட காசைப் போட்டு வைத்தேன்” என்றாள். ”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். “உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான். ” என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…! நாம் நேசிக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் நமக்கான அதிர்ஷ்ட பொருளாக அமைவது இல்லை. உண்மையான அதிர்ஷ்டம் சிறப்பான செயல்களில் உள்ளது. நாம் படும் கஷ்டத்திலும் உள்ளது. இதனால்தான் வாழ்க்கையில் நம்முடைய செயல்திறன் சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமானது. 

GENERAL TALKS - இன்னொருவருக்கு அட்வைஸ் பண்ணும் முன்னால் !



இந்த சிறுகதை எனக்கு பிடித்து இருந்தது. தன்னுடைய மகன் மிகுந்த இனிப்பு சாப்பிடுவதை நினைத்த தாய் மிகவும் கவலை கொண்டு, அந்த பழக்கத்தை மாற்ற பல வழிகளில் முயன்றாள், ஆனால் அவளால் முடியவில்லை. கிராமத்தில் எல்லோரும் மரியாதையாக நினைக்கும் ஒரு நபரிடம் தன்னுடைய மகனை அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். தாய் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அந்த நபரை சந்தித்து, “என்னுடைய மகன் எப்பொழுதும் இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருக்கிறான். தயவு செய்து இது உடல் நலத்திற்கு கேடு என்று அவனுக்கு அறிவுரை கூற முடியுமா?" என்று கேட்டுக் கொண்டாள். தாய் கூறுவதை கேட்ட, அந்த நபர் சிறிது நேரம் யோசித்தார், அந்த நேரத்தில் அந்த பையனுக்கு எந்த அறிவுரையும் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு மாதம் கழித்து அவருடன் திரும்பும்படி அந்த தாயிடம் கூறினார். தாய் ஒரு மாதம் கழித்து தன் மகனை அழைத்துக் கொண்டு வந்தாள், ஞானி அந்த சிறுவனை பார்த்து “நீ இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும், ஏனென்றால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல" என்று அறிவுறுத்தினார். சிறுவனும் இனிமேல் இனிப்புகளை சாப்பிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தான். அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து மகனுடைய தாய் திரும்பி வந்து, “உங்களுடைய உதவிக்கு நன்றி. நான் முதலில் உங்களிடம் வந்த போது. இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தும்படி ஏன் என் மகனிடம் கூறவில்லை? அதற்கு மாறாக ஒரு மாதம் கழித்து ஏன் வர சொன்னீர்கள்?" என்று கேட்டாள்.  சிரித்தபடியே “நான் அந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட்டு கொண்டிருந்தேன், உன் மகனிடம் இனிப்பு சாப்பிடாதே என்று கூறுவதற்கு அப்போது எனக்கு தகுதி இல்லை, ஆனால் இப்போது நான் இனிப்பு சாப்பிடுவதை விட்டுவிட்டேன், அதனால் உன் மகனிடம் என்னால் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று கூற முடிந்தது" என்றார். இந்த சிறுகதையின் அடைப்படையில் பார்த்தால் இந்த வலைப்பூவே நான் டிஸைன் பண்ண தகுதியாக ஒரு நிலைக்கு வரவில்லை. இருந்தாலும் இன்டர்நெட்டில் கிடைக்கும் தகவல்களை உங்களுக்காக பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பூவை பயன்படுத்துகிறேன், இந்த வலைப்பூ அட்வைஸ் எல்லாமே ஒரு ஜெனரல் பேச்சு என்று எடுத்துக்கொள்ளுங்களேன். 

STORY TALKS - EP.062 - பங்குகளை கைமாற்றிவிடும் செயல்முறை !



இந்த கதையையும் சமீபத்தில் படித்தேன். ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது என்று வியாபாரி கூறினான். கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து குரங்குகளையும் மக்கள் பிடித்து கொடுத்து பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து போயின. குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும் எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு குரங்கிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை. ஒரு குரங்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க வில்லை. சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி இந்த கிராமத்திற்கு வந்தான். அவன் கிராமத்து மக்களிடம் என்னிடம் நிறைய குரங்குகள் உள்ளது, ஒரு குரங்கு நூறு ரூபாய் ஆகும் என்றான். கிராம மக்கள் அனைவரும் இந்த வியாபாரியிடமிருந்து நூறு ரூபாய்க்கு வாங்கி முதலில் வந்த குரங்கு வியாபாரியிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்கலாம் என்றெண்ணி போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டனர். குரங்குகள் தீர்ந்து போயின. வியாபாரி கிளம்பினான். கிராமமக்கள் ஐநூறு ரூபாய்க்கு வாங்கி கொள்ளப் போகும் வியாபாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர். அந்த வியாபாரி வரவேயில்லை. அவன் வரப்போவேதேயில்லை. ஏனெனில் அந்த வியாபாரித்தான் வேறொருவனை அனுப்பி பத்து ரூபாய்க்கு வாங்கிய குரங்கை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான். இந்த விஷயம் - வேல்யூவை கற்பனையாயக அதிக்கப்படுத்தி சம்பாதித்துவிட்டு காணாமல் போகும் விஷயம் பங்குச் சந்தையில் நடக்கிறது. விலையை பொறுத்து பங்குகளை கைமாத்தி விட்டுவிடுவார்கள். இந்த துறையில் இறங்கவேண்டும் என்றால் 100 சதவீதம் கவனமாக எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். இந்த விஷயம் சரியானதா என்று எல்லாமே யோசிக்காமல் இலாபத்துக்காக மட்டுமே வேலை செய்தால் மட்டும்தான் இந்த துறையில் ஜெயிக்க முடிகிறது. 

STORY TALKS - EP.061 - மனிதத்தன்மையை எப்போதுமே காப்பாற்ற வேண்டும் !




இங்கே எல்லோருமே கஷ்டப்படுபவர்களுக்கு எப்படியாவது உதவி பண்ணாத்தான் நினைக்கிறோம். வேலைதேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார். அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே இளைஞர் மின்கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அந்த முகவரியை காட்டி வழி கேட்டார். அக்கடையிலிருந்தவர் இளைஞனிடம் சிறிது தூரம் சென்றால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கே பார்வையற்ற ஓர் வயதான அம்மா இருப்பார். அதுதான் இந்த முகவரியுடைய வீடு எனக் கூறினார். இளைஞனும் அங்கே சென்றார். தென்னங்கீற்றால் ஆன ஓர் சிறிய கொட்டகை தான் வீடு. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத அளவிற்கு மோசமாக இருந்தது. இளைஞனின் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? என்று கேட்டார். அம்மா நான் இந்த வழியாக வரும்போது 50 ரூபாய் கீழே கிடந்ததைப் பார்த்தேன். மேலும், மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த காகிதத்தைப் பார்த்தேன். அதனால் அந்த பணத்தை உங்களிடம் கொடுக்க வந்தேன். இதைக் கேட்டதும் வயதான அந்த அம்மா அழுதவாறே தம்பி இரண்டு நாட்களாக மொத்தமாக முப்பத்தைந்து பேர் 50 ரூபா கீழே விழுந்து கிடந்தது என்று கொடுத்துச் சென்றார்கள். ஆனால் அந்த கடிதத்தை நான் எழுதவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு எழுத படிக்கத் தெரியாது என்றார். ஆனால் இளைஞர் பரவாயில்லை, அம்மா! நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கொடுத்து சென்றார். பின் அந்த வயதான அந்த அம்மா! தம்பி நீ செல்லும்போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்துவிடுமாறு அறிவுறுத்தினார். உடனே இளைஞனின் மனதில் யார் ? அந்த கடிதத்தை எழுதி இருப்பார் ? என பலவிதமாக சிந்தித்துப் பார்த்தார். அந்த கடிதத்தை கிழித்து விடுமாறு வயதான அம்மா ஒவ்வொருவரிடமும் கூறியிருப்பார். ஆனால் யாரும் அதைக் கிழிக்கவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி கூறினார், இளைஞர். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி உண்டு மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் இளைஞனிடம் அண்ணா! இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா? வரும் வழியில் இந்த 50 ரூபாய் கிடைத்தது. அதை அந்த அம்மாவிடம் தர வேண்டும். தாங்கள் அந்த வீட்டிற்குச் செல்லும் வழியைக் கூறினால் உதவியாக இருக்கும் என்றார், அந்த நபர். மனிதநேயம் சாகவில்லை என நினைத்து இளைஞர் அவருக்கு அவ்வீட்டின் வழியைக் கூறினார். இந்த மாதிரியான விஷயங்கள்தான் LOGIC-காக மாறுபட்டாலும் MORAL-ஆக சரியான விஷயம். இந்த வகையான மனிதத்தன்மையை எப்போதுமே காப்பாற்ற வேண்டும் !


STORY TALKS - EP.060 - எப்போதுமே எதிர்ப்புகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் !




ஒரு ஒரு பெரிய பண்ணையாருக்கு விவசாய வேலைக்கு ஒரு நல்ல வேலைக்காரர் தேவைப்பட்டதால் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தார். ஆனால் பலர் பண்ணையில் வேலை செய்யவேண்டும் என்றே விரும்பவில்லை நாடு முழுவதும் அவ்வப்போது வீசும் பயங்கரமான புயல்கள், கட்டிடங்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்து, தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதை கண்டு அவர்கள் பயந்தார்கள். பண்ணையார் வேலைக்காக விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்தபோது, அவர் தொடர்ச்சியான நிராகரிப்புகளைப் பெற்றார். இறுதியாக, ஒரு இளைஞன் பண்ணையாரை அணுகினான். "நீ திறமையாக வேலை செய்வாயா?"பண்ணையார் அவரிடம் கேட்டார். " நான் புயலின் போது தூங்க முடியும்," என்று அந்த இளைஞன் பதிலளித்தான். இந்த பதிலால் குழப்பமடைந்தாலும், உதவிக்காக ஆசைப்பட்ட பண்ணையார், அவரை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளைஞன் பண்ணையைச் சுற்றி நன்றாக வேலை செய்தான், விடியற்காலையில் இருந்து மாலை வரை பிஸியாக இருந்தான், அந்த இளைஞனின் வேலையில் பண்ணையார் திருப்தி அடைந்தான். பல வாரங்கள் கடந்தன. திடீரென்று ஒரு இரவு, ஒரு சக்திவாய்ந்த புயல் பள்ளத்தாக்கைக் கிழிக்கிறது. சுழல் மழை மற்றும் ஊளையிடும் காற்றால் விழித்த பண்ணையார் படுக்கையில் இருந்து அவசர அவசரமாக எழுந்திருக்கிறார். அந்த இளைஞனின் அறைக்குச் சென்று எழுப்புவதற்காக ஓடினார், கதவை பலமுறை தட்டியும் பதில் வரவில்லை. கோபமும் விரக்தியும் அடைந்த பண்ணையார், அந்த இளைஞனை அந்த இடத்திலேயே துப்பாக்கியால் சுடும் அளவுக்கு கடுமையான கோபம் வந்தது.
மாறாக, புயலுக்குத் தயாராக வெளியில் விரைந்தார். வைக்கோல் அடுக்குகள் அனைத்தும் தார்ப்பாய்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். மாடுகள் தொழுவத்தில் இருந்தன, கோழிகள் கூட்டில் இருந்தன, கதவுகள் அடைக்கப்பட்டன. ஜன்னல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் பின்புறம் நோக்கி ஓடினார். கதவுகள் தாழ்ப்பாள் போடப்பட்டு தானியங்கள் காய்ந்தன. டிராக்டர் உள்ளே இருந்தது. எல்லாம் கட்டப்பட்டு இருந்தது. எதுவும் அடித்துச் செல்ல முடியவில்லை. மழையில் தேவையில்லாமல் பண்ணையைச் சுற்றிய பிறகு படுக்கைக்குத் திரும்பிய பண்ணையார், இறுதியாகப் புரிந்துகொள்கிறார். 'அவர் ஒரு புயலின் போது தூங்க முடியும்.' அந்த இளைஞன் புயல் நேரத்தில் கவலைப்படத் தேவையில்லை என்று தன் வேலையை மிகச் சிறப்பாகச் செய்தான். அவர் எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பதை அவர் அறிந்திருந்தார். புயலுக்கு எதிராக பண்ணையை பாதுகாத்து வைத்திருந்ததால் அந்த இளைஞனால் நிம்மதியாக தூங்க முடிந்தது. நாம் நம் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்தால், புயல் நம்மை ஒருபோதும் தொந்தரவு செய்யாது, ஏனென்றால் நாம் அதற்கு தயாராக இருப்போம். நீங்கள் தயாராக இருக்கும்போது, நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கையில் புயல் வீசும்போது நீங்கள் நிம்மதியாக தூங்க முடியுமா? இங்கே எதிர்ப்புகளே இல்லாமல் யாருமே வாழ முடியாது. உங்களுக்கு வரும் எதிர்ப்பை எதிர்த்து உங்கள் சூழ்நிலைகளின் கடினத்தன்மைக்காக முன்கூட்டியே தயாராக நீங்கள் இருக்க வேண்டும். 

STORY TALKS - EP.059 - மனதுடைய அமைதி நம்முடைய முன்னேற்றத்துக்கு தேவை !




இந்த விஷயம் நம்புவதற்கு கடினமாக இருக்கும் ஆனால் யோசித்து அமைதியாக ஒரு விஷயத்தை செய்தால் அதன் வெளிப்பாடு நன்றாக இருக்கும். ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை ஒரு மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான். விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. ஒரு மறைந்த கல்லுக்கு பின்னால் பள்ளத்தின் அடியில் வாட்ச் விழுந்துள்ளது. கண்ணாடியும் உடைந்துள்ளது. பிறகு கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான். ஒரு காலத்தில் அமைதி இல்லாமல் இருந்ததால் முன்னேற முடியவில்லை. இருந்தாலும் இப்போது நம்மால் முன்னேற முடிகிறது என்றால் நாம் உருவாக்கிய அமைதியால்தான் முன்னேற முடிகிறது. இங்கே IQ அதிகமாக இருப்பவர்கள் யோசிக்காமல் அவசர அவசரமாக முடிவு எடுத்தாலும் ஜெயித்துவிடுவார்கள். இதனால் பொறாமைப்படவேண்டாம். நிறுத்தி நிதானமாக அமைதியாக யோசித்து முடிவு எடுப்பது எப்போதுமே பெஸ்ட் !


GENERAL TALKS - குருவி குருவி குருவி அடிச்சா ! குருவி குருவி குருவி பறந்தா ! தகிட தகிட !!




ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.  ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.   குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக கொடுத்தபடி சென்றது. முடிவாக, அதோ…. கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்…. வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனால், இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.  குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி. இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது. “நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. இந்த கதையில் ஒரு சிறப்பான கருத்து இருக்கிறது. கண்டிப்பாக நான் இன்னொரு போஸ்டில் சொல்கிறேன் !

GENERAL TALKS - இங்கே வெற்றிக்கு சரியான கருவிகளும் முக்கியமானது.




இந்த உலகத்தில் வெற்றியடைய சரியான கருவிகள் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் வெட்டிவிட்டு இருந்தார் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ இதனை பார்த்து பயங்கரமான ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று... சிறிதும் ஓய்வு இல்லாமலா ? என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்! நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன் ! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை , மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான். ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான். நம்முடைய பலத்தை விட நம்முடைய கருவிகளைதான் மேம்படுத்த வேண்டும். உடல் பலத்தை விட சரியான கருவிகள் இருந்ததால் முன்னேறிய மனிதர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பைக் - ஒரு கார் - ஒருவருக்கு சரியான நேரத்தில் கிடைத்ததால் இதனை சரியான வகையில் பயன்படுத்தி ஜெயித்த நிறைய பேரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் இல்லையா ? கருவிகள் காஸ்ட்லியாக இருந்தாலும் சரியான மேயின்டனேன்ஸ் இருந்தால் இன்னும் எளிமையாகவே நம்மால் வெற்றி அடைய முடிகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை பாடம், கஷ்டப்பட்ட யாருமே சொல்லாத ஒரு வாழ்க்கை பாடம். உங்களுடைய வெற்றி உங்களின் பலத்தை பொறுத்தது மட்டுமே அல்ல. உங்களின் கருவிகளையும் பொறுத்தது. 

STORY TALKS - EP.058 - வேல்யூ - இதுதான் புரிந்துகொள்ள கஷ்டமான விஷயம்.




ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை “ என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை. சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்க்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும். இந்த கதையில் இருந்து நான் புரிந்துகொண்ட விஷயமே வேறு. நம்முடைய சந்தோஷம் நம்முடைய பொருட்களில் மட்டுமே இல்லை. நம்முடைய வேல்யூவில் இருக்கிறது. நம்முடைய வேல்யூ பணம் - அதாவது வாங்கி வைத்து இருக்கும் பொருட்களின் மதிப்பில்தான் இருக்கிறது. இது புரிந்துகொள்ள குழப்பமாக இருந்தாலும் கண்டிப்பாக புரிதல் இருக்கக்கூடிய விஷயம். 

STORY TALKS - EP.057 - பணம் சம்பாதிப்பவர்களுடைய யோசனை எப்போதும் மாறக்கூடியது.




ஒரு பொருளாதார அடிப்படியான யோசனை என்னைக்குமே உணர்வுகளுக்கு இடம் கொடுத்து முடிவு பண்ணும் விஷயமாக இருக்காது. இந்த வகையில் நான் பார்த்த ஒரு சிறுகதை ! ஒரு அழகான இளம்பெண், “உலக பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது குறித்து இளம்பெண்கூறியதாவது, “என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். இந்த பதிவை பார்த்த ஒரு பணக்காரர் அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல் பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால், பணம் எனும் ஆண் அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்து கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதையும் மறந்து விட்டு, நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்” என்றார். இது அடிப்படையில் முகத்துக்கு நேராக சொல்லும் கடினமாக கருத்தாக இருந்தாலும் பொருளாதாரம் இப்படித்தான் வேலை செய்யும். பாக்கெட்டில் பணத்தை சேர்ப்பது என்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமாக எப்போது இருந்துள்ளது ? இதனால் பணத்தை சம்பாதிக்கும் மக்களோடு பேசும்போது அடக்கமாக பேச வேண்டும். இவர்களுடைய உலகமே உங்களின் உலகத்தில் இருந்து வேறானதாக இருக்கலாம். இந்த விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள். 

STORY TALKS - EP.056 - சுய இலாபத்துக்காக உண்மையை விட்டு வெளியே செல்லுதல் !






ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் அந்த நேர்மையானவனும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் நேர்மையானவன் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். நேர்மையானவன் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள். நேர்மையானவனும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். நேர்மையானவன் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார். நேர்மையானவன் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி நேர்மையானவனிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான். முதலாளி நேர்மையானவனை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு நேர்மையானவன் தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். நேர்மையானவனுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார். சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். இவன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார். நாம் சொல்லும் சொல் நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும் என்பதை எல்லோரும் தவறாக புரிந்துகொள்கிறார்கள். நம்முடைய சுய இலாபத்துக்காக உண்மையை விட்டுவிட்டு பொய்களின் பக்கம் நாம் செல்ல கூடாது. பொய்கள் தற்காலிகமாக காப்பாற்றும் பின்னாட்களில் கைவிட்டுவிடும். இப்போது உண்மை மட்டும்தான் ஜெயிக்க தேவையான உழைப்பை கொடுக்க சொல்லி ஒரு இலக்கு இருக்கும் அம்பை போல வாழ்க்கையில் நம்மை சரியான திசையில் செலுத்திக்கொண்டு செல்கிறது. 

STORY TALKS - EP.052 - இந்த உலகத்தின் நிறைய விஷயங்களை கற்று தரும் முதல் குரு - பணம் !




ஒரு வங்கி மேலாளரிம் அன்று ஒரு சராசரி மனிதர் லோன் கேட்டு வந்தார். இப்போது வங்கி மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “உங்களுக்கு எதுக்காக இவ்ளோ பணம் வேணும்?” அந்த சராசரி மனிதர் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்!” “அடமானமாய் என்ன தருவீங்க?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன?”. “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் நம்ம பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!” சராசரி மனிதர் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு ரெண்டு குதிரை இருக்கு எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம் !”. மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாக தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த சராசரி மனிதர் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார். “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. இலாபம் எதுவும் இல்லையா?” அந்த சராசரி மனிதர் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “இலாபம் இல்லாமலா? அது கிடைச்சது நிறைய!”. மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்?”. “என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்!”. மேலாளர் யோசித்தார். இந்த மாசத்தின் டார்கெட்க்கு சரியான ஆளாக ஒருத்தன் கிடைச்சுட்டான்!” என்று நினைத்தபடியே,” ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே?” என்றார். சராசரி மனிதர் கேட்டார். “டெபாசிட்னா என்ன?”. மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு அதில உங்க பணத்தை போட்டு வச்சா உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்!”. கேட்டுக் கொண்டிருந்த அந்த சராசரி மனிதர் நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க?”என்றார். ஒரு விஷயம் பணம் சார்ந்தது என்றால் அங்கே நல்லது என்றும் கேட்டது என்றும் எதுவுமே இல்லை. எல்லோருக்குமே இலாபம்தான் முக்கியம். இத்தகைய இலாப நோக்கம்தான் மக்களை இந்த விஷயங்களில் ஆட்டிப்படைக்கிறது. இந்த சமூகத்தில் நாம் இலாபம் அடைந்தால் மட்டும்தான் நம்மை மதிப்பார்கள். நம்முடைய படிப்பு , பண்பு, தொழில் என்று எதுவாக இருந்தாலும் பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை கொடுக்கும் மரியாதையை வேறு எதுவுமே கொடுக்க முடியாது. பணம்தான் பிறந்த குழந்தைக்கு கூட உலகத்தை சொல்லி கொடுக்கும் முதல் குருவாக உள்ளது. பணம் எல்லவற்றையும் விட மேலான ஒரு இடத்தில் இருக்கிறது. இந்த வலைப்பூவும் பணம் சம்பாதிக்க உருவாக்கப்பட்டது என்பதால் விளம்பரங்களை கிளிக் செய்து வலைப்பூ சந்ததாரராக மாறுங்கள்.  

STORY TALKS - EP.051 - இன்வேஸ்ட் பண்ணும் முன்னால் யோசியுங்கள் !



ஒரு ஊரில் மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன் தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். “அது எப்படி செயல் படுகிறது?” என்று கேட்டான். “சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.!” என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான். இப்போது மீனவன் சொன்னான்,” நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.” வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், “இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?” மீனவன் சொன்னான். “இன்று நீ ஆறாவது!!”இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி?” ” கோடீஸ்வரர் ஆவது எப்படி?”” சிறப்பாக தொழில் செய்வது எப்படி? என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர். இந்த மாதிரியான மோட்டிவேஷன் புத்தகங்கள் நகைச்சுவை காட்சியில் வருவது போல எப்படி பணக்காரனாக ஆவது என்ற தேடலுக்கு ஒரு சுமாரான பதிலைத்தான் கொடுக்கிறது. ஒரு நாளின் 24 மணி நேரத்தை கணக்கு போடுங்கள். இந்த 24 மணி நேரத்தில் நீங்கள் செய்த விஷயம்தான் உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த ஒரு அப்டேட். இது போன்று அப்டேட்களை சரிவர செய்யாமல் வாழ்க்கை அப்படியே இருக்கவேண்டும் என்றால் காலத்தால் நீங்கள் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவீர்கள். ஒரு விஷயத்தை விலை கொடுத்து வாங்கும் முன்னால் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இதுக்கு ஒரு பெரிய உதாரணம் எனது-வி4-விளம்பரங்கள் நிறுவனம்தான். மொத்தமாக இடை தரகர்களின் சதிகளால் நாசமாக போனது ஏமாந்து போன முதலீட்டாளர்கள்தானே ! எனவே கவனமாக இருங்கள். இந்த ஜெனெரேஷனில் ஒரு ஒரு வருடமும் இரு மடங்கு தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மக்களே வெற்றிகளை அடைகிறார்கள். 

Saturday, December 21, 2024

STORY TALKS - EP.050 - ஒரு முறை முடிவு பண்ணினால் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அந்த முடிவே சிறந்ததாக கருதுதல்.




இங்கே யார் சரியான பாதையை சரியான கருத்துக்களை சொல்லும் மனிதர் என்பது முக்கியமே அல்ல , எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மெஜாரிட்டி மக்கள் யாரோ அவர்களுடைய சொல் பேச்சுதான் மேடை ஏறுகிறது. ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை நேரத்துக்கு வெறும் உப்புமா மட்டுமே போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என தனியாக ஒரு லிஸ்ட்டே கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். தினமுமே உப்புமா சாப்பிட்டு உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர், இட்லிக்கு 15 பேர், பூரிக்கு 17 பேர், பொங்கலுக்கு 14 பேர், என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக அளிக்கப்பட்டது. 20 பேருக்கு பிடித்ததை மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டிய துயரம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே ஜெய் உப்புமா! சொல்லிவிட்டு உப்புமாவை சாப்பிட்டார்கள். ஒரு கான்சேப்ட்டுக்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் பண்ணும் 1000 பேர் இருந்தார்கள் என்றால் இவர்களோடு சேர்ந்து பலமான அணியில் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு 100 பேர் சரியாக ஒரு பாதையை சரியாக ஒரு கருத்தை எடுத்தாலும் இந்த அணியில் சேர மறுக்கிறார்கள். ஒரு மொக்கையான பழமைவாத பிற்போக்கு கான்செப்ட் இப்படித்தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை , இயக்குனர் பெரிய ஆட்சி போன்ற இயக்குனர்களின் எல்லா படங்களையும் சொல்ல முடியாது ஒரு சில படங்களில் வில்லன்களின் அடியாட்களின் காட்சிகளில் பிற்போக்கு யோசனைகள் மட்டுமே நிறைந்த கதாப்பாத்திரங்களாக இருக்கும் காட்சிகள் நிறைய இருப்பதை பார்க்க முடிக்கிறது, அதாவது ஒன்றும் தெரியாத மனிதனாக மெஜாரிட்டி மக்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படியே மாற்றிக்கொண்டு வாழும் பச்சோந்தியாக வாழ்ந்து வாழ்க்கையில் இருக்கும் இடத்தை விட்டு தன்னையும் தன்னுடைய இடத்தையும் முன்னேற விடாமல் பிற்போக்கு கருத்துக்களை சப்போர்ட் பண்ணும் மெஜாரிட்டி ஆட்களையே வாழ்த்தி மொக்கையான விஷயத்தை எடுக்கும் பெரிய கூட்டத்தில் தங்களை சேர்க்கிறார்கள்.  சூப்பர்ராக இருக்கும் மனிதர்களின் சின்ன கூட்டத்தை சின்னதாக இருக்கிறது என்ற காரணத்துக்காக ஒதுக்குகிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். போதை என்று சொல்லப்படும் இன்டாக்ஸிகேஷனை உலகத்தில் இருந்து நீக்கினாலே உலகத்தின் மொத்த 50 சதவீத பிரச்சனைகள் சரியாகிவிடும் என்பது இந்த வலைப்பூ குழுவினரின் கருத்து. 

STORY TALKS - EP.049 - கொடுக்கும் மனம் இருப்பவரை மதிக்க வேண்டும்.




மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த  இரத்தின கல்லைக் கண்டாள். அடுத்த நாள் அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள், பெண் தனது ஞானி உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள். பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து, அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த இரத்தின கல் தனக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பளிக்கும் அளவுக்கு மதிப்புடையது என்பதை அவர் அறிந்திருந்தார். அப்போதைய பண நெருக்கடிக்கு அந்த கல்லின் அடமான தொகையை பயன்படுத்தினாலும் இன்னொருவருக்கு சொந்தமான பொருளை இவ்வாறு சுய இலாபத்துக்கு பயன்படுத்துவது மனதுக்கு ஒரு குறையாக படவே அடமானம் வைத்த இரத்தினத்தை சம்பாதித்து மீட்டர். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த ஞானியிடம் கல்லைத் திருப்பிக் கொடுக்க வந்தார். "இந்த கல் எவ்வளவு மதிப்புமிக்கது என்று எனக்குத் தெரியும், இந்த கல்லை எனக்கு கொடுத்ததுக்கு நன்றி . இருந்தாலும் இப்போது நீங்கள் எனக்கு இன்னும் விலையுயர்ந்த ஒன்றைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் அதைத் திருப்பித் தருகிறேன். அது என்னவென்றால் இந்தக் கல்லை எனக்குக் கொடுக்க உனக்கு என்ன உதவியிருக்கிறதோ அதை எனக்குக் கொடு." என்றாள், இவருக்கு சரியான பதிலை கண்டறிய முடியாமல் யோசனையாக இருக்கவே பார்த்துவிட்டு அந்தப் பெண் சிரித்தாள், "கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி!" என்றாள்.  சில சமயங்களில் உங்களிடம் உள்ள "செல்வம்"  மற்றவர்களுக்கு தேவையான விஷயம் அல்ல. ஆனால், இன்னொருவருக்கு கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்குள் இருப்பது மற்றவர்களுக்குத் தேவை. வாழ்க்கையில் நீங்கள் கொடுக்கும் பணத்தையோ நேரத்தையோ அல்லது உதவியையோ ஒருவருக்கு அதிகமாக தேவை இருந்தால் மட்டுமே கொடுங்கள். ஒரு பிரபல நடிகர் அவருடைய ஐந்து வருடமாக வேலை பார்க்கும் உதவி திரைத்துறை நண்பருக்கு இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்துக்காக சொந்த பணத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் தொகையை கொடுத்து இருக்கிறார். இவரோ பணத்தை வாங்கி செலவு செய்துவிட்டு ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த நடிகரின் நண்பரிடம் இந்த நடிகர் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கோள்ள வேண்டும் , வேலைக்கு செல்ல வேண்டும் என்று காரணங்களை சொல்லி போலியாக நடித்து நண்பருக்கு சொந்தமான பைக்கை தன்னகப்படுத்திக்கொள்ள நினைத்தார் இந்த ஆசாமி. பிரபல நடிகரே ஃபோன் செய்து கேட்கும்போது 'ஒரு புது பைக்' வாங்கி கொடுத்துவிட்டு உன்னுடைய நண்பரின் பைக்கை எடுத்துக்கொண்டு போ என்று திமிராக பதில் சொல்லவே நடிகருக்கு எதுக்காக இவருக்கு சப்போர்ட் பண்ணினோம் என்று கவலையாக போய்விட்டது. பின்னாட்களில் பேச வேண்டிய விதத்தில் பேசி இந்த ஆசாமியின் சூழ்ச்சியில் இருந்து பைக்கை மீட்டு உரிமையாளர் நண்பரிடம் கொடுத்து பிரச்சனையை முடித்தார்கள். இப்படி கொடுக்கும் மனம் இருப்பவர்களையும் தவறாக பயன்படுத்துவதால்தான் இப்போது எல்லாம் யாருக்கும் நல்லவராக இருக்க மனம் இருப்பதில்லை. 

STORY TALKS - EP.048 - பொறுத்தார் பூமி ஆள்வார் , பொறுமையின்மை யோசிக்க விடாமல் தடுக்கிறது.



இந்த கதை மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்கிறது. ஒரு சாமுராய் வீரன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது. அதிலும் குறிப்பாக ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது. வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை. அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது. ஆகவே. சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான். இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின. ஆனால், அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது. முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான். எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது. குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது. அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான். ஆனால், வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது. அதில் அவனும் காயம் அடைந்தான். “ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா.? என அவமானம் அடைந்தான். அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்."நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது. அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்.” என ஆலோசனை சொன்னார். சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான். உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது. அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி. தயங்கித் தயங்கி வெளியே வந்தது. கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை. எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது. மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன. ஆனால். இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான். ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது. மறுநாள். வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது. சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது. அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது. சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை. இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம உள்ளது.?” எனக் கேட்டன. "ஒரு சூட்சுமமும் இல்லை. நான் பொறுமையாக காத்திருந்தேன். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே. அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது. நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது. ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம். எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்."வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!” என்றது அந்த கிழட்டு பூனை. அப்போது மற்றோரு பூனை கேட்டது, “நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன். என் நகங்கள் கூட கூர்மையானவை. ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!” “உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது." எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும். ஆகவே. ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய். ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது."ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள், அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். பலவான் தனது பேச்சிலும், செயலிலும், அமைதியாகவே இருப்பான். உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும். ஆனால், தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!” என்றது கிழட்டு பூனை. மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் பூனையிடம் கிடையாது. ஆனால், அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது. காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது. வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை. மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதே. நம் பலம். நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான். 

STORY TALKS - EP.047 - வெறுப்பால் வெட்டியாக போக வேண்டாம் !




முன் ஒரு காலத்தில் ஒரு நாடு மக்கள் பிரிவால் பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பகுதி பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள். மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்: "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" (“EACH GIVES WHAT HE HAS") எவ்வளவு நிதர்சனமான உண்மை…! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும். உங்களுக்கு “உள்ளே” என்ன இருக்கிறது? அன்பா - பகையா? அமைதியா - வன்முறையா? வாழ்வா - சாவா? உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா? இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன? "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" - இப்போது நடப்பு பிரச்சனைக்கு வருவோம் , பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மருத்துவ குப்பைகள் கொட்டப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாங்களும் குப்பைகளை கொட்டுவோம் என்று ஒரு கட்சி உறுப்பினர் சொல்கிறார் என்றால் எவ்வளவு யோசனை இல்லாத விஷயம் என்று பாருங்களேன் ! தனி மனிதன் வளர்ச்சி அடைய முடியாது. ஒரு மனிதன் வளர்ச்சி அடைய அவனுக்கு ஒரு சமூகம் தேவை, வெறுப்பு அரசியல் வெறுப்பை காட்டும்போது ஜிவ்வென்று போதையேற்றலாம் ஆனால் கடைசியில் உங்களை கேவலமான நோய்வாய்ப்பட்ட பேஷண்ட்டாக மாற்றிவிடும். மக்கள் எப்போதுமே சுய மரியாதையை காப்பாற்ற அறிவு கூர்மையை பயன்படுத்துங்கள். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியல் எனும் சாக்கடையை பயன்படுத்த வேண்டாம். 

Friday, December 20, 2024

STORY TALKS - EP.046 - தமிழ் சினிமாவில் 2018 ல் வெளிவந்த திரைப்படங்கள் !



  1. ஓநாய்கள் ஜாக்கிரதை
  2. பார்க்க தோனுதே
  3. சாவி
  4. விதி மதி உல்டா 
  5. குலேபகாவலி 
  6. ஸ்கேட்ச் 
  7. தானா சேர்ந்த கூட்டம் 
  8. சமூக வலைத்தளம் 
  9. வீர தேவன் 
  10. பாகமதி 
  11. மன்னார் வகையறா 
  12. நிமிர் 
  13. சரணாலயம் 
  14. மதுரை வீரன் 
  15. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் 
  16. படை வீரன் 
  17. விசிறி 
  18. ஏமாலி 
  19. கலகலப்பு 2 
  20. நரி வேட்டை 
  21. சவரக்கத்தி 
  22. சொல்லிவிடவா 
  23. மனுஷனா நீ 
  24. மேல் நாட்டு மருமகன் 
  25. நாச்சியார் 
  26. நாகேஷ் திரையரங்கம் 
  27. வீரா 
  28. கூட்டாளி 
  29. 6 அத்தியாயம் 
  30. காத்தாடி 
  31. மெர்லின் 
  32. தமிழனானேன் கா 
  33. தாரவி 
  34. ஏண்டா தலைல எண்ணைய் வைக்கல
  35. கேணி   \
  36. மெர்குரி 
  37. முந்தல் 
  38. பக்கா 
  39. தியா 
  40. பாடம் 
  41. சில சமயங்களில் 
  42. அலை பேசி 
  43. இருட்டு அறையில் முரட்டு குத்து 
  44. காத்திருப்போர் பட்டியல் 
  45. இரவுக்கு ஆயிரம் கண்கள் 
  46. ஆறு முதல் ஆறு (ஒரு இரவு)
  47. இரும்பு திரை 
  48. பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
  49. அமுதா 
  50. 18.05.2009
  51. காதலர்கள் வாலிபர் சங்கம் 
  52. பால்காரி 
  53. செயல் 
  54. அபியும் அணுவும் 
  55. ஒரு குப்பை கதை 
  56. கால கூத்து 
  57. பேய் இருக்கா இல்லையா 
  58. புதிய புரூஸ் லீ 
  59. செம்ம
  60. ஆண்டனி 
  61. மோகனா 
  62. பஞ்சு மிட்டாய் 
  63. வயக்காட்டு மாப்பிள்ளை 
  64. காலா 
  65. கோலி சோடா 2 
  66. என்னோடு நீ இருந்தால் 
  67. கன்னக்கோல் 
  68. கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்கயா 
  69. ஆந்தரா மெஸ் 
  70. என்ன தவம் செய்தேனோ 
  71. கார்கில் 
  72. டிக் டிக் டிக் 
  73. டிராஃபிக் ராமசாமி 
  74. அசுர வதம்
  75.  எதுக்குடி காதலிச்ச ?
  76. இன்பா டிவின்கிள் லில்லி 
  77. செம்ம போதை ஆகாதே 
  78. காசு மேல காசு 
  79. மிஸ்டர். சந்திரமௌலி 
  80. தமிழ் படம் 
  81. கடைக்குட்டி சிங்கம் 
  82. ரோஜா மாலைகள் 
  83. மங்கை மான்விழி அம்புகள் 
  84. போதை 
  85. மாய பாவனம் 
  86. ஒண்டிக்கட்டை 
  87. விண்வெளி பயண குறிப்புகள் 
  88. ஜுங்கா 
  89. மோகினி 
  90. அரளி 
  91. எங்க காட்டுல மழை 
  92. கஜினி காந்த் 
  93. கடல் குதிரைகள் 
  94. கடிகார மனிதர்கள் 
  95. காட்டு பய சார் இந்த காளி 
  96. மணியார் குடும்பம் 
  97. நாடோடி கனவு
  98. போயா வேலையை பாத்துட்டு 
  99. அழகு மகன் 
  100. காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 
  101. மூன்று ரசிகர்கள் 
  102. பியார் ப்ரேமா காதல் 
  103. விஸ்வரூபம் 2 
  104. கோல மாவு கோகிலா 
  105. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
  106. ஓடு ராஜா ஓடு 
  107. எச்சரிக்கை 
  108. களரி 
  109. லட்சுமி 
  110. மேற்கு தொடர்ச்சி மலை 
  111. இமைக்கா நொடிகள் 
  112. அறுபது வயது - மாநிறம் 
  113. ஆருத்ரா 
  114. அண்ணனுக்கு ஜே 
  115. அவளுக்கென்ன அழகிய முகம் 
  116. படித்தவுடன் கிழித்துவிடவும் 
  117. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் 
  118. டார்ச் லைட் 
  119. தொட்றா 
  120. வஞ்சகர் உலகம் 
  121. சீமராஜா 
  122. ஏகத்தம் 
  123. மேடை
  124. ராஜா ரங்குஸ்கி 
  125. யூ டர்ன் 
  126. சாமி ஸ்கோயர் 
  127. செக்க சிவந்த வானம் 
  128. ஆடவர் 
  129. பரியேறும் பெருமாள் 
  130. 96 
  131. NOTA
  132. ராட்சஸன் 
  133. ஆண் தேவதை 
  134. அடங்கா பசங்க 
  135. அம்மாவாசை 
  136. களவாணி சிறுக்கி 
  137. கூத்தன் 
  138. மனுஷன்கடா 
  139. மூணாவது கண் 
  140. வடசென்னை 
  141. எழுமின் 
  142. சண்டை கோழி 2 
  143. ஜீனியஸ் 
  144. ராக தாளங்கள் 
  145. சந்தோஷத்தில் கலவரம் 
  146.  வன்முறை பகுதி 
  147. பில்லா பாண்டி 
  148. களவாணி மாப்பிள்ளை 
  149. சர்க்கார் 
  150. காற்றின் மொழி 
  151. திமிரு பிடிச்சவன் 
  152. உத்தரவு மகாராஜா 
  153. கரிமுகன் 
  154. கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் 
  155. பட்டினப்பாக்கம் 
  156. சகவாசம் 
  157. செய் 
  158. செம்மறி ஆடு 
  159. வண்டி 
  160. தோனி கபடி குழு 
  161. 2.0 
  162. வினை அறியார் 
  163. பயங்கரமான ஆளு 
  164. ஜானி 
  165. பிரபா 
  166. திரு 
  167. துலாம் 
  168. துப்பாக்கி முனை 
  169. சீதக்காதி 
  170. அடங்க மறு
  171. கனா 
  172. மாரி 
  173. சிலுக்குவார்பட்டி சிங்கம்  


 





STORY TALKS - EP.045 - தெரியாத மனிதர்களிடம் அன்பு ?



ஒரு நகர்ப்புற பகுதியில் எப்போதுமே அன்போடு ஒரு இளைஞர் தினமும் கடை வைத்து இருக்கும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு "இல்லையேப்பா நல்லா தானே இருக்கு" என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், "ஏங்க பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு! என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், "அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க! நான் இப்படி குறைகூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க" என்றார்! தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு, அந்த பாட்டியிடம், "அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்! இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்?" உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு, "அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான்! இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்! நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை! மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது" என்றார் அன்போடு. இந்த மாதிரியான தெரியாத நபர்களுக்கு கூட அன்பு காட்டுவது ஒருவர் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடினமான காரியமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படியும் மக்கள் தங்களின் சுயநலம் மட்டுமே பாராது இன்னொருவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்று நினைப்பதால் இந்த சமூகம் சிறப்பான சமநிலையில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது ! 

STORY TALKS - EP.044 - கடலை தாண்டி வேறு நாடு சென்றால் நாமே வேற்று மனிதனாக மாறுகிறோம் !



இந்தக் காட்டுக்கு யார் ராஜா? ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்தது. அந்த காட்டுக்கு அந்த சிங்கம் தான் ராஜா. இந்த பதவியால் அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒரு நாள் நடந்து போகும்போது, ஒரு நரியைக் கண்டது. நரியிடம் சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். நரியும் பயந்தபடியே “நீங்கதான் ராஜா” என்று சொன்னதாம். அதற்கு சிங்கம் “அப்படிச் சொல்லு” என்று சொல்லிவிட்டுப் போனது. 

 பிறகு ஒரு முயலைக் கண்டது. முயலிடம் சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். அந்த முயலுக்கு தமிழ் தெரியாதாம். இங்லிஷ் மட்டும்தான் தெரியுமாம். “I don’t understand. What are you saying?” என்று கேட்டதாம். சிங்கத்துக்கு கொஞ்சம் இங்லிஷ் தெரியும். அது திருப்பி “Who is the king of this jungle?” என்று கேட்டதாம். முயலும் “You are the king” என்று சொன்னதாம். 

 இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு போலார் பனிக்கரடி வந்ததாம். அதனிடம், சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். Polar Bear க்கு நோர்வேஜியன் மட்டும்தான் தெரியுமாம். அது “Jeg forstår ikke. Hva sier du?” என்று கேட்டதாம். சிங்கத்துக்கு நோர்வேஜியன் தெரியாது. அதால அது ஒன்றுமே சொல்லாம போனதாம். 

பிறகு கொஞ்ச தூரத்தில் ஒரு யானை மரத்தின் இலைகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்துதாம். சிங்கம் யானையிடம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். யானைக்கு சிங்களம் மட்டும்தான் தெரியுமாம். யானை எதுவுமே பேசாமல், தன்பாட்டுக்கு இலை சாப்பிட்டுக் கொண்டே இருந்துதாம். சிங்கம் திருப்பியும் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். யானை அப்பவும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்துதாம். சிங்கம் யானையின் தும்பிக்கையை பிடித்து இழுத்து “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். 

யானைக்கு நல்ல கோபம் வந்துதாம், சிங்கத்தை தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டுதாம். சிங்கம் தூரத்துல போய் விழுந்து காயமெல்லாம் வந்துதாம். வாயிலிருந்து ரத்தமும் வந்துதாம். சிங்கம் யானையைப் பார்த்து “தெரியாட்டி தெரியாது என்று சொல்லுறதுக்கு என்ன ? என்னை ஏன் தூக்கி வீசறான்” என்று சொல்லிச்சுதாம். அப்ப அந்த வழியால் வந்த நரி “என்ன ராஜா, வாயெல்லாம் சிவந்து இருக்கு. வெத்திலை போட்டீங்களா?” என்று கேட்டதாம். சிங்கத்துக்கு கவலையாய் இருந்தது. “உனக்கு என்ன பைத்தியமா? என்னை யானை தூக்கி வீசியது தெரியாதா? நான் ஏதோ சிங்களம் தெரியாமல் வந்த பிரச்சனையில இருக்கிறன். உனக்கு ” காமெடியா இருக்கா என்று கேட்டு அழுததாம். 

ஜெகமே தந்திரம் படத்தில் சொன்னது போல கடலை தாண்டினால் நாமே மற்ற இன வெறி பிடித்த ஆட்களுக்கு எதிரான ஆளாக்கத்தான் இருக்கிறோம். இப்போதும் சாதி , மதம், இனம் என்று பிற்போக்கு யோசனையால் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறோம். ஒரு ராஜாவாக இருந்தாலும் பொறுப்புகளை செய்து வாழ்க்கையை சரியாக வாழ வேண்டும். சுய நலமும் ஆணவம் நிறைந்த கற்பனைகளும் இருந்தால் கடைசியில் நல்ல விஷயங்கள் எதுவும் நமக்கு நடக்காது. 


ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...