ஞாயிறு, 3 மே, 2026

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #3




"உன் அலைபேசிக்கு ஏன் 'Lock' போடுகிறாய்?

உன் விரல் ரேகையை விட - 

உன் மெல்லிய புன்னகையைத் தான் 

அது ரகசியமாகச் சேமித்து வைத்திருக்கிறது!

நீ ஒருமுறை பார்த்தாலே போதும்,

அது தானாகவே திறந்து வழிவிடும்!"


"இன்று இரவு நிலவைப் பார்க்காதே..

பாவம், அதற்குப் பொறாமை வந்துவிடும்!

வானத்தில் இவ்வளவு உயரத்தில் இருந்தும்

உன்னை விட அழகாக இருக்க முடியவில்லையே என்று

அது மேகத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்!"


"உன் நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கமாக

நான் இருக்க ஆசைப்படுகிறேன்..

நீ எவ்வளவோ முக்கிய பாடங்களை முதல் பக்கத்தில் எழுதினாலும்,

உனக்குப் பிடிக்காத நேரங்களில் - உன்

அழகான கிறுக்கல்கள் எல்லாம் 

பாவப்பட்ட என் மேல் தானே விழும்!"

1 கருத்து:

Sandeep Reddy Vanga சொன்னது…

🤦‍♂️💔

TECH TALKS - டெய்லிமொஷன் இணையத்தில் சம்பாதிப்பது குறித்த தகவல்கள் !

  Dailymotion offers an accessible Partner Program that lets creators monetize their content via native uploads and website video em...