CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 5 - DEAD MEN TELL NO TALES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
PIRATES OF THE CARIBBEAN 5 - DEAD MEN TELL NO TALES - இந்தக் கதையில் ஜாக் ஸ்பேரோ தனது அதிர்ஷ்டத்தை இழந்து, மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார். அதே சமயம், பல ஆண்டுகளுக்கு முன்பு ஜாக்கால் "டெவில்ஸ் ட்ரையாங்கிள்" பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் கேப்டன் சலாசர் (Salazar), ஒரு பேயாகத் தனது படைகளுடன் தப்பித்து வருகிறார்.
ஜாக்கைப் பழிவாங்குவதே அவரது ஒரே லட்சியம். இதற்கிடையில், வில் டர்னரின் மகன் ஹென்றி டர்னர், தனது தந்தை ஃபிளையிங் டட்ச்மேன் கப்பலில் அனுபவிக்கும் சாபத்தை நீக்க, கடலின் அனைத்துச் சாபங்களையும் முறியடிக்கும் வல்லமை கொண்ட "பொஸைடனின் முக்கூர் வேல்" (Trident of Poseidon) என்ற அதிசய ஆயுதத்தைத் தேடுகிறார்.
ஹென்றி டர்னர் மற்றும் நட்சத்திரங்களை வைத்து வழி கண்டுபிடிக்கும் திறமை கொண்ட கரினா ஸ்மித் ஆகியோருடன் ஜாக் ஸ்பேரோ கைகோர்க்கிறார். இவர்களுடன் பழைய எதிரி கேப்டன் பார்போசாவும் இணைகிறார்.
சலாசரின் பேய்க்கப்பல் இவர்களைத் துரத்த, இறுதியில் இவர்கள் கடலின் நடுவில் மறைந்திருக்கும் பொஸைடனின் தீவை அடைகிறார்கள். அங்கு கடலுக்கு அடியில் அந்த முக்கூர் வேல் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
இறுதிப் போரில், அந்த முக்கூர் வேலை உடைப்பதன் மூலம் கடலில் உள்ள அனைத்துச் சாபங்களும் நீங்குகின்றன. சலாசர் மீண்டும் மனிதனாக மாறுகிறார், ஆனால் கடலுக்குள் மூழ்கி இறக்கிறார்.
இந்தச் சண்டையில் கேப்டன் பார்போசா தனது மகள் கரினாவைக் காப்பாற்றத் தனது உயிரைத் தியாகம் செய்கிறார். சாபம் நீங்கியதால் வில் டர்னர் கரைக்குத் திரும்பி எலிசபெத் ஸ்வானுடன் இணைகிறார். ஜாக் ஸ்பேரோ மீண்டும் தனது பிளாக் பேர்ல் கப்பலுக்குக் கேப்டனாக மாறி சாகசப் பயணத்தைத் தொடங்குகிறார்.
இந்தப் படம் முந்தைய பாகமான 'On Stranger Tides'-ஐ விட அதிக வேகமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் அந்த வங்கித் திருட்டுக் காட்சியும், கில்லட்டின் (Guillotine) காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
குறிப்பாக வில் டர்னர் மற்றும் எலிசபெத் மீண்டும் திரையில் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுத்தது. ஜாக் ஸ்பேரோவின் இளமைக்காலக் காட்சிகளும், அவர் எப்படி 'கேப்டன் ஜாக்' ஆனார் என்பதும் சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ஜாக் ஸ்பேரோவின் கதாபாத்திரம் இதில் சற்று பலவீனமாகக் காட்டப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அவர் தனது புத்திசாலித்தனத்தை விட அதிர்ஷ்டத்தையே அதிகம் நம்புவது போலக் காட்டப்பட்டுள்ளது.
வில்லன் சலாசர் ஆரம்பத்தில் மிரட்டலாகத் தெரிந்தாலும், இறுதியில் அவர் மிக எளிதாகத் தோற்கடிக்கப்படுவது கதைக்கான பொசைடன் திரிசூலத்தின் சக்தியாக இருந்தாலும் படத்துக்கு நேரடியான தேடல் பொருளாக இருக்கிறது, ஒரு காவியத் தொடரின் (Epic Franchise) அழகான மற்றும் உணர்ச்சிகரமான முடிவாக இந்தப் படம் அமைந்தது. பெர்பொஸா மற்றும் வில் டேர்னர் வாழ்க்கை சரியானதாக முடிக்கப்பட்டு இருக்கிறது !
EN :
--
PIRATES OF THE CARIBBEAN 5: DEAD MEN TELL NO TALES
In this installment, Captain Jack Sparrow has hit rock bottom—his luck has run out, and he is living in poverty. Meanwhile, the terrifying Spanish Captain Salazar, who was trapped in the "Devil's Triangle" by Jack years ago, escapes as a ghost along with his undead crew. His sole mission is to exact revenge on Jack.
In the midst of this, Henry Turner the son of Will Turner is on a quest to break the curse that binds his father to the Flying Dutchman. He seeks the legendary "Trident of Poseidon," a mystical weapon with the power to break every curse of the sea. Jack Sparrow joins forces with Henry and Carina Smyth, a brilliant horologist who uses the stars to navigate. Even Jack’s old rival, Captain Barbosa, joins the fray.
As Salazar’s ghost ship relentlessly hunts them, they eventually reach the hidden Island of Poseidon in the middle of the ocean. There, they discover the Trident resting at the bottom of the sea. In the final battle, they destroy the Trident, which successfully breaks all the curses of the ocean. Salazar returns to human form but meets his end in the depths of the sea. During this conflict, Captain Barbossa heroically sacrifices his life to save his daughter, Carina. With the curse lifted, Will Turner finally returns to shore and reunites with Elizabeth Swann. Jack Sparrow, back at the helm of the Black Pearl, sets sail for his next grand adventure.
This film felt much faster and more humorous than the previous installment, On Stranger Tides. The opening bank heist sequence and the guillotine escape scene were major highlights that captivated the fans. Seeing Will Turner and Elizabeth Swann back on screen was a deeply emotional experience for the audience. Additionally, the flashback scenes showing a young Jack Sparrow and how he earned the title of "Captain Jack" were interestingly portrayed.
However, the character of Jack Sparrow seemed slightly weakened here; he appeared to rely more on pure luck than his trademark wit and intellect. While Captain Salazar was a terrifying villain initially, his eventual defeat felt somewhat easy, though it served the narrative purpose of the Trident’s power. Ultimately, this film served as a beautiful and emotional conclusion to an epic franchise. The storylines of Barbossa and Will Turner were wrapped up perfectly!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக