வியாழன், 28 நவம்பர், 2024

STORY TALKS - EP.001 - வேல்யூதான் உங்களுக்கு தேவை மக்களே !

 



இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து வாழும் வாழ்க்கை என்றால் நொடிக்கு நொடி தவிர்க்க முடியாத கசப்பான விஷயங்கள் இருக்கதான் செய்யும். இந்த தெரிந்தும் நம்மால் வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதபோது கற்பனையான இனிக்கும் பொய்களை நம்புகிறோம் இந்த பொய்களின் மூலமாகவே நாம் வாழ்க்கை அமைத்துக் கொள்கிறோம். இவ்வாறு பொய்கள் மற்றும் கற்பனைகள் நிறைந்த உலகம் நமக்கு பாதுகாப்பாக தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் சொகுசாக தோன்றுகிறது. நிஜத்தில் இல்லவே இல்லாத ஒரு பாதுகாப்பை நாம் இருப்பதாக நம்புவதன் மூலமாக நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமாக நமக்கு நாமே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போல பிரச்சனைகளாக உருவாக்கிக் கொள்கிறோம். இப்படி ஒரு தனிமையை உருவாக்கிக்கொண்டால் நம்முடைய தனிமையை மீறி நமக்காக யாரும் வரமாட்டார்கள் என்றும் நம்மை யாரும் பாதித்து விட மாட்டார்கள் என்றும் ஒரு கற்பனையான நம்பிக்கையோடு இருக்கிறோம். இது நிச்சயம் தவறானது கற்பனையினால் உருவாக்கப்படக்கூடிய புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் வெற்றியடைவது சாத்தியம்தான். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் தனித்து மனதுக்குள்ளே அடைக்கப்படாமல் எப்போது உண்மையான ஒரு புத்தகமாக அல்லது காணொளியாக அல்லது ஒரு இணைய ஆவணமாக மாறுகிறதோ அப்போதுதான் அதற்கான விற்பனை வேல்யூ இருக்கிறது. அந்த வேல்யூ கிடைத்ததும் பணத்தை கொடுத்து அந்த புத்தகத்தையோ அல்லது அந்த திரைப்படத்தையோ வாங்கி பார்ப்பதால் தான் அந்த வேல்யூ பணமாக மாறுவதால் தான் அதனுடைய வெற்றி அதற்கு கிடைக்கிறது. வாழ்க்கையும் இப்படித்தான் கொஞ்சமாவது வேல்யூவை கொண்டு வராமல் பணத்தை சம்பாதிக்காமல் இருந்தால் கடைசியில் நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள். வேல்யூ கண்டிப்பாக இருக்கவேண்டும்.  வேல்யூ இல்லை என்றால் பணத்தை சம்பாதிக்க முடியாது இந்த காலத்தில் வேல்யூக்கள் இருந்தாலும் கூட வாங்குவதற்கு யாருமே ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் நின்று போன நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டேப் ரெக்கார்டர் கேசட்டுகளை சொல்லலாம் அல்லது பழைய காலத்து டிவிடி தகடுகளை சொல்லலாம். இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையும் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும் நன்றாக உன்னிப்பாக கவனியுங்கள் இவ்வாறு கவனித்தாலே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் உங்களுக்கு தானாகவே புரிந்துவிடும். காலத்துக்கு தேவைப்படுவது போல மாறுங்கள் ! என்றும் வெற்றியடைய வேண்டும். மனிதர்களுடைய மனம் மாறக்கூடியது. இயற்கையோ கடவுளோ விதியோ அல்லது தற்செயலோ இது எல்லாமே உங்களை நூறு சதவீதம் நேசிப்பவர்களை கூட பட்டாக்கத்தி எடுத்து துரத்தும் அளவுக்கு மோசமான எதிரிகளாக மாற்றிவிடும். பி கேர்ஃப்புல் ! கொஞ்சமாக மனிதர்களை நம்புங்கள் ஆனால் அதிகமாக வேல்யூக்களை மட்டும் நம்புங்கள் !




1 கருத்து:

முருகேஷ் சொன்னது…

யெஸ். பிரதர். மணி இஸ் அல்வேஸ் அல்டிமேட்.

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...