Tamil Movies Released in 2001
- Aadhi Bhagavan
- Aalavandhan
- Aandan Adimai
- Alli Thandha Vaanam
- Andha Naal Nyabagam
- Badri
- Bheeshmar
- Dhosth
- Ezhumalai
- Friends
- Gemini
- Kaadhal Kavithai
- Kaathal Solla Vanthen
- Kalakalappu
- Kannathil Muthamittal
- Kannukku Kannaga
- Kasi
- Kovai Brothers
- Maanasaatchi
- Majunu
- Manadhai Thirudivittai
- Middle Class Madhavan
- Mirattal Adi
- Nandha
- Ninaithen Vandhai
- Panchathanthiram
- Parthale Paravasam
- Poovellam Un Vasam
- Red
- Samudhiram
- Snegithiye
- Solla Marandha Kadhai
- Thamizhan
- Thavasi
- Thulluvadho Ilamai
- Vaanavil
- Virumbugiren
- Viswanathan Ramamoorthy
- Yai Nee Romba Azhaga Irukkum
- Youth
3 கருத்துகள்:
ஏவிஎம் வேண்டாம் என ஒதுக்கிய படத்தில் நடித்த விஜயகாந்த்.. 500 நாட்கள் ஓடிய சம்பவம்
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தடம் பதித்த விஜயகாந்த், பல ஹிட் படங்களைத் தந்து சமூக உணர்வும், ஆக்ஷனும் மெருகேற்றினார். கேப்டன் பிரபாகரன் முதல் வைதேகி காத்திருந்தாள் வரை, அவரது திரைப்படங்கள் இன்று கூட ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன.
1980-களில் வெளிவந்த “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படம், விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான வெற்றி படமாக அமைந்தது. அதிரடிப் பாத்திரங்களை விட்டு, கிராமத்து மனிதனாக அவர் புதிய பெயரை சம்பாதித்தார். இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரசியமான பின்னணி ரசிகர்களுக்குத் தெரியாத ஒன்று.
தொடக்கத்தில் ஒரு இயக்குநர் ஒப்பந்தமாக இருந்தும், கதாநாயகனுக்காகவே குழப்பம் ஏற்பட்டது. ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் விஜயகாந்தைப் பற்றிய நம்பிக்கையின்மையால் அவருக்கு பதிலாக மற்ற ஹீரோக்களை முயன்றது. இதனால் திட்டம் தடைபட்டது.
500 நாட்கள் ஓடிய சம்பவம்
கதை எழுதிய சுந்தர்ராஜன் மட்டும் விஜயகாந்த் தான் இந்த வேடத்திற்கு பொருத்தமானவர் என வலியுறுத்தினார். அவரது நிலைப்பாட்டினால் தயாரிப்பு நிறுவனத்துடன் முரண்பாடு ஏற்பட்டது. அதையடுத்து முன்பணத்தை திருப்பிக் கொடுத்து அவர் படத்திலிருந்து விலகினார்.
பின்னர், துயவனும் பஞ்சு அருணாசலமும் இணைந்து இந்தக் கதையை உருவாக்க தயாரானார்கள். இது படத்தின் உணர்வுப் பக்கங்களை வலுப்படுத்தும் வகையில் வழிகாட்டியது. படம் வெளியானதும், பாராட்டுகளும் சாதனைகளும் அதனைச் சுற்றி மழையாக வந்து சேர்ந்தன.
மதுரையில் 500 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், விஜயகாந்தின் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியது. அவர் வெறும் ஆக்ஷன் ஹீரோ அல்ல, உணர்ச்சி கொண்ட கதாபாத்திரங்களையும் சீராகச் செய்தார். இதன் மூலம், அவரது திரைப்பயணத்தில் மாற்றமில்லா திருப்புமுனை ஏற்பட்டது.
2011 தேர்தலுக்குப் பிறகு விஜய்காந்த் என்ற மனிதரின் மேல்.எத்தனை வன்மங்கள், எத்தனை தனிப்பட்ட தாக்குதல்கள். அவரை குடிகாரராகவும், அரசியல் கோமாளியாகவும் சித்தரித்து அந்த பிம்பத்தை நம் மனதில் பதிய வைத்தார்களே... அப்படி ஒரு பிம்பத்துடனா அவர் வாழ்வு முடிய வேண்டும். காலமெல்லாம் உழைத்து அவர் உருவாக்கிய பெயரை சிதைத்த பிறகு அவர் காலம் முடிய வேண்டும். காலம் ஒரு போதும் அதற்கு அனுமதிக்காது. நல்லவர்களுக்கு சோதனை வரும், ஆனால் கைவிடாது. விஜயகாந்த் நோயில் விழுகிறார். அதன் பிறகு அவரைப் பற்றி எங்கு யார் பேசினாலும் அவரின் மேன்மையான குணத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள். அவரின் உதவும் குணத்தை கண்ணீரோடு பகிர்ந்தார்கள். அவர் கையால் பசியாறியவர்கள் அவரை மனம் நிறைய வாழ்த்தினார்கள், அவரால் வாய்ப்பும், வாழ்வும் பெற்றவர்கள், நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள். அவரைப் போல இன்னொரு மாமனிதர் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்கள். அரசியல் சூழ்ச்சியால் விஜயகாந்தை பரிகாசம் செய்து எள்ளி நகையாடியவர்கள் அனைவருமே மனம் வருந்தினார்கள். மானசீகமாக மன்னிப்புக் கேட்டார்கள். அதே சமயம் விஜயகாந்துக்கும் நன்மையே நடந்தது. தங்கமான இரு பிள்ளைகள், அற்புதமான மனைவி. கண்ணின் இமை போல விஜயகாந்தை பார்த்துக் கொண்டார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இணையத்தில் சொல்வதை நான் நம்பவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியை காலம் சரி செய்தது. கணக்குகள் நேர் செய்யப்பட்டன். அரசியலால் அவர் இழந்த பெயரை விடவும் பலமடங்கு அவர் பிம்பம் மக்கள் மனதில் உயர்ந்து விட்டது. இதோ இன்று அவரை காலம் எடுத்துக் கொண்டது. ஆனால் இன்று விஜய்காந்த் என்ற மாமனிதரின் மரணம் சரித்திர சம்பவமாகி விட்டது. முதல்வர் அல்லாத ஒருவருக்கு கூடிய கூட்டம், இதுவரை தமிழகம் காணாதது. இனியும் ஒருவருக்கு இப்படியான கூட்டம் கூடுமா என்பதும் கேள்விக்குறி. இனி காலம் விஜயகாந்தை நல்ல நண்பராக, நல்ல மக்கள் தலைவனாக, நல்ல மனிதராக, வள்ளலாக மட்டுமே நினைவு கூறும். இது தான் காலத்தின் கணக்கு.
சிவப்பு மல்லி படப்பிடிப்பில் விஜயகாந்த் காட்டிய சின்சியாரிட்டி
சிவப்பு மல்லியை விஜயகாந்த் ஒப்புக் கொண்டபோது வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படப்பிடிப்பை சேலத்தில் முடித்துவிட்டு, மாலை மதுராந்தகத்தில் நடக்கும் சிவப்பு மல்லி படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
1981 வெளியான சிவப்பு மல்லி பலவகைகளில் முக்கியமான திரைப்படம். சிவப்புச் சிந்தனையை திரையில் உரக்கச் சொன்ன ஆரம்பகால படங்களில் சிவப்பு மல்லி முக்கியமானது. ஏவிஎம் சரவணன், அவரது சகோதரர் பாலசுப்பிரமணியம் இணைந்து படத்தை தயாரித்தனர்.
சிவப்பு மல்லியை தயாரித்தது ஏவிஎம் என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாததற்கு காரணம், ஏவிஎம் பேனரில் படத்தை அவர்கள் தயாரிக்கவில்லை. பாலசுப்பிரமணியம் அண்ட் கம்பெனி என்ற பெயரில் தயாரித்தனர். ஏன் ஏவிஎம் பெயரில் தயாரிக்கவில்லை என்பதற்கான காரணம் அவர்கள் இருவருக்குமே தெரியும். சிவப்பு மல்லி கம்யூனிஸ சித்தாந்தத்தை முன்வைக்கும் படம், எதற்கு வம்பு என்று ஏவிஎம் பெயரை தவிர்த்திருக்கலாம் என்ற பேச்சு இப்போதுவரை உள்ளது.
ஆடல், பாடல், சென்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் அல்லது குடும்ப சென்டிமெண்ட் திரைப்படங்கள் என படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த ஏவிஎம் திடீரென சிவப்புச் சிந்தனைக்கு தாவியது பலருக்கும் வியப்பை அளித்தது. அதற்கு காரணம், 1981 மே 1 தொழிலாளர் தினத்தன்று தெலுங்கில் வெளியான எர்ரா மல்லேலு (சிவப்பு மல்லி) என்ற திரைப்படம்.
இதன் கதையை எழுதியவர் நடிகரும், கதாசிரியரும், தீவிர கம்யூனிஸ்டுமான மதல ரங்கா ராவ். முதலாளிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இரு கம்யூனிஸ சித்தாந்த தோழர்களைப் பற்றிய இப்படம் ஆந்திராவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சிறந்த திரைப்படத்துக்கான மாநில அரசின் நந்தி விருதையும் வென்றது.
advertisement
தொழிலாளர் பிரச்சனை உலகம் முழுக்க உள்ள சர்வதேசப் பிரச்சனை. தமிழில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றதும், ஏவிஎம் எர்ரா மல்லேலு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது. அந்த வருட ஆரம்பத்தில் (பிப்ரவரி 14) விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஒரு படத்திலேயே அநியாயத்தைக் கண்டு பொங்கும் கோபக்கார இளைஞன் என்ற பிம்பம் விஜயகாந்த் மீது படிந்தது. சிவப்பு மல்லியின் பிரதான வேடத்திற்கு இவர்தான் சரியான ஆள் என்று விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது ஏவிஎம்.
advertisement
மே 1 வெளியான எர்ரா மல்லேலு படத்தின் உரிமையை வாங்கி, அடுத்த மாதம் ஜுன் 20 சிவப்பு மல்லியின் பூஜையை நடத்தினர். படத்தொடக்க நாளிலேயே வெளியீட்டு தேதியை அறிவிப்பது ஏவிஎம்மின் வழக்கம்.
சிவப்பு மல்லி ஆகஸ்ட் 15 வெளியாகும் எனவும் அறிவித்தனர். அதாவது 56 நாள்களில் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன், சென்சார் அனைத்தும் முடிந்து படம் திரைக்கு வந்தாக வேண்டும். இதில் படப்பிடிப்பு தினங்கள் 35 நாள்கள்.
இப்படி இரவுப் பகலாக நடித்து சிவப்பு மல்லியை முடித்து, ஏவிஎம் அறிவித்த அதே ஆகஸ்ட் 15 படம் வெளியாக உதவியிருக்கிறார். இதற்கு பிரதான காரணமாக இருந்த இன்னொருவர் சிவப்பு மல்லியின் இயக்குனர் இராம.நாராயணன்.
குறுகிய காலத்தில் ஒரு திரைப்படத்தை முடிப்பதில் இராம.நாராயணன் வல்லவர். ஆகஸ்ட் 15 வெளியான சிவப்பு மல்லி இங்கேயும் வெற்றிக்கனியை பறித்தது.
கருத்துரையிடுக