திங்கள், 15 டிசம்பர், 2025

CINEMA TALKS - HITMAN 2024 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



மற்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்கும்போது 2024-ல வந்த HIT MAN படம் ரொம்ப வேற லெவல். ரிச்சர்ட் லிங்க்லேட்டர் டைரக்ட் பண்ணி, கிளென் பவெல் ஹீரோவா நடித்திருக்கிறார். கதை என்னன்னா, கேரி ஜான்சன் அப்படின்னு ஒரு சோஷியாலஜி, சைக்காலஜி ப்ரொஃபசர். அவன் சாதாரணமாக கிளாஸ் எடுத்து, பூனைகளோட சும்மா இருக்கிறான். ஆனா போலீஸ் கிட்ட சின்ன சின்ன வேலை பண்ணுறான்  “ஹிட்மேன்” மாதிரி வேடம் போட்டு, கொலைக்காரரை வாடகைக்கு எடுக்க நினைக்கிறவர்களை சிக்க வைக்கிறான். அவன் வேடம் போடுற ஸ்டைல், குரல், காஸ்ட்யூம் எல்லாம் செம்ம. அதுவே அவனுக்கு ஒரு யாருக்கும் சொல்லாத ரகசிய திறமையை மாதிரி இதனை எடுத்துக்கொள்ளலாம் அந்த வேலையில அவன் மேடிஸன் அப்படின்னு ஒரு கியூட் ஆன பெண்ணை சந்திக்கிறான். அவள் கொடுமைக்கார வீட்டுக்காரரை-ஐ விட்டு வெளியேறணும் என்று நினைக்கிறாள். அவளை சிக்க வைக்காமல், கேரி அவளோட சீரியஸ்சாக லவ் பண்ணி ஒரு நல்ல காதலனாக ஆகிறான். அங்கிருந்து எக்கச்சக்கமாக ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பிக்குது. ஆனா இதே நேரம், போலீஸ் வேலையும், காதலும் கிளாஷ் ஆகுது. கேரி, அவளை பாதுகாப்பு  பண்ணணுமா இல்ல போலீஸ் கடமையை பண்ணணுமா என்று குழப்பப்படுகிறான். படம் மொத்தமாக காமெடி ரொமான்ஸ் மிஸ்ட்டரி போல நிறைய காட்சிகளை இணைத்து பண்ணி, சராசரி படங்களை விட கொஞ்சம் புதுமையான யோசனைகளை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் கொஞ்சம் புதுமையாக முடித்து இருப்பார்கள், கண்டிப்பாக பாருங்கள் !! இந்த படத்தை பெரியவர்கள் மட்டும் பார்ப்பது நல்லது !! 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...