டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
ஆனால் பின்னர் மீண்டும் மீண்டும் வரும் அரைத்த மாவை அரைக்கும் கதைச்சரங்கள், படத்தின் கதையில் குழப்பமான காலவரிசைகள், குறையும் பார்வையாளர்களின் ஆர்வம் ஆகிய காரணங்களால் வீழ்ச்சியடைந்தது.
டெர்மினேட்டர் திரைப்படங்களின் எழுச்சி ஜேம்ஸ் கேமரன் இயக்கிய தி டெர்மினேட்டர் (1984) மூலம் தொடங்கியது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த அறிவியல்-திகில் திரைப்படம், டேக்னாலஜி பயம், அதிரடி சண்டை காட்சிகள், எதிர்காலக் கற்பனைகளை இணைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
அதன் வெற்றியை டெர்மினேட்டர் - ஜட்ஜ்மென்ட் டே (1991) மேலும் உறுதிப்படுத்தியது. இந்த படம் அர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கரை உலகப் புகழுக்கு கொண்டு சென்றதோடு, முன்னோடியான CGI தொழில்நுட்பம், ஆழமான உணர்ச்சி, விதி மற்றும் மனிதத்துவம் பற்றிய சிந்தனையை இணைத்தது.
இந்த தொடர், செயற்கை நுண்ணறிவு பற்றிய தத்துவக் கேள்விகளையும், வணிக வெற்றியையும் இணைத்து, டெர்மினேட்டரை தொழில்நுட்பத்தின் பயமும் கவர்ச்சியும் கொண்ட கலாச்சாரச் சின்னமாக மாற்றியது.
டெர்மினேட்டர் தொடரின் வீழ்ச்சி டெர்மினேட்டர் - தி ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ் (2003) மூலம் தொடங்கியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், முன்னோடியான படங்களின் தனித்துவத்தைப் பிடிக்க முடியவில்லை.
பின்னர் வந்த டெர்மினேட்டர் சால்வேஷன் (2009), டெர்மினேட்டர் ஜெனிஸிஸ் (2015), டெர்மினேட்டர் டார்க் ஃபேட் (2019) ஆகியவை குழப்பமான காலவரிசைகள், பழைய படங்களின் சண்டை காட்சி நினைவுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், மற்றும் கதைக்கு ஏற்க பாத்திர வளர்ச்சியின் குழப்பமான முரண்பாடுகள் காரணமாக தோல்வியடைந்தன.
பார்வையாளர்கள் தொடர்ச்சியான ரீபூட்கள் மற்றும் கதைக் குழப்பங்களால் சோர்வடைந்தனர். விமர்சகர்கள், தொடர் தனது ஆழமான கருத்துக்களை இழந்து, வெறும் காட்சித் திகிலாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டனர்.
ஒவ்வொரு முயற்சியும் அர்னால்டின் நடிப்பையும், பழைய படங்களின் நினைவுகளையும் நம்பியது. ஆனால், புதிய தனித்துவம் இல்லாததால், டெர்மினேட்டர் ஒருகாலத்தில் புரட்சிகரமான தொடராக இருந்தது, பின்னர் கதை சொல்லலால் சோர்வடைந்த பார்த்தால் சலிப்பாக இறக்கும் எச்சரிக்கை கதையாக மாறியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக